மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
மூவேந்தர்யார்?
(திருந்திய பதிப்பு)
இரா.தேவஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
இராமதேவன்பதிப்பகம்
12/180,யாகப்பாநகர்,
தஞ்சாவூர்-613007
மூவேந்தர் யார்?
முதற்பதிப்பு
உரிமை ஆசிரியருக்கே.
ஜூலை 1977
படையல்
தமிழகத்தின் தன்மானத்தைக் காக்கத்
தம் இன்னுயிர் நீத்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் நினைவாக
இரா. தேவஆசிர்வாதம்.
விலை. ரூ. 40/
நூல் கிடைக்குமிடம் :
1) இரா. தேவஆசீர்வாதம்
மூவேந்தர் இல்லம்
12 / 180, யாகப்பா நகர்,
தஞ்சாவூர் - 613 007.
2) பெ. சுப்பையா பி.இ
799, பார்க் ரோடு, சென்னை - 600 101
தொலைபேசி 6204816,
சென்னை மாநிலக் கல்லூரி வரலாற்றுத்துறை தலைமைப் பேராசிரியர் டாஜ்டர். கி.ர. அனுமந்தன், M.A., M.S.(WIS), Ph.D.,
முதற்பதிப்பு
அணிந்துரை
வரலாறு இருவகைப்படும். ஒன்று மனிதன் எழுதப்படிக்கத் தெரிந்தபின் வாழ்ந்தவாழ்க்கையைச் சித்திரிப்பது. மற்றொன்று. மனிதன் கல்வியறிவு பெறுமுன்பே கடைப்பிடித்த நாகரித்தை விவரிப்பது. முன்னது திட்டவட்டமானது. ஏனெனில் அதற்கு அடிப்படையான சான்றுகள் எழுதப்பெற்றது. யாவராலும் நன்கு புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் பின்னதோவெனின் வரைவதற்கு மிகக்கடினமானது. மிகப் பிற்காலத்தே எழுதப்பெற்ற பண்டை நூல்களிலிருந்தும், சமுதாயத்தில் தொன்றுதொட்டு வழங்கி வருகிற மரபுகளிலிருந்தும், பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பெறும் பண்டைக்கால நாகரிகச் சின்னங்களிலிருந்துமே அத்தகைய வரலாற்றை ஒருவாறு எழுதலாம். ஆனால் அதில் எதையும் அறுதியிட்டுக்கூற இயலாது. இன்னின்ன காரணங்களால் முற்காலத்தே இங்ஙணம்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்றுதான் அதில் கூறமுடியும். முற்கால மனிதனின் எச்சங்களான எலும்பு, நகம், பல் இவற்றைக் கொண்டு அவனது உருவம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென அறிவியலார் கணிப்பதுபோன்றே, வரலாற்றாசிரியனும் தனது கற்பனை வளனைப் பயன்படுத்தி, சமுதாயத்தில் எஞ்சியுள்ள பண்டைய மக்கள் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டு, எழுத்தறிவு தோன்றுவதற்கு முன்பே மக்கள் எவ்வாறு வாழ்ந்திருக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்கிறான். திரு. தேவ ஆசீர்வாதத்தின் நூலானது பிந்திய வகையைச் சேர்ந்த தொன்றாகும். தமிழர் நாகரிகம் மிகப்பழமையானது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என போற்றப்படும் தமிழ்ச் சமுதாயம் மிகப் பழங்காலத்திலேயே நல்ல நாகரிக வளம் அடைந்திருந்தது. சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் அந்நாகரிகத்தைப் பேணி வளர்த்தார்கள். சங்க நூல்களில் அவர் களைப்பற்றிப்பேசப்பட்டுள்ளது. எனினும் சங்ககாலத்துக்கு முன்பேயே நாட்டில் அன்னார் அரசோச்சி வந்தனர் என்பது பல்வேறு சான்றுகளிலிருந்து தெரிகிறது. அப்படியானால் அவர்கள் யாராக இருக்கக்கூடும்? தமிழ்க்குடிமக்களில் யாரிலிருந்து அவர்கள் தோன்றியிருக்கக்கூடும்? என்ற வினாக்கள் இயல்பாகவே எழுகின்றன. அவ்வினாக்களுக்கு விடை காணுமுகத்தான் எழுந்ததே இவ்வாராய்ச்சி நூலாகும்.
தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் மருத நிலமே வேளாண்மைக்கு உகந்தது என்பதும், நிலை பேறான வாழ்க்கைக்கும். அதன் விளைவான அரசு தோற்றத்துக்கும், அதுவே ஏற்றது என்பதும் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துக்களாகும். இக்கருத்தையே ஆசிரியரும் வலியுறுத்துகிறார். மருதநில மக்களான மள்ளர் (மல்லர்) என்ற குடியினரே ஆதியில் தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் குடியேறி, ஆறுகளுக்குக்கரைகண்டு, நிலத்தைப் பண்படுத்தி, வயல்களாக்கி, நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாப்பொருள்களை உற்பத்திசெய்து, ஊர்கள், நகரங்கள் அமைத்து அரசுகளைத் தோற்றுவித்தனர் என்பதும், ஏரையும், போரையும் ஒருங்கே மேற்கொண்ட, காரணத்தால் அவர்களிடமிருந்தே மூவேந்தர்கள் தோன்றினர் என்பதும், அம்மரபைச் சேர்ந்த மள்ளர் குடி, இடைக்காலத்தே தெலுங்கர்கள், முகமதியர் போன்றோரின் வருகையால் நில உடைமையை இழந்து பண்ணை அடிமைகளாய் மாறினர் என்பதும், ஆசிரியரின் திரண்ட கருத்துக்களாகும். இக்கருத்துக்களை அவர் ஏராளமான அகச்சான்று, புறச்சான்றுகளுடன் நிறுவியுள்ளார். அவரது முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதென்பதில் சிறிதும் ஐயமில்லை.
இன்றையத் தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் பல்வேறு வகுப்பினரும், மிகப் பழங்காலத்தே உயர் நிலையில் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை டாக்டர் பட்டத்துக்கென எம்மால் எழுதப்பெற்றுள்ள, "தமிழ்நாட்டில் தீண்டாமை" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் யாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம். அக்கருத்தையே ஆசிரியர் பல்வேறு மேற்கோள்களைக் கொண்டு நன்கு நிறுவியுள்ளார். சங்ககால மள்ளர்களின் வழிவந்தோரே பள்ளர்கள் என்ற எமது கருத்தை அவர் நன்கு நிலை நாட்டியுள்ளார். மற்றும் ஒருபடி மேலே சென்று, தமிழ் மூவேந்தர்களின் முன்னோர்களும் அவர்களே என்று வாதித்துள்ளார்.
அவர்கள் நாளடைவில் எங்ஙணம் இழிநிலையடைந்தனர்? சேரிகள் எவ்வாறு தோன்றின? என்ற வினாக்களுக்கு நன்கு விடை கண்டுள்ளார். சேரி வாழ்நர் நாகரிக மற்ற நிலையிலிருந்த பழங்குடியினர், மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், பறையர் தமிழரல்லாத ஓர் கலப்பினம் என்றும் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் ஆராய்ச்சிக்குரியவை. வெள்ளாளர், கைக்கோளர் பற்றிய ஆசிரியரது கருத்துக்களும் சற்றே சர்ச்சைக்குரியவை. எனினும் சமுதாய வரலாற்றில் இது ஒர் புது முயற்சியென்பதால் பாராட்டப்படவேண்டியது. இதுபோன்ற பல சமுதாய வரலாற்று நூல்கள் வெளிவர இந்நூல் ஓர் தூண்டு கோலாயிருக்கு மென்பது எனது நம்பிக்கை
பன்னெடு நாட்களாகத் தாழ்த்தப்பட்ட ஒரு சமுதாயம் தலைநிமிர்ந்து நின்று தன்னம்பிக்கையோடு உலவ, இந்நூல் பெரிதும் துணைபுரியுமென்பதில் ஐயமில்லை. இத்தகைய நூல்கள் பல தோன்றினால்தான், தமிழ்க்குடி மக்களிடையே தாழ்வு மனப்பான்மை அகலும் வேற்றுமை மாயும் ஒருமைப்பாடு வளரும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுகுத் தான் முந்துறும் - என்றார் வள்ளுவர்.
பண்டைய தமிழ்க்குடி ஒன்றை உயர்த்த முன்வந்துள்ள ஆசிரியர்க்குத் தெய்வம் துணை நிற்குமென்பது ஒரு தலை. தமிழ் மக்களும் இந்நூலை முழுமனதோடு வரவேற்பர் என நம்புகிறோம்.
சமுதாய வரலாறு எனும் ஓடையில் பூத்த நறுமலரான இந்நூலின் மணம் தமிழ் நாடெங்கும், ஏன் உலகெங்கும் பரவுவதாக; வாழ்க ஆசிரியர் வெல்க அவரது சீரிய முயற்சி!
சென்னை, அனுமந்தன்
22-6-77,
(தொடரும்)
வாழ்த்துக்கள் உறவே ..! உங்கள் சமுகபணி தொடரட்டும் .
ReplyDeleteநன்றி பாண்டியரே
ReplyDeleteவணக்கம் நான் மதுரையில் இருந்து பெ.முத்துக்காமாச்சி எனக்கு மூவேந்தர் யார் மற்றும் வேளாளர் யார் என்ற இரண்டு புத்தகங்கள் தேவை இதை வாங்க வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteஎன்னிடம் PDF வடிவில் இரண்டு நூல்களும் உள்ளது...
Deleteஎனது எண் 8608990988
மின்னஞ்சல்:sv.aravindkumarsunstar@gmail.com
தொடர்புகொள்ளவும்...
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய
ReplyDeleteவரலாறு
தம்பி 7339420732 என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் இதுக்கு PDF ல் இருக்குற புத்தகம் அனுப்பிரு... வேப்பங்குளம் முருகன்..
ReplyDeleteஅற்புதமான பணி.நன்றி...
ReplyDeleteவில்லவர் மற்றும் பாணர்
ReplyDelete____________________________________
பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
_____________________________________
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
அசாம்
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteநாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.
கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு