Tuesday, October 17, 2017

மூவேந்தர் யார்? பகுதி-4

மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்

மூவேந்தர் யார்? என்ற நூலைப் படித்த பாளையங்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒரு பிராமண அன்பரின் பாராட்டுக் கடிதம். 
15.10.97

அன்பும் பெருமதிப்பும் மிக்க ஐயா!
      வணக்கம் தங்கள் மூவேந்தர் யார்? என்ற நூலினை வாசிக்க அறியக் கிடைத்த சம்பவம் எனக்கு ஓர் அரிய வாய்ப்பாய் அமைந்தது. தங்கள் ஆராய்ச்சி செய்த இந்த நூலின் பின்னணிகள் நொந்து நூலாய்ப் போன சமுதாயத்திற்கு ஓர் ஆறுதல் மட்டுமின்றி ஓர் விழிப்புணர்வு ஏற்பட அறவழியில் அமைக்கப் பெற்ற அருமையான ஓர் கருவி. இந்த நூலை வாசித்து அறியக்கிட்டியதற்கு உங்களுக்கு மீண்டும் எனது நன்றி! உங்கள் பணி சிறப்புடனே என்றென்றும் தொடர எனது உள்ளம் விரும்புகிறது. வாழ்த்த வயது எனக்கில்லை உங்களை வணங்குகிறேன்.
நன்றி பலகோடி
அன்புள்ள 
க. சுப்பிரமணியன்


மறுபதிப்பு முன்னுரை
மூவேந்தர் யார்? நூல் 1977 ஜூலைத் திங்களில் முதன் முதல் வெளிவந்தது. அதில் வேளாளர் பற்றிக் கண்டுள்ள செய்திகள் சிறிது சர்ச்சைக் குறியது என நூலுக்கு அணிந்துரை நல்கி உதவிய டாக்டர் கி.ர. அனுமந்தன் கூறியதால், அதை விளக்கும் பொருட்டு மூவேந்தர் யார்? நூலில் வேளாளர் பற்றி வரும் பகுதியை விரிவுபடுத்தி வேளாளர் யார்? என்ற தலைப்பில் 1981 ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது ஒரு தனிநூல் வெளிவந்தது. பல்வேறு காரணங்களால் மூவேந்தர் யார்? நூல் முழுவதையும் மறுபதிப்புச் செய்ய இயலவில்லை. சென்ற 1991 டிசம்பரில் அதன் முற்பகுதி பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் வெளியானது. தற்போது நூலின் மையப்பகுதி 'மூவேந்தர் யார்?’. (திருந்திய பதிப்பு) என்ற தலைப்பில் வெளிவருகின்றது. தேவேந்திர குலத்தார் எவ்வாறு தாழ்த்தப்பட்டனர்? என்ற கடைப் பகுதி ஒரு தனி நூலாக இனி வெளி வரவேண்டும். இது விரைவில் வெளிவருவது பொது மக்கள் இந்நூலுக்கு நல்கும் வரவேற்பைப் பொறுத்தது ஆகும்.
சாதி ஏற்றத்தாழ்வு தமிழக வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் விளைவே என்பதை, எனது மேலே கண்ட நூல்களைப் படித்தோர் அறிவர். மூவேந்தர் யார்? வேளாளர் யார்? இரு நூல்களும் தோன்றிப் பல ஆண்டுகளாகியும், தமிழறிஞர் மற்றும் வரலாற்றாசிரியர் போக்குகளில் எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை. அவர்கள் தங்களின் பழைய பாணியிலேயே நூல்களைப் படைத்து வருகின்றனர். ஒரு சிலர் பள்ளர் உழுப்பறையரிலிருந்து விசயநகர ஆட்சியின் போது பிரிந்தவர் என எழுதிவர முன்வந்துள்ளனர். பொய் ஒன்றையே சொல்லி மக்களை வஞ்சித்து ஏமாற்றிச் சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு உயர் இடத்தைப் பிடித்துள்ளவர் தங்களின் இன்றைய சமுதாய நிலைக்கு ஊன் விளைவிக்கும் செயல்களில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வர்? ஏன் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வரலாற்றுக் குழுவும் இதற்கு விதி விலக்கல்ல. அக்குழு எழுதி வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் வாழ்வியல், அரசியல் என்ற நூல்களில் மள்ளர் மல்லர் இடம் பெறவில்லை. அவரது இடத்தில் இன்றைய வேளாளர், மறவர் பேசப்படுகின்றனர். இந்த வரலாற்றுக்குழுவின் செயல் பற்றித் தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் முந்தையப் பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் நூலில் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டுள்ளது காண்க.
இதுவரை ஆழ்ந்த நித்திரையிலிருந்த தமிழினம் இன்று சற்று விழித்திருக்கின்றனர் என அறிகிறேன். இவர் ‘ஏமுற்றுக் களித்த மள்ளர்’ (புறம் 84.5) அல்லவா? (நம்மை யார் என்ன..செய்ய முடியும்? என இறுமாத்து இருந்தவர்) சொல்லின் செல்வர் R.P.சேதுப்பிள்ளை கூறுவார்; 'தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அதற்கு ஒரு திறன் உண்டு. முன்னாளில் அது தலைசிறந்து விளங்கிற்கு. மன்னும் இமயமலை எங்கள் மலையே என மார்தட்டிக் கூறினான் தமிழன். கங்கையும் காவிரியும் எங்கள் நதியே என்று இறுமாந்து பாடினான் தமிழன். பஞ்சநதிபாயும் பழனந்திருநாடும் எங்கள் நாடே என்று நெஞ்சம் நிமிர்ந்துப்பேசினான் தமிழன். உயர்ந்தவர் தாழ்வர், தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை இந்த முறையில் படிப்படியாய்த் தாழ்ந்தான் ஆயினும் தமிழர் வீரம் அறவே அழிந்து விடவில்லை. வீறு பெற்றுத் தமிழர் தலையெடுக்கும் காலம் விரைந்து வருகின்றது. (தமிழர் வீரம்).
அக்காலம் இதோ வந்துவிட்டது எனலாம். எனது நூல்களுக்கு மக்களின் ஆதரவு பெருகிவரக் காண்கிறேன். சில அன்பர்கள் குறிப்பாக நெல்லை மாவட்டம் குறும்பூர் ஆணையப்பபிள்ளைச்சத்திரம் திரு N.குலசேகர பாண்டியன் மற்றும் கோவை தேவேந்திரர் சங்கத் தலைவர் Er. Dr. G. சித்தன், B.E. M.Sc., (Egg) Ph.D. (U conn. U.S.A.) எனது நூல்களைப் பரப்புவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பாராட்டிற்குரியதாகும். நூலில் பல அறிஞர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாண்டிருக்கின்றேன். அவ் அறிஞர்களுக்கும் சம்மந்தப்பட்ட பதிப்பகத்தார்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நூலின் கைப்பிரதியை அச்சேறுவதற்கு வசதியாக் திரு. அன்பழகன், B.A., படி எடுத்து உதவினார் என்பதை நன்றி உவகையோடு இங்கு கூறிக்கொள்கிறேன். நூலை விரைவில் அச்சேற்று உதவிய தஞ்சை ஜெமினி அச்சகத்தார்க்கும் எனது நன்றி.
வாழ்க மூவேந்தர்
வாழ்க திராவிடர் 
வாழ்க  நம் தாய்த்திருநாடு
தஞ்சை: 
12.10.92 இரா.தேவஆசீர்வாதம்


முன்னுரை

மூவேந்தர் மரபு பற்றி மூவேந்தர் யார் நூல் முதன் முதல் 1977 - ல் வெளியானது. பின்னர் அதன் ஒரு பகுதி வேளாளர் யார்? என்ற தலைப்பில் 1981 - ல் வெளியானது. முதல் நூலின் முற்பகுதி பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் (மூவேந்தர் முற்பகுதி) என்ற தலைப்பில் 1991 - ல் வெளியானது. பின்னர் முதல் நூலின் மையப் பகுதி மூவேந்தர் யார்? (திருந்திய பதிப்பு) என்ற தலைப்பில் 1992 - ல் வெளியானது. 1977 - ல் வெளியான மூவேந்தர் யார்? நூலின் கடைப்பகுதியான தேவந்திர குலத்தார் எவ்வாறு தாழ்த்தப்பட்டனர் என்பது இருபாகங்களாகப் பிரித்து அதன் ஒரு பகுதி தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் வீழ்ச்சி என்ற தலைப்பில் 1998 - லும் எஞ்சிய பகுதி தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் தாழ்நிலை எய்தல் என்ற தலைப்பில் 2000 - லும் வெளியாயின. மேலே கண்ட நூல்களில் 1981 - ல் வெளியான வேளாளர் யார்? என்ற நூலும் 1992 - ல் வெளியான முவேந்தர் யார்? (திருந்திய பதிப்பு) நூலும் தீர்ந்து பல ஆண்டுகளாகின்றன. அவற்றில் மூவேந்தர் யார்? திருந்திய பதிப்பு மறுபதிப்பு தற்போது வெளிவருகின்றது.
கடைசியாய் வெளியான தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் தாழ்நிலை எய்தல் நூல் விநியோகிப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர் ௸ நூல் வெளிவர மூலகாரணமாய் இருந்த ஒய்வு பெற்ற கண்காணிப்புப் பொறியாளர் உயர்திரு P. சுப்பையா B.E., அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நூல் அச்சேறவும் நகல் பிழைதிருத்தி நூல் வெளிவரக் காரணமாய் இருந்தவர் அன்னார் அவர்களே. நகல் பிழை திருத்துவதில் அவர்களின் மகள் திருச்செல்வி வதனா M.A., என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அவர்களுக்கு எனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதிபலன் இல்லாது சமுதாய நோக்கோடு இவர்கள் செயல்பட்டதற்கு சமூகம் கடன் பாடுடையதாகும் எனில் அது மிகையாகாது.
மூவேந்தர் மரபு பற்றிய நூல்களை எழுதுவதில் ஆரம்பத்திலிருந்து என்னை ஊக்கப்படுத்தியவர்கள் கோவை மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் சி. மாரிமுத்து M.D., D.C.H., அவர்களும் அவர்களின் துணைவியார் திருமதி அன்னத்தாய் அவர்களும் என்பது


குறிப்பிடத்தக்கது ஆகும். அண்மைக்காலமாய் டாக்டர் எஸ். கருப்பசாமி M.S., D.I.O., அவர்களும், திரு. ஆர். கிருத்துவதாஸ் காந்தி I.A.S., அவர்களும், எனது நூல்களை விநியோகம் செய்ய ஊக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் உதவியை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
எனது நூல்கள் இன்னும் சரியாய் மக்களிடம் பரவவில்லை. அதற்குக் காரணம் சமூகத்தில் உள்ள உயர்நிலையில் உள்ளவர்கள் தக்க ஊக்கம் காட்டாதது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலாவது அவர்கள் சமூக உணர்வு கொண்டு சமூகத்தில் விழிப்புணர்வும் அதன் மூலம் எழுச்சியும் ஏற்ப்டுத்த ஆவண செய்வார்கள் என நம்புகின்றேன். வேளாளர் யார்? மறுபதிப்பு வெளிவருவது சமூகம் இந்த நூலுக்கு அளிக்கும் ஆதரவைப் பொறுத்தது ஆகும்.

இந்த நூலை மிகவும் குறுகிய காலத்தில் நல்ல முறையில் அச்சிட்டு உதவிய சென்னை ஆர். என். ஆர். அச்சகத்தாருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வாழ்க தமிழர்
வாழிய நம் தாய்த்திருநாடு 
தஞ்சை, 
14.01.2002 
இரா. தேவஆசிர்வாதம்


ஆசிரியர் பிற வெளியிடுகள்
1. மூவேந்தர் யார்? ஜீலை 1977 
2. வேளாளர் யார்? ஜனவரி 1981 
3. பள்ளர் அல்ல மள்ளர்
    ஆம் மன்னர் டிசம்பர் 1991
4. மூவேந்தர் யார்?
   (திருத்திய பதிப்பு) அக்டோபர் 1992 
5. தமிழ் மூவேந்தர்
    மரபினரான டிசம்பர் 1998
    தேவேந்திரர் வீழ்ச்சி 
6. தமிழ் மூவேந்தர் 
    மரபினரான தேவேந்திரர் 
    தாழ்நிலை எய்தல் டிசம்பர் 2000

பொருளடக்கம் 
மூவேந்தர் யார்? அணிந்துரை  

மூவேந்தர் யார்? முன்னுரை  

மூவேந்தர் மரபு பற்றி டாக்டர் K.K. பிள்ளையுடன் ஆசிரியர் நடத்திய கடிதப் 
போக்குவரத்து 

மூவேந்தர் யார்? வேளாளர் யார்?
நூல்கள் பற்றிய மதிப்புரைகள்  

மறுபதிப்பு முன்னுரை  

இரண்டாம் பதிப்பு முன்னுரை  

ஆசிரியரின் பிற வெளியீடுகள்  தமிழகத்தின் பண்டையநிலை  

மூவேந்தர் யார்? 

திராவிடர் யார்?  

சங்ககால மக்கள் பிரிவு  

அரசு தோன்றிய இடம்  

தலைமக்கள் 

மள்ளர் - மல்லர் யார்?  

திராவிடராகிய மூவேந்தர் 
இன்றையப் பள்ளரே  

தேவேந்திர குலம் 

பள்ளர் குடியிருப்பு அமைப்பு  

பள்ளர் பாராட்டும் 
மன்னர்க்குரிய உரிமைகள்  

குலப்பட்டங்கள் 

பின்னினைப்பு :
(i) கடைஞர் - (கடையர்) 
(ii) சங்ககாலத்தில் மள்ளர் என்ற பெயருடைய புலவர்களும் அவர்கள்  இயற்றிய                        பாக்களும் 
(iii) கள்ளர், மறவர், அகம்படியர் மற்றும் பல மரபினரின் சராசரி உயரம், மார்பு அளவு ,               எடை முதலிய 147 விபரங்கள்

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-3


மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

Moovendar - Race
[Letter Correspondence by the author with Dr. K.K. Pillay (Historian) On Moovendar race]

From :
R. DEVA ASIRVATHAM, 
Thanjavur
180, Yagappa Nagar 
4-5-1976. .
TO : 
Dr.KK.PILLAY, 
Retired Professor & Head of the 
History Department, 
Madras University,
Chepauk, Chennai - 5

Dearsir,

I had occasion to go through your work “தமிழக வரலாறு; மக்களும் பண்பாடும்” at page 399 of which, it is mentioned that a quarrel arose between Devendra kudumbars and Parayars over the use of certain privileges and as a result of the same, the Parayars were conferred certain privileges like the use of white elephant, white parasol, sixteen pillars pandal, eighteen musical instruments etc. I feel the matter has been misreported. According to Karivalam Vandanallur temple inscription, the above privileges belonged to Devendra Kudumbars from time immemorial and that Tirumalai Nayakkan just recognised the same after verifying old copper plates and as regards the Parayars, he conferred on them a few privileges like the use of three pillars Pandal, orie Kodukku, one marappu etc. Prof. K.R. Hanumamthan, Head of the History Department, Presidency College Chennai, has also mentioned like that in his work "Untouchability in Tamillagham', a thesis submitted to the Madras University for Ph.D. I hope thé facts will be verified again and error if any corrected when reprint of the work is taken up.

I am making a study about the Moovendar race and according to my findings, Devendra kula velalars whom the caste people contemptuously call as pallans and who figure as Mallars in the Sangam literature are the people who produced the Chera, Chola, Pandya Kings both during the Sangam and the latter period. This is just for your information.
With regards.
Your's Sincerely, 
(Sd.) R.D. Asirvatham.


K.K. Pillay, M.A., D.Litt., D.Phil (Oxon), 
Institute of Traditional Cultures, 
Director. University Buildings, Chennai - 5.
15-5-76. 

Sir,

     I thank you for your letter of 4 – 5 - 76, I am sorry for the delay in replying to your letter. I was out ọf station for a time. I am much interested in the question raised by you; viz the conflict between the Devendra Kudumbar and Parayar. My informationis based on records in the Tamil Nadu State Archives Egmore. But if more reliable information is available. I shall be happy to look into it. Kindly let me know the Epigraphic report in which the concerned Karivalam Vandanallur temple inscription is published. I am interésted in writing the social history of the Tamils in an objective manner. Therefore any new and authentic piece of information is welcome.

I would also like to know the connection between the Dévendra Kula Velalar and the Chera, Cholas Pandyas of the Sangam period. 
Thanking you, 
Please reply me, 
Your's Sincèrely, 
(sd) KK. PILLAY



From : 

R. DEVA ASIRVATHAM, 
Thanjavur
180, Yagappa Nagar 
24-5-1976. .
TO : 
Dr.KK.PILLAY, 
Institute of Traditional Cultures
University Buildings, Chennai - 5.



Dear sir,


         Recived your letter dated 15 - 5 - 1976. For Karivalam Vandanallur Culvert, you may please refer to inscription No. 432 / 1914, published in the South indian inscriptions Part II (Tinnevelly District, Sankaranarayanar Koil Taluk) .Devendra Kudumbars or Devendra Kula Velalars are none - else than Mallars, the people of Marudanilam, who founded the three Tamil Kingdoms - Chera, Chola, Pandyas and after the Kalabhra interregnum, they again came to power. After subjugation by the Vijayanaga rulers, they were persecuted and degraded as Pallars by the composition of a large number of pallu songs. The poligar system was introduced only with a view to depriving these people of their land holdings. Because of their liberality, these people were called as velalars and in latter medieval period as Vellalars. When Various sections drawn from Kurinji, Mullai and Neidal regions, who gained in soial status began to style themselves as Vellalars, the original Vellalars assumed the title of Devendra Kulathar - Devendran, Indran, Purandaram all meaning Vendan, the god of Marudanilam. All the Tamil Scholars have deliberately distorted the literature and grammar etc., with the result, historians have not hither to been able to find out the tribe which ruled over Tamil Nadu during the Sangam and the latter period. Historians are confusing themselves with the words Maran Tirayan and Vanavan.

All the Tamil kings were from Mallars only. The study about Mallars has been neglected by scholars. This tribe should have been responsible for the Harappa Civilisation. They have offered resistance to Alexander. They had a republican form of Government during Buddha's period and Buddha is said to have breathed his last in the kingdom of the Mallars. In Nepal also, the Mallars were in power till in 17th century A.D. or so. Whether the Harappa and Adichanallur Civilisation were simultaneous or one preceded the other, is a matter for study by research scholars.
After overthrow by the Nayaks, Devendrakula Velalars were suppressed and oppressed and they being deprived of thier holdings, in effect became agricultural serfs. In these days Parayars were set up to spite them and so the conflict between the two sections.
Your's Sincerely, 
(Sd.) R.D. Asirvatham.


Institute of Traditional cultures
K.K. Pillay, M.A., D.Litt., D.Phil (Oxon) Room'No.94, University M.A., D.Litt., 
No.190 / 2 / PP / 76-1 Buildings,
Director. Chennai-600 005.
Dated 127-1976

Dear Thiru Deva Asirvatham :
I thank you for your interesting letter. I do hope that you would make a detailed research on Devendra Kula Vellalars and Mallars and publish a correct documented treatise embodying your conclusions.
With regards. 
Your's Sincèrely, 
(sd) KK. PILLAY

Review of Moovendar Yaar? by the Indian Express (March II, 1978)
The three Tamil monarchs, Chera, Chola and Pandya of yore had a very hoary origin dating back to the pre - Sangam age say two to three thousand years B.C. The author of this book tries, to trace their origin to the three very ancient Tamil people called Mallar or Pallar who were agriculturists by profession and the first builders of cities, towns and kingdoms on river banks. These aborigins were later reduced to the state of serfs under the Telgu and Muslim rulers. They were also known by the name of Devandra Kudumbars or Devendra Kula Velalars who were the founders of the Chera, Chola and Pandya Kingdoms and who came to power again after the Kalabra interregnum. The Poligar system introduced by the Vijayanagar rulers deprived these people of their land holdings and they were, reduced to abject poverty. Being originally inhabitants of the Marudam tract or fertile agricultural land they worshipped Indra (also known as Vendan. Devendran, Purandaran etc.) the Lord of the region and called themselves Devendra Kulathaar. The author charges literature with deliberately attempting to distort historical facts to suppress the truth about the original tribes which ruled Tamil Nadu during the Sangam age and the later period and asserts that all the Tamil Kings were Mallars only who were also responsible for the Harappan civilisation. They met with their fall from the 16 th century A.D. These people were not only agriculturists but also warriors. The author believes that Pandavas of Hastinapur belonged to this ancient tribe.
The compendious name of Thevar, meaning Indra's descendents for the three Tamil group Kallar, Maravar and Ahamudayaar, is derived from the fact that these groups were the progenies of Indra through Ahalya, wife of Gautama. These are interesting points made out by the author. His thesis gives much food for thought and grist for controversy too.
R. Kristinamoorthy.
Review of Vellalar Yaar? by the Indian Express (December, 19. 1981)
There are different theories about the origin of Tamils especially those who occupied the Pandya country. One school of scholars say that they descended into upper India from China via the Himalayan passes and occupied a territory with their capital in a place known as Tamra - lipti or Tamluk in Bengal from which they derived the name of Tamils. They moved further down south. As they were the first to colonise the country. they came to be known as "Pandayar" or old colonialists. Still others claim that they were the original inhabitants of the country. Similar controversies exist about the origin of Vellalars, an ancient Tamil community. Some say that they are Dravidians, while others claim that they came from the Gangetic plains. The book, under review, written by an author whose earlier work on the three Tamil kings, caused. many eyebrows to be raised, presents an extensive study about the origin customs and habits of Vellalas.

First he presents the view of authors like Nelson, Caldwell and others about the origin of Vellalars. Nelson claims that they were foreign immigrants who were introduced by Pandyas into the Tamil country. Caldwell says that the original inhabitants of the Tamil Country cultivated only, dry grains and ate these grains and animals hunted by them. The Vellalars, who derived the name by their being good in controlling floods and using it for irrigation, introduced cultivation of rice in these lands.
Next he discusses the Puranic episode about the Viswakarma community and the theory that Vellalas came from the Gangetic plain. The claim that Vellalas and Ballalas of Karnataka and Velammas of Andhra Pradesh are the same is refuted by the author. He concludes that the original Vellalas of the Tamil lands were the Mallas or Pallas who cultivated lands.
The author also presents details about various sub - sections among Vellalas of the present day and concludes that they are a mixed race. He says that all people employed by Pandya Kings to help them in day – to - day administration proclaimed themselves as Vellalas. He also refutes the theory of Maraimalai Adigal that the term Vellalas refers to a particular group of people who were strict vegatarians.
The author, a former Deputy Collector has extensively quoted the views of foreign and Indian writers and also from ancient classics to support his views. The book which presents an extensive study on the subject is worth reading by all. - TAS.
(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-2

மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
                                                                               
ஆசிரியரின் முன்னுரை
(1977 - ல் வெளியான மூவேந்தர் யார்?)

தமிழகத்தை இடைக்காலம் வரை சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் ஆண்டனர் என்பது யாவரும் அறிந்ததே. இவர் யார்? இவர் மரபினர் தமிழகத்தில் இன்று இருக்கின்றனரா? இதுவரை தமிழக வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் வரலாறு, தமிழ் ஆராய்ச்சி, தமிழர் பண்பாடு, நாகரிகம், சேரர் வரலாறு, சோழர் வரலாறு, பாண்டிய வரலாறு எனப் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவைகள் சிலவற்றில் மூவேந்தரை முறையே வானவன், திரையன், மாறன் எனவும், நெருப்பு, சூரிய, சந்திரகுலம் எனவும் பலவாறு கண்டிருக்கின்றனர். தமிழகத்திலும் சேர நாடாகிய கேரளாவிலும், பல பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதுவும், அவற்றிலிருந்து பலர் வரலாறு, தமிழ் இலக்கியம் இவற்றில் ஏதாவது ஒரு பொருள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்று வருவதுவும் கண்கூடு. பல்கலைக்கழகங்களை விடுத்து, தமிழகத்தில் அனேகப் புலவர் கல்லூரிகளும், பெரும் தமிழ்ப்புலவர் பலரும் இருந்து வருவதுவும் நாடறியும். ஆனால் இவரில் ஒருவரேனும், மூவேந்தர் மரபு பற்றி முறையான ஆய்வு மேற்கொள்ள இதுவரை முன்வராதது வியப்பைத் தருகின்றது.
தமிழ் வேந்தர் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கோலோச்சியிருக்கின்றனர். இம்மன்னர் தனி மனிதர் அல்ல. இவர் ஒரு பழம்பெரும் குடியைச் சேர்ந்தவர். தமிழகத்தில் விசயநகரப் பேரரசோடு. நடந்த இடைவிடாத போர்களில் இவரும், பெரும்பாலான இவரது மரபினரும் மடிந்திருப்பர்; போர்களில் ஈடுபடாதவரில் பலரும் மாற்றானுக்கு அடிமைப்பட்டு வாழ்வதைவிட, உயிர் விடுவதுமேல் எனக் கருதித் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் மாய்த்து மண்ணோடு மண்ணாய் மறைந்திருப்பர். எனினும் இம்மரபினர் முற்றிலும் தடமற அழிந்திருப்பர் எனக் கருத முடியாது. இவரில் ஒரு சாரார் எங்ஙணமாவது எஞ்சி, ஏதோ ஒரு மரபுப்பெயருடன் இன்று நாட்டில் உலவி வர வேண்டும். புதுக்கோட்டைத் தொண்டைமான் யார்? எனில் வடுகன்; இராமநாதபுரம் சேதுபதியார்? எனில் மறவர் எனக் கூறுவது நாம் அறிந்ததே. அதே போன்று, மூவேந்தர் யார்? எனில் அவருக்கு ஒரு மரபு கூறுவேண்டும். மாறாக அவர் யாரோ? எவ்ரோ? என்று பதிலிறுப்பது உண்மையை மூடிமறைப்பதாக அமையும். இவர் மரபு திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது என்பது மட்டும் உறுதி. வரலாற்றை மறைப்பது முறைகேடானது. விவேகமற்றது. பொய்யை மெய்யாகத் திரித்துக் கூறும் பழக்கம் இடைக்காலத்திலிருந்து நாட்டில் மலிந்து வந்திருக்கின்றது. அன்று நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று முழக்கமிட்ட புலவர் எங்கே? இன்று பொய் ஒன்று தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே என்று கூறும் மனோபாவமுள்ள புலவர் குழாம் எங்கே? தமிழகம் அன்னியர் ஆக்கிரமிப்பில் சிக்கியதன் விளைவாக, இங்குள்ள பல்வேறு பிரிவினரும், ஆரியப் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பெரிதும் தழுவி வந்திருக்கின்றனர். இக்காலத்தில் மனிதரை மனிதர் வஞ்சித்து ஏய்த்துப் பிழைக்கும் பழக்கம் வளர்ந்து வந்திருக்கின்றது. படிக்காதவரைவிடப் படித்தவரில் பெரும்பாலோர் பண்பாட்டில் கீழ்நிலையில் இருக்கின்றனர். இப்போக்கில் மாறுதல் வேண்டும் என்பதைச் சான்றோர் பலரும் விரும்புவர் என்பதில் ஐயம். பண்டையநாளில் தமிழர், யாதும் ஊரே! யாவருங்கேளிர்' எனவும் தனக்கென்று வாழாப் பிறர்க்கென வாழும் தகைமையாளர். என வாழ்ந்தனர் எனவும் மேடைகளில் பலரும் நாள்தோறும் முழக்கமிட்டு வருவதை நாடறியும். அவ்வாறு உயர்ந்த சீரிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய பெருங்குடிமக்களின் வரலாற்றை வெளிப்படுத்தினால், அது ஓரளவிற்கேனும் நாட்டிற்கு நலம் பயக்கும் என முடிவு கொண்டு, அம்முயற்சியில் பலகாலம் என்னை ஈடுபடுத்தி வரலானேன். அதில் நான் எவ்வாறு வெற்றிகண்டேன். என்பது பற்றி அடியிற் கண்டவரிகளை முன்னுரையாகப் படைக்கலானேன்.
தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு இவற்றிற்கு உறைவிடமாய் விளங்கியவர் உழவர். அவர் பண்டைய நாளில் ஏர்த்தொழிலுடன் போர்த்தொழிலும் ஆற்றி வந்தனர். அதன் காரணமாய் ஏரும் போரும் இணைபிரியாது என்ற தொடர்மொழி நாட்டில் வழக்கில் வந்தது என்பதை அறியலானேன். வள்ளுவர், உழுவான் உலகத்தார்க்கு ஆணி, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டுபின் செல்பவர் என்று கூறியிருப்பது மேலே கண்டகருத்து முற்றிலும் உண்மை என்பதைப் புலப்படுத்துவது காண்க. ஆகவே, தமிழகத்தை இடைக்காலம் வரை ஆட்சி செய்த தமிழ் மரபினர் உழவராக மட்டுமின்றிப் போர் மறவராகவும் செயல்பட்டனர் என்பது வெள்ளிடைமலை. இந்த இரு தொழில் செய்த மக்கள் இன்றையப்ப ல்வேறு பிரிவினருள் யாராய் இருப்பர் என்ற கேள்வி என்னை ஆட்கொண்டது.
உழவரில் சிறந்தவர் வயல் உழவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஆற்றோரங்களிலும், மற்றும் நீர்நிலைப் பகுதியிலுமே முக்கியமாய் வதியவேண்டும் என்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓடும் காவிரி, அமராவதி, பவானி, வைகை, தாம்பிரபரணி முதலிய ஆறுகளின் கரை மருங்குகளில் வயல் உழவில் முக்கியமாய் ஈடுபடுபவர் யார்? என்பது பற்றி அறிய முனைந்தேன். வயல் உழவில் ஈடுபடுபவரில் பெரும்பாலோர் பள்ளர், குடும்பர், தேவேந்திரகுலத்தார், காலாடி, பண்ணாடி என வழங்கும் மக்கள் பிரிவினர் எனவும், இவர் ஏர்த்தொழில் மட்டுமன்றிப் போர்த்தொழிலும் ஆற்றக் கூடிய வலு உள்ளவராகக் காணப்படுவதுவும், தங்களைத் தேவேந்திர குல வேளாளர் என உயர்வாகக் கூறிவருவதுடன், மற்ற மரபினர் போலன்றித்தனியாய்க் குருக்கள், நாவிதர், வண்ணார் உடையவராய் ஊரின் முக்கிய பகுதியாகிய கீழ்புறத்தில் குடியிருந்தும், தமக்கென்று தனியாய்ப் பஞ்சாய்த்து அமைப்புகள் உடையவராகவும், மற்ற மரபினரிடம் காணப்படாத தனித்தன்மை உடையவராகவும் இருந்துவருவதையும் தெரியலானேன். இவர் பராக்கிரம சாலிகள் என்பதையும் ஒருவரும் இவருடன் நேருக்கு நேர் சண்டையிட்டு இவரை வெற்றி பெறமுடியாது என்பதையும் உணர்த்தப் “பள்ளனையும் இரும்பையும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்” என்ற பழமொழி நாட்டில் நிலவிவருவதுவும். மாவட்டக் குறிப்புகளில், இவர் தாங்கள் தேவேந்திரன் வழி வந்தவர் என்றும், மற்ற எல்லா மரபினரையும் விட உயர்ந்தவர் என்றும் உரிமை பாராட்டி வருவதுவும், இவர் பற்றி மேலும் ஆராய என்னைத் தூண்டியது. “ஏழையின் குரல் அம்பலம் ஏறாது” என்பதற்கொப்ப, இவரது ஏழ்மை காரணமாய், இவரது கூற்றை மாவட்டக் குறிப்பு ஆசிரியர் ஏற்க மறுத்து, இவரை வெள்ளாளரின் பண்ணை அடிமைகள் எனக்கூறி வந்துள்ளனர். தென் இந்திய குலங்களும் குடிகளும் (Castes and tribes of Southern india) என்ற விரிவான அரிய நூலைப்படைத்த எட்கர் தர்ஸ்டன், 1891 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் H.A. ஸ்டுவர்ட் கூறிய கருத்து அடிப்படையில் இவரைப் பல்லவ மரபினராய் இருக்கலாம் என்று கூறுகின்றார்.
                                                                                     
பல்லவர் நாடு வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. தேவேந்திர குலத்தார் தென்மாவட்டங்களிலேயே காணப்படுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பள்ளு நூல்கள் இயற்றப் பட்டுள்ளதையும் அவை பெரும்பாலும் தென்மாவட்டங்களிலேயே தோற்றம்பெற்றன என்பதையும் அறியலானேன். எனவே பள்ளு நூல்கள் மீது கவனம் செலுத்தலானேன். இந்த நூல்களைப் பள்ளேசல்கள் என்றும் கூறுவர். தமிழகத்திலுள்ள வேறு ஒரு மரபினரையும் இழிவு படுத்த நூல்கள் புனையப்படாத போது, உழவுத்தொழில் செய்து வரும் ஒரு சமுதாயத்தை மட்டும் இழித்தும், பழித்தும் நூல்கள் பெருமளவில் தோன்றியது வியப்பை உண்டாக்கியது. பண்டையத் தமிழ் இலக்கியங்களில் உழவர் உயர்குடியினராகக் காட்சி தரும் போது, பள்ளேசல்களில் அவர் கீழ் சாதியாகவும், கொத்தடிமைகளாகவும் சித்திரிக்கப்படுவதைக் கண்டேன். இவர் இந்த இழிநிலை எய்யக் காரணம் என்ன? என்பது பற்றி ஆராய்ந்ததில், பள்ளேசல்கள் தோன்றியது நாயக்கர், மராட்டியர் தமிழகத்தை ஆட்சி செய்த காலப்பகுதி எனத் தெரிந்தது. ஆக நாயக்கர், மராட்டியர் தமிழர் அல்ல; அவர் வேற்று நாட்டினர். தமிழ் வேந்தர் ஆட்சியில் உயர் நிலையில் இருந்த உழவர் சமூகம், இவரது ஆட்சியில் கொத்தடிமை நிலை எய்தினர் என உணரலானேன். இம்மாற்றம் பற்றிச் சிந்தித்ததில், ஒருவேளை இவர் தமிழ்வேந்தர் மரபினர் என்பதால் அன்னியர் ஆட்சியில் அடிமை நிலை எய்தினரா? என்ற ஐயப்பாடு என் உள்ளத்தில் எழுந்தது. மேலும் பள்ளேசல்களில் இம்மரபினர் பள்ளர், பள்ளர் என்ற மள்ளர், தேவப்பள்ளர், தேவேந்திரப்பள்ளர், புரந்தரன் குலம் என்றும் மூவேந்தர் வேண்டுகோளின் மேல், இவரது குல முதல்வன் தேவலோகம் சென்று. அங்கிருத்து நெற்பயிரைக்கொண்டுவந்து தமிழகத்தில் பயிர் செய்தான் என்றும் குறிப்புகள் ஆங்காங்கு காணப்படுவதை அறியலானேன். மள்ளர் யார்? என்பது பற்றி நிகண்டுகள், சங்க இலக்கியங்கள் இவற்றைத் துருவிப்பார்க்கும் போது அவர் உழவர் மட்டுமின்றிப் போர் மறவராகி மன்னர் ஏன்? திருமால் முருகன் இவரும் மள்ள! மல்ல! என விளிக்கிப் பட்டிருப்பதையும் மள்ளர் மருதநிலத்தலை மக்கள் எனவும், இவர் தெய்வம் வேந்தன் எனவும், வேந்தன், தேவர் வேந்தன், இந்திரன், தேவேந்திரன், புரந்தரன், கரியவன் என வழங்கியதாகவும் ஆகப் பள்ளர் மருதநிலத் தலைமக்களாகிய மள்ளர் எனவும், அதனால் இவர் தம்மை இந்திரகுலம், தேவேந்திரகுலம், தேவேந்திரகுல வேளாளர் என வழங்கி வருகின்றனர் எனவும் தெளிவு பெறலானேன். கல்வெட்டுக்களை
ஆராய்ந்ததில் இவருக்கு மன்னருக்குரிய விருதுகளும் ஏற்பட்டிருந்தது என்பது வெளிப்பட்டது. ஆக இது பல காரணங்களால், தேவேந்திர குலத்தார் தான் மூவேந்த மரபினர் எனவும். தமிழ் வேந்தர் வீழ்ச்சியுற்றபின், இவர் அடக்கி ஒடுக்கப்பட்டு பள்ளர், கீழ்சாதி என இழிவுபடுத்தப்பட்டனர் எனவும் முடிவு கொண்டு, எனது கருத்தை 'பள்ளர் அல்ல, மள்ளர்; ஆம் மன்னர், மூவேந்தர் நீரே! சேரன் நீரே! சோழன் நீரே! பாண்டியன் நீரே! சேரன் செங்குட்டுவன்நீரே! நெடுஞ்செழிய்ன் நீரே! கரிகாலன் நீரே! ஏன்? இராசராசசோழனும் நீரே! வாழ்க மூவேந்தர் வாழிய நற்றமிழர் என வரைந்து எனக்குத் தெரிந்த தமிழறிஞர்க்கும், நண்பர்க்கும் தெரிவிக்கலானேன். அவருள் தூத்துக்குடியில், தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராய்ப் பணியாற்றி வந்த திரு. G.M. வேதநாயகம்.B.A., B.T, அவர்கள் மட்டும் எனது கருத்துக்கு உடன்பட்டார். எனது கருத்து பற்றி நன்கு தெளிவுபெறும் பொருட்டு, தமிழ் அறிஞர், மற்றும் வரலாற்றுப் பேராசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், கலைஞர், கவிஞர், மடாதிபதிகள் முதலியோருக்கு விளக்கமாய் எழுதினேன். ஏன்? தமிழக அரசுக்கும் இதை வெளிப்படுத்தினேன். ஒரு சில தமிழறிஞரிடம் நேரில் தொடர்பு கொண்டு தெளிவு பெறவும் முயன்றேன். ஆனால் அவரிடமிருந்து தெளிவு பெறமுடியவில்லை மாறாக என்னைக் குழப்பிவிடவே அவர் பெரிதும் முயன்றனர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. நாயக்கர் காலத்தில் தோன்றிய முக்கூடற் பள்ளின் உரையாசிரியரில் ஒருவராகிய பேராசிரியர் டாக்டர். நா. சேதுரகுநாதன் அவர்களுக்கு தமிழக இடைக்கால வரலாற்று நுட்பங்கள் பள்ளு நூல்களில் பொதிந்து கிடப்பதால், அவற்றை ஆய்வு செய்ய நான் விளைவதாகவும், பள்ளு நூல்கள் கிடைக்கும் இடம் பற்றித் தெரிவிக்கும்படியும் எழுதினேன். ஆனால் இப்பேராசிரியர் நாயக்கருக்கும், பள்ளு நூல்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், எனது நோக்கு தவறு என்றும், ஆய்வானது சாதியை வளர்க்கும் என்றும் பலவாறு என்னைக் கடிந்து எழுதினார். நான் தமிழ் வரலாறு திரையிடப்பட்டிருக்கிறதென்றும், அத்திரை நீக்கப்பட்டாலொழிய நாட்டிலிருந்து சாதிமறையாதென்றும், உண்மையை மூடிமறைப்பது முறை கேடானது என்றும் எனது நிலையை விளக்கிப்பதில் இறுத்தேன். பேராசிரியர் நான்மேற்கொண்ட கருத்தை ஏற்கும் முகத்தான் என்னுடைய மடலுக்குப்பதில் இறுக்கவில்லை.

திருச்சி தமிழ் மூதறிஞர் திரு.கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு மூவேந்தர் மரபினர் மறைந்து வாழ்வதாகவும், அவரைப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினால் நாட்டில் வேரூன்றியுள்ள சாதி வேறுபாடு மறைய அது துணைபுரியும் என்றும், அதைக் கருத்திற் கொண்டு, தமிழர் வரலாற்றை வெளிப்படுத்தும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தேன். அப்பெரியார் தாங்கள் கொண்டுள்ள கருத்து பல ஆண்டுகளாகத் தமிழ் அறிஞர்களிடையே நிலவி வருகிற ஒன்று எனவும் தங்களின் பணி தமிழக மக்களுக்குப் பலனளிக்கும் எனவும், தமது கருத்தை நல்கி என்னை ஊக்குவித்தார். வரலாற்றிஞர் டாக்டர் KK பிள்ளை அவர்களுக்கும் எனது ஆராய்ச்சி பற்றித் தெரிவித்தேன். அன்னாரும் எனது ஆராய்ச்சியை வரவேற்றார். நான் அன்னாருக்கு எழுதிய கடிதங்களும், அவர் இறுத்த பதில்களும் முன்னால் பிரசுரிக்கப்பட்டிருப்பது காண்க.
ஆய்வு நிமித்தம் தமிழகத்திலுள்ள பல முக்கியமான ஆலயங்களுக்கும், மற்றம் ஊர்களுக்கும் செல்ல நேரிட்டது. நெல்லை மாவட்டம் செங்கோட்டைப் பகுதிவாழ் தேவேந்திர குலத்தார் கிரயம் ஒத்திப் பத்திரங்களில் தங்களை பாண்டியர் என்று பதிந்து வருவதை நேரில் பார்வையிட்டேன். பாண்டிய நாட்டிலுள்ள முக்கியமான ஆலயங்களில் பணியாற்றும் குருத்தளை விசாரித்ததில் அவர் மத்தியில் தேவேந்திர குலத்தார் மூவேந்தர் மரபு என்பது செவிவழிச் செய்தியாக நிலவி வருவது தெரியவந்தது. மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் குருக்களில் ஒருவரிடம், தேவேந்திர குலத்தார் தானே பாண்டியர்? என வினவ, அதற்கு அவர், ஆராய்ந்து பார்த்தால் அப்படித்தான் படுது என்று பதிலிறுத்தார். சங்கரன்கோயில் குருக்கள் ஒருவர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டதுடன் அவர்வெளிவரக்காலம் வரும் என மனம் வெதும்பிக் கூறினார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலுள்ள குருக்களும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டனர். இங்குள்ள ஒரு பட்டர் உண்மையை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் வரமாட்டார்கள் என வலிந்து கூறினார். ஏன்? என்று வினவ, தங்களைத் தேவேந்திர குலம், தேவேந்திர குல வேளாளர் என்று உயர்வாகக் கூறி வருகின்றனர். ஆனால் எங்கள் முன்னோர் தான் இந்த நாட்டை ஆண்டனர் என்று கூற இதுவரை ஒருவரும் முன்வரவில்லையே, என்று அங்கலாய்த்தார்.
திருச்செந்துர் ஆலயத்தில் உள்ள குருக்கள் அனைவருக்கும் இது விபரம் தெரிந்திருப்பதை அறியலானேன். அவரில் ஒரு சிலர் தேவேந்திரக் குலத்தாரைக் குறிப்பிட்டு, படிக்கிறார்கள்; பட்டம் பெறுகிறார்கள்; சிலர் உயர் பதவியும் வகிக்கின்றனர்; இன்னும் சிலர் வசதியாகவும் இல்லாமல் இல்லை. ஆனால் இவரில் ஒருவரும் தங்கள் முன்னோர்தான் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் என்று கூற இதுவரை முன் வரக்காணோமே, இவர்கள் ஒழிந்து மறைந்து வாழ்கிறார்கள். என்றைக்கு இவர்கள் இந்த உண்மையை வெளிப்படுத்த முன்வருகிறார்களோ, அன்றுதான் இவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கும் சேமம் பிறக்கும் என்றனர். பாண்டிய நாட்டிலுள்ள ஆலயக்குருக்கள் மட்டுமின்றி விபரம் தெரிந்த பார்ப்பனருக்கும், மற்றும் பல்வேறு பிரிவினருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கின்றது என்பதை எனது சுற்றுப்பயணங்களின்போது அறியலானேன். தென்பாண்டிநாட்டின்மீது பாண்டியர் நீண்டகாலம் ஆட்சி செய்தது கவனத்திற்குரியது.
தஞ்சை,
25 – 6 - 1977. 
இரா. தேவஆசிர்வாதம்.

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-1

மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

மூவேந்தர்யார்?
(திருந்திய பதிப்பு)

இரா.தேவஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்

                                                           
இராமதேவன்பதிப்பகம்
 12/180,யாகப்பாநகர், 
 தஞ்சாவூர்-613007


மூவேந்தர் யார்?
முதற்பதிப்பு 
உரிமை ஆசிரியருக்கே. 
ஜூலை 1977


 இரண்டாம் பதிப்பு ஜனவரி 2002



படையல்

தமிழகத்தின் தன்மானத்தைக் காக்கத்

தம் இன்னுயிர் நீத்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் நினைவாக
இரா. தேவஆசிர்வாதம்.

விலை. ரூ. 40/
நூல் கிடைக்குமிடம் :
1) இரா. தேவஆசீர்வாதம்
மூவேந்தர் இல்லம்
12 / 180, யாகப்பா நகர்,
 தஞ்சாவூர் - 613 007.


2) பெ. சுப்பையா பி.இ
799, பார்க் ரோடு, சென்னை - 600 101
தொலைபேசி 6204816,


சென்னை மாநிலக் கல்லூரி வரலாற்றுத்துறை தலைமைப் பேராசிரியர் டாஜ்டர். கி.ர. அனுமந்தன், M.A., M.S.(WIS), Ph.D.,

                                                                     
முதற்பதிப்பு
அணிந்துரை
வரலாறு இருவகைப்படும். ஒன்று மனிதன் எழுதப்படிக்கத் தெரிந்தபின் வாழ்ந்தவாழ்க்கையைச் சித்திரிப்பது. மற்றொன்று. மனிதன் கல்வியறிவு பெறுமுன்பே கடைப்பிடித்த நாகரித்தை விவரிப்பது. முன்னது திட்டவட்டமானது. ஏனெனில் அதற்கு அடிப்படையான சான்றுகள் எழுதப்பெற்றது. யாவராலும் நன்கு புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் பின்னதோவெனின் வரைவதற்கு மிகக்கடினமானது. மிகப் பிற்காலத்தே எழுதப்பெற்ற பண்டை நூல்களிலிருந்தும், சமுதாயத்தில் தொன்றுதொட்டு வழங்கி வருகிற மரபுகளிலிருந்தும், பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பெறும் பண்டைக்கால நாகரிகச் சின்னங்களிலிருந்துமே அத்தகைய வரலாற்றை ஒருவாறு எழுதலாம். ஆனால் அதில் எதையும் அறுதியிட்டுக்கூற இயலாது. இன்னின்ன காரணங்களால் முற்காலத்தே இங்ஙணம்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்றுதான் அதில் கூறமுடியும். முற்கால மனிதனின் எச்சங்களான எலும்பு, நகம், பல் இவற்றைக் கொண்டு அவனது உருவம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென அறிவியலார் கணிப்பதுபோன்றே, வரலாற்றாசிரியனும் தனது கற்பனை வளனைப் பயன்படுத்தி, சமுதாயத்தில் எஞ்சியுள்ள பண்டைய மக்கள் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டு, எழுத்தறிவு தோன்றுவதற்கு முன்பே மக்கள் எவ்வாறு வாழ்ந்திருக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்கிறான். திரு. தேவ ஆசீர்வாதத்தின் நூலானது பிந்திய வகையைச் சேர்ந்த தொன்றாகும். தமிழர் நாகரிகம் மிகப்பழமையானது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என போற்றப்படும் தமிழ்ச் சமுதாயம் மிகப் பழங்காலத்திலேயே நல்ல நாகரிக வளம் அடைந்திருந்தது. சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் அந்நாகரிகத்தைப் பேணி வளர்த்தார்கள். சங்க நூல்களில் அவர் களைப்பற்றிப்பேசப்பட்டுள்ளது. எனினும் சங்ககாலத்துக்கு முன்பேயே நாட்டில் அன்னார் அரசோச்சி வந்தனர் என்பது பல்வேறு சான்றுகளிலிருந்து தெரிகிறது. அப்படியானால் அவர்கள் யாராக இருக்கக்கூடும்? தமிழ்க்குடிமக்களில் யாரிலிருந்து அவர்கள் தோன்றியிருக்கக்கூடும்? என்ற வினாக்கள் இயல்பாகவே எழுகின்றன. அவ்வினாக்களுக்கு விடை காணுமுகத்தான் எழுந்ததே இவ்வாராய்ச்சி நூலாகும்.

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் மருத நிலமே வேளாண்மைக்கு உகந்தது என்பதும், நிலை பேறான வாழ்க்கைக்கும். அதன் விளைவான அரசு தோற்றத்துக்கும், அதுவே ஏற்றது என்பதும் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துக்களாகும். இக்கருத்தையே ஆசிரியரும் வலியுறுத்துகிறார். மருதநில மக்களான மள்ளர் (மல்லர்) என்ற குடியினரே ஆதியில் தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் குடியேறி, ஆறுகளுக்குக்கரைகண்டு, நிலத்தைப் பண்படுத்தி, வயல்களாக்கி, நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாப்பொருள்களை உற்பத்திசெய்து, ஊர்கள், நகரங்கள் அமைத்து அரசுகளைத் தோற்றுவித்தனர் என்பதும், ஏரையும், போரையும் ஒருங்கே மேற்கொண்ட, காரணத்தால் அவர்களிடமிருந்தே மூவேந்தர்கள் தோன்றினர் என்பதும், அம்மரபைச் சேர்ந்த மள்ளர் குடி, இடைக்காலத்தே தெலுங்கர்கள், முகமதியர் போன்றோரின் வருகையால் நில உடைமையை இழந்து பண்ணை அடிமைகளாய் மாறினர் என்பதும், ஆசிரியரின் திரண்ட கருத்துக்களாகும். இக்கருத்துக்களை அவர் ஏராளமான அகச்சான்று, புறச்சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அவரது முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதென்பதில் சிறிதும் ஐயமில்லை.
இன்றையத் தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் பல்வேறு வகுப்பினரும், மிகப் பழங்காலத்தே உயர் நிலையில் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை டாக்டர் பட்டத்துக்கென எம்மால் எழுதப்பெற்றுள்ள, "தமிழ்நாட்டில் தீண்டாமை" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் யாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம். அக்கருத்தையே ஆசிரியர் பல்வேறு மேற்கோள்களைக் கொண்டு நன்கு நிறுவியுள்ளார். சங்ககால மள்ளர்களின் வழிவந்தோரே பள்ளர்கள் என்ற எமது கருத்தை அவர் நன்கு நிலை நாட்டியுள்ளார். மற்றும் ஒருபடி மேலே சென்று, தமிழ் மூவேந்தர்களின் முன்னோர்களும் அவர்களே என்று வாதித்துள்ளார்.
அவர்கள் நாளடைவில் எங்ஙணம் இழிநிலையடைந்தனர்? சேரிகள் எவ்வாறு தோன்றின? என்ற வினாக்களுக்கு நன்கு விடை கண்டுள்ளார். சேரி வாழ்நர் நாகரிக மற்ற நிலையிலிருந்த பழங்குடியினர், மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், பறையர் தமிழரல்லாத ஓர் கலப்பினம் என்றும் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் ஆராய்ச்சிக்குரியவை. வெள்ளாளர், கைக்கோளர் பற்றிய ஆசிரியரது கருத்துக்களும் சற்றே சர்ச்சைக்குரியவை. எனினும் சமுதாய வரலாற்றில் இது ஒர் புது முயற்சியென்பதால் பாராட்டப்படவேண்டியது. இதுபோன்ற பல சமுதாய வரலாற்று நூல்கள் வெளிவர இந்நூல் ஓர் தூண்டு கோலாயிருக்கு மென்பது எனது நம்பிக்கை
பன்னெடு நாட்களாகத் தாழ்த்தப்பட்ட ஒரு சமுதாயம் தலைநிமிர்ந்து நின்று தன்னம்பிக்கையோடு உலவ, இந்நூல் பெரிதும் துணைபுரியுமென்பதில் ஐயமில்லை. இத்தகைய நூல்கள் பல தோன்றினால்தான், தமிழ்க்குடி மக்களிடையே தாழ்வு மனப்பான்மை அகலும் வேற்றுமை மாயும் ஒருமைப்பாடு வளரும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 
மடிதற்றுகுத் தான் முந்துறும் - என்றார் வள்ளுவர்.

பண்டைய தமிழ்க்குடி ஒன்றை உயர்த்த முன்வந்துள்ள ஆசிரியர்க்குத் தெய்வம் துணை நிற்குமென்பது ஒரு தலை. தமிழ் மக்களும் இந்நூலை முழுமனதோடு வரவேற்பர் என நம்புகிறோம்.
சமுதாய வரலாறு எனும் ஓடையில் பூத்த நறுமலரான இந்நூலின் மணம் தமிழ் நாடெங்கும், ஏன் உலகெங்கும் பரவுவதாக; வாழ்க ஆசிரியர் வெல்க அவரது சீரிய முயற்சி!
சென்னை, அனுமந்தன்
22-6-77,

(தொடரும்)