Tuesday, October 17, 2017

மூவேந்தர் யார்? பகுதி-4

மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்

மூவேந்தர் யார்? என்ற நூலைப் படித்த பாளையங்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒரு பிராமண அன்பரின் பாராட்டுக் கடிதம். 
15.10.97

அன்பும் பெருமதிப்பும் மிக்க ஐயா!
      வணக்கம் தங்கள் மூவேந்தர் யார்? என்ற நூலினை வாசிக்க அறியக் கிடைத்த சம்பவம் எனக்கு ஓர் அரிய வாய்ப்பாய் அமைந்தது. தங்கள் ஆராய்ச்சி செய்த இந்த நூலின் பின்னணிகள் நொந்து நூலாய்ப் போன சமுதாயத்திற்கு ஓர் ஆறுதல் மட்டுமின்றி ஓர் விழிப்புணர்வு ஏற்பட அறவழியில் அமைக்கப் பெற்ற அருமையான ஓர் கருவி. இந்த நூலை வாசித்து அறியக்கிட்டியதற்கு உங்களுக்கு மீண்டும் எனது நன்றி! உங்கள் பணி சிறப்புடனே என்றென்றும் தொடர எனது உள்ளம் விரும்புகிறது. வாழ்த்த வயது எனக்கில்லை உங்களை வணங்குகிறேன்.
நன்றி பலகோடி
அன்புள்ள 
க. சுப்பிரமணியன்


மறுபதிப்பு முன்னுரை
மூவேந்தர் யார்? நூல் 1977 ஜூலைத் திங்களில் முதன் முதல் வெளிவந்தது. அதில் வேளாளர் பற்றிக் கண்டுள்ள செய்திகள் சிறிது சர்ச்சைக் குறியது என நூலுக்கு அணிந்துரை நல்கி உதவிய டாக்டர் கி.ர. அனுமந்தன் கூறியதால், அதை விளக்கும் பொருட்டு மூவேந்தர் யார்? நூலில் வேளாளர் பற்றி வரும் பகுதியை விரிவுபடுத்தி வேளாளர் யார்? என்ற தலைப்பில் 1981 ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது ஒரு தனிநூல் வெளிவந்தது. பல்வேறு காரணங்களால் மூவேந்தர் யார்? நூல் முழுவதையும் மறுபதிப்புச் செய்ய இயலவில்லை. சென்ற 1991 டிசம்பரில் அதன் முற்பகுதி பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் வெளியானது. தற்போது நூலின் மையப்பகுதி 'மூவேந்தர் யார்?’. (திருந்திய பதிப்பு) என்ற தலைப்பில் வெளிவருகின்றது. தேவேந்திர குலத்தார் எவ்வாறு தாழ்த்தப்பட்டனர்? என்ற கடைப் பகுதி ஒரு தனி நூலாக இனி வெளி வரவேண்டும். இது விரைவில் வெளிவருவது பொது மக்கள் இந்நூலுக்கு நல்கும் வரவேற்பைப் பொறுத்தது ஆகும்.
சாதி ஏற்றத்தாழ்வு தமிழக வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் விளைவே என்பதை, எனது மேலே கண்ட நூல்களைப் படித்தோர் அறிவர். மூவேந்தர் யார்? வேளாளர் யார்? இரு நூல்களும் தோன்றிப் பல ஆண்டுகளாகியும், தமிழறிஞர் மற்றும் வரலாற்றாசிரியர் போக்குகளில் எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை. அவர்கள் தங்களின் பழைய பாணியிலேயே நூல்களைப் படைத்து வருகின்றனர். ஒரு சிலர் பள்ளர் உழுப்பறையரிலிருந்து விசயநகர ஆட்சியின் போது பிரிந்தவர் என எழுதிவர முன்வந்துள்ளனர். பொய் ஒன்றையே சொல்லி மக்களை வஞ்சித்து ஏமாற்றிச் சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு உயர் இடத்தைப் பிடித்துள்ளவர் தங்களின் இன்றைய சமுதாய நிலைக்கு ஊன் விளைவிக்கும் செயல்களில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வர்? ஏன் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வரலாற்றுக் குழுவும் இதற்கு விதி விலக்கல்ல. அக்குழு எழுதி வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் வாழ்வியல், அரசியல் என்ற நூல்களில் மள்ளர் மல்லர் இடம் பெறவில்லை. அவரது இடத்தில் இன்றைய வேளாளர், மறவர் பேசப்படுகின்றனர். இந்த வரலாற்றுக்குழுவின் செயல் பற்றித் தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் முந்தையப் பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் நூலில் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டுள்ளது காண்க.
இதுவரை ஆழ்ந்த நித்திரையிலிருந்த தமிழினம் இன்று சற்று விழித்திருக்கின்றனர் என அறிகிறேன். இவர் ‘ஏமுற்றுக் களித்த மள்ளர்’ (புறம் 84.5) அல்லவா? (நம்மை யார் என்ன..செய்ய முடியும்? என இறுமாத்து இருந்தவர்) சொல்லின் செல்வர் R.P.சேதுப்பிள்ளை கூறுவார்; 'தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அதற்கு ஒரு திறன் உண்டு. முன்னாளில் அது தலைசிறந்து விளங்கிற்கு. மன்னும் இமயமலை எங்கள் மலையே என மார்தட்டிக் கூறினான் தமிழன். கங்கையும் காவிரியும் எங்கள் நதியே என்று இறுமாந்து பாடினான் தமிழன். பஞ்சநதிபாயும் பழனந்திருநாடும் எங்கள் நாடே என்று நெஞ்சம் நிமிர்ந்துப்பேசினான் தமிழன். உயர்ந்தவர் தாழ்வர், தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை இந்த முறையில் படிப்படியாய்த் தாழ்ந்தான் ஆயினும் தமிழர் வீரம் அறவே அழிந்து விடவில்லை. வீறு பெற்றுத் தமிழர் தலையெடுக்கும் காலம் விரைந்து வருகின்றது. (தமிழர் வீரம்).
அக்காலம் இதோ வந்துவிட்டது எனலாம். எனது நூல்களுக்கு மக்களின் ஆதரவு பெருகிவரக் காண்கிறேன். சில அன்பர்கள் குறிப்பாக நெல்லை மாவட்டம் குறும்பூர் ஆணையப்பபிள்ளைச்சத்திரம் திரு N.குலசேகர பாண்டியன் மற்றும் கோவை தேவேந்திரர் சங்கத் தலைவர் Er. Dr. G. சித்தன், B.E. M.Sc., (Egg) Ph.D. (U conn. U.S.A.) எனது நூல்களைப் பரப்புவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பாராட்டிற்குரியதாகும். நூலில் பல அறிஞர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாண்டிருக்கின்றேன். அவ் அறிஞர்களுக்கும் சம்மந்தப்பட்ட பதிப்பகத்தார்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நூலின் கைப்பிரதியை அச்சேறுவதற்கு வசதியாக் திரு. அன்பழகன், B.A., படி எடுத்து உதவினார் என்பதை நன்றி உவகையோடு இங்கு கூறிக்கொள்கிறேன். நூலை விரைவில் அச்சேற்று உதவிய தஞ்சை ஜெமினி அச்சகத்தார்க்கும் எனது நன்றி.
வாழ்க மூவேந்தர்
வாழ்க திராவிடர் 
வாழ்க  நம் தாய்த்திருநாடு
தஞ்சை: 
12.10.92 இரா.தேவஆசீர்வாதம்


முன்னுரை

மூவேந்தர் மரபு பற்றி மூவேந்தர் யார் நூல் முதன் முதல் 1977 - ல் வெளியானது. பின்னர் அதன் ஒரு பகுதி வேளாளர் யார்? என்ற தலைப்பில் 1981 - ல் வெளியானது. முதல் நூலின் முற்பகுதி பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் (மூவேந்தர் முற்பகுதி) என்ற தலைப்பில் 1991 - ல் வெளியானது. பின்னர் முதல் நூலின் மையப் பகுதி மூவேந்தர் யார்? (திருந்திய பதிப்பு) என்ற தலைப்பில் 1992 - ல் வெளியானது. 1977 - ல் வெளியான மூவேந்தர் யார்? நூலின் கடைப்பகுதியான தேவந்திர குலத்தார் எவ்வாறு தாழ்த்தப்பட்டனர் என்பது இருபாகங்களாகப் பிரித்து அதன் ஒரு பகுதி தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் வீழ்ச்சி என்ற தலைப்பில் 1998 - லும் எஞ்சிய பகுதி தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் தாழ்நிலை எய்தல் என்ற தலைப்பில் 2000 - லும் வெளியாயின. மேலே கண்ட நூல்களில் 1981 - ல் வெளியான வேளாளர் யார்? என்ற நூலும் 1992 - ல் வெளியான முவேந்தர் யார்? (திருந்திய பதிப்பு) நூலும் தீர்ந்து பல ஆண்டுகளாகின்றன. அவற்றில் மூவேந்தர் யார்? திருந்திய பதிப்பு மறுபதிப்பு தற்போது வெளிவருகின்றது.
கடைசியாய் வெளியான தமிழ் மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் தாழ்நிலை எய்தல் நூல் விநியோகிப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர் ௸ நூல் வெளிவர மூலகாரணமாய் இருந்த ஒய்வு பெற்ற கண்காணிப்புப் பொறியாளர் உயர்திரு P. சுப்பையா B.E., அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நூல் அச்சேறவும் நகல் பிழைதிருத்தி நூல் வெளிவரக் காரணமாய் இருந்தவர் அன்னார் அவர்களே. நகல் பிழை திருத்துவதில் அவர்களின் மகள் திருச்செல்வி வதனா M.A., என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அவர்களுக்கு எனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதிபலன் இல்லாது சமுதாய நோக்கோடு இவர்கள் செயல்பட்டதற்கு சமூகம் கடன் பாடுடையதாகும் எனில் அது மிகையாகாது.
மூவேந்தர் மரபு பற்றிய நூல்களை எழுதுவதில் ஆரம்பத்திலிருந்து என்னை ஊக்கப்படுத்தியவர்கள் கோவை மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் சி. மாரிமுத்து M.D., D.C.H., அவர்களும் அவர்களின் துணைவியார் திருமதி அன்னத்தாய் அவர்களும் என்பது


குறிப்பிடத்தக்கது ஆகும். அண்மைக்காலமாய் டாக்டர் எஸ். கருப்பசாமி M.S., D.I.O., அவர்களும், திரு. ஆர். கிருத்துவதாஸ் காந்தி I.A.S., அவர்களும், எனது நூல்களை விநியோகம் செய்ய ஊக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் உதவியை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
எனது நூல்கள் இன்னும் சரியாய் மக்களிடம் பரவவில்லை. அதற்குக் காரணம் சமூகத்தில் உள்ள உயர்நிலையில் உள்ளவர்கள் தக்க ஊக்கம் காட்டாதது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலாவது அவர்கள் சமூக உணர்வு கொண்டு சமூகத்தில் விழிப்புணர்வும் அதன் மூலம் எழுச்சியும் ஏற்ப்டுத்த ஆவண செய்வார்கள் என நம்புகின்றேன். வேளாளர் யார்? மறுபதிப்பு வெளிவருவது சமூகம் இந்த நூலுக்கு அளிக்கும் ஆதரவைப் பொறுத்தது ஆகும்.

இந்த நூலை மிகவும் குறுகிய காலத்தில் நல்ல முறையில் அச்சிட்டு உதவிய சென்னை ஆர். என். ஆர். அச்சகத்தாருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வாழ்க தமிழர்
வாழிய நம் தாய்த்திருநாடு 
தஞ்சை, 
14.01.2002 
இரா. தேவஆசிர்வாதம்


ஆசிரியர் பிற வெளியிடுகள்
1. மூவேந்தர் யார்? ஜீலை 1977 
2. வேளாளர் யார்? ஜனவரி 1981 
3. பள்ளர் அல்ல மள்ளர்
    ஆம் மன்னர் டிசம்பர் 1991
4. மூவேந்தர் யார்?
   (திருத்திய பதிப்பு) அக்டோபர் 1992 
5. தமிழ் மூவேந்தர்
    மரபினரான டிசம்பர் 1998
    தேவேந்திரர் வீழ்ச்சி 
6. தமிழ் மூவேந்தர் 
    மரபினரான தேவேந்திரர் 
    தாழ்நிலை எய்தல் டிசம்பர் 2000

பொருளடக்கம் 
மூவேந்தர் யார்? அணிந்துரை  

மூவேந்தர் யார்? முன்னுரை  

மூவேந்தர் மரபு பற்றி டாக்டர் K.K. பிள்ளையுடன் ஆசிரியர் நடத்திய கடிதப் 
போக்குவரத்து 

மூவேந்தர் யார்? வேளாளர் யார்?
நூல்கள் பற்றிய மதிப்புரைகள்  

மறுபதிப்பு முன்னுரை  

இரண்டாம் பதிப்பு முன்னுரை  

ஆசிரியரின் பிற வெளியீடுகள்  தமிழகத்தின் பண்டையநிலை  

மூவேந்தர் யார்? 

திராவிடர் யார்?  

சங்ககால மக்கள் பிரிவு  

அரசு தோன்றிய இடம்  

தலைமக்கள் 

மள்ளர் - மல்லர் யார்?  

திராவிடராகிய மூவேந்தர் 
இன்றையப் பள்ளரே  

தேவேந்திர குலம் 

பள்ளர் குடியிருப்பு அமைப்பு  

பள்ளர் பாராட்டும் 
மன்னர்க்குரிய உரிமைகள்  

குலப்பட்டங்கள் 

பின்னினைப்பு :
(i) கடைஞர் - (கடையர்) 
(ii) சங்ககாலத்தில் மள்ளர் என்ற பெயருடைய புலவர்களும் அவர்கள்  இயற்றிய                        பாக்களும் 
(iii) கள்ளர், மறவர், அகம்படியர் மற்றும் பல மரபினரின் சராசரி உயரம், மார்பு அளவு ,               எடை முதலிய 147 விபரங்கள்

(தொடரும்)

No comments:

Post a Comment