Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-42

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பின் இணைப்பு - 1
கடைஞர் - (கடையர்)

நம்பி அகப்பொருள் அகத்திணையில் “இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன், கிழவன், கிழத்தி, உழவர், உழத்தியர், கடைஞர், கடைசியர் மருதநிலமக்களாகப் பேசப்படுகின்றனர். தமிழ் நிகண்டுகள் மேலே கண்டவர்கள் தவிர களமர், தொழுவர், கம்பளர், இளையர் வினைஞர், மள்ளர், ஆற்றுக்காலாட்டியர், மருதநிலமக்கள் எனக் கூறுகின்றன. இவைகளில் மள்ளர் தான் மரபுப் பெயர். உழவர், உழத்தியர், வினைஞர் என்பவைகள் மள்ளர் குடியினரையே சுட்டும், மற்றவை இவர்களை உணர்த்தாது கம்பளர், ஆற்றுக் காலாட்டியர், கடைஞர் இவர்கள் சங்க இலக்கியங்களில் பேசப்படக்காணோம். இப்பெயர்கள் பின்னாளில் தோன்றியவை. கடைஞர் பெரியபுராணத்தில் பேசப்படுகின்றனர். இவர் அந்நாளில் தீண்டப்படாத புலையர் ஆவர். திருநாளைப் போவார் என்று கூறப்படும் அறுபத்திமூன்று சைவ சமய அடியார்களில் ஒருவராகிய நந்தனார் புலையர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைஞர் புலையர் வகுப்பு எனில், தேவேந்திர குலத்தாருள் ஒரு உட்பிரிவாகப் பேசப்படும் கடையப்பள்ளர் யார்? என்ற கேள்வி எழுகின்றது. இக்கேள்விக்கு விடை காண எழுந்ததுவே இவ் ஆராய்ச்சியாகும்.
இன்றைய செடியூல் வகுப்புப்பட்டியலில் கடையர் இடம் பெற்றுள்ளனர். 1891 - ல் எடுத்த மக்கள் குடிக்கணக்கில் 18,830 பேர்கள் தங்கள் மரபைக் கடையர் எனப்பதிவு செய்துள்ளனர். இவற்றில் 16,528 பேர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். மதுரை, கோவை மாவட்டக் குறிப்புகளில் கடையர் என்ற பிரிவினர் அந்த மாவட்டங்களில் இருந்துவருவதாகக் கண்டுள்ளது. ஆனால் இவர் தேவேந்திரகுலத்தார் வாழ்ந்து வரும் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வருவதாகத் தெரிகிறது. 1935 இந்திய அரசு சட்டப்படி (Government of India Act 1935) தயாரிக்கப்பட்ட செடியூல் வகுப்புப் பட்டியலில் கடைஞர் (கடையர்) இடம் பெறவில்லை. 1935 க்குப் பிறகே, இவர் செடியூல் வகுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர் பெரும்பாலும்தேவேந்திர குலத்தார் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே இருந்து வருவதாகத் தெரிகிறது. திருச்சி மாவட்டக் குறிப்பில் இவர் பற்றிக் கண்டுள்ளதாவது; பள்ளக் கூத்தாடி, பள்ளப் பிச்சைக்காரன் தேவேந்திர குலத்தாரை அண்டியே வாழ்கின்றனர். கடையர் அல்லது கொட்டுக்காரர், பள்ளக் குருக்கள், பள்ள நாவிதர், பள்ள வண்ணார் இருக்கின்றனர்.

F.R. Hemingsway says: "There are Palla Kuthadis (dancers) Palla beggars depending on them. (Devendras) There are Devendras, Kadayars or Kottukarans, Pallagurus, Palla barbers and Palla washermen” [F.R. Hemingsway. Trichinopoly Dt. Gazetter. Page 129]
அண்மைக்காலம் வரை, இவர் சங்க காலத்தில் மருதநிலத் தலைமக்களை அண்டி வாழ்ந்த பாங்கன், தோழி போன்றே வாழ்க்கை நடத்திவந்ததாகத் தெரிகிறது. தேவேந்திரகுலத்தார் நன்மைதுன்மைச் சடங்குகளுக்கு இவர் மேலம் வாசிப்பதுண்டு தேவேந்திரகுலத்தார் கோயில் திருவிழாவின்போது, இவர் மேளம் வாசிப்பதுடன் கூத்து, நாடகங்கள் முதலியவை நடத்துவதுண்டு. நெற்போர்களங்களில் பொலிப்பாட்டுப் பாடி நெல்மணிகளைப் பெற்றுச் செல்வர். இராப்பாட்டுப் பாடுபவரும் இவரே ஆம். சங்க இலக்கியத்தில் கிணைப்பொருநராகவும், பாங்கன் தோழியாகவும் பேசப்படுபவர் இவராகவே இருக்கவேண்டும். சங்ககாலத்தில் மருதநிலத்தலைமக்களின் பெண்டிரை மணம் முடித்துக் கொடுக்கும் போது அவரது தோழியரையும் சீதனப்பொருளாகக் கொடுத்துவந்ததாகத் தெரிகிறது. மணமகள் கர்ப்ப முற்றிருக்கும்போது, அல்லது மாதவிடாய், மற்றும் நோயின் காரணமாய்க் கணவனைக் கூடமுடியாதவேலை, தன் இடத்தை நிரப்ப தன் தோழியைக் கணவனிடம் அனுப்புவதுண்டு. இம்மாதிரி உறவால் பிறக்கும். குழந்தைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கில்லை. ஆனால் வேறு பல உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர். இன்றையப் பிள்ளைமார் இந்தப் பாங்கன் தோழிவழித் தோன்றல்கள் என்று மறைமலையடிகள் கருதுவதாக இளங்காப்பியன் தனது "வரலாற்றுப்பாலம்” என்ற நூலில் கூறியிருப்பதை, இந்நூலின் பக்கம் 40 - ல் எடுத்தாண்டிருப்பதை வாசகர் அறிவர். மூவேந்தர் ஆட்சி காலத்தில் தேவேந்திரகுலத்தாரை அண்டி வாழ்ந்தவருள் பெரும்பாலோர், மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சியுற்றபின் தேவேந்திரகுலத்தார் அடக்கி ஒடுக்கப்பட்டு பண்ணை அடிமைப்பட்ட காலை, அவரை விட்டுப் பிரிந்து பல்வேறு குலப்பெயரைப் பூண்டுவர, இன்று கடையர் என்று பேசப்படுபவர் தேவேந்திர குலத்தாரைப் புறக்கணிக்காமல், நன்றிக் கடனாக் அவரிடம் விசுவாசமாகவே நடந்துவந்ததுடன், தங்களைக் கடையப்பள்ளர் என்றே வழங்கி வந்துள்ளனர் எனலாம். இதை அறியாத தமிழ்ப்புலவர்களும், வரலாற்றாசிரியரும் தேவேந்திரகுலத்தாரைக் கடைவருணம் என்றும், அவரது பெண்டிரைக் கடைசியர் என்றும் கூசாமல் எழுதி வர முற்பட்டுள்ளனர், பள்ளு இலக்கியங்களில் இம்மரபுப் பெண்டிரைக் கடைசியர் என்று இழிவாய்க் கூறியிருப்பது இதனாலே எனலாம். ஊருக்குக் கடைசியில் இவரது குடியிருப்பு இருந்ததால் கடையர் -கடைசியர் என்று பெயர் பெற்றிருக்கலாம். பண்டைய நாளில் கோட்டைக்கு வெளியே இருந்த குடியிருப்புகள் சேரி என்று வழங்கியது நினைவிருக்கத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் கடையம், கடையநல்லூர் என்ற ஊர்கள் கடையர் பெரும்பான்மையினராய் அங்கு வாழ்ந்ததால் அப்பெயர்கள் பெற்றதா? என்பது ஆராய்ச்சிக்குரியது ஆகும்.

(இக்கட்டுரை நெல்லை மாவட்டம் தென் திருப்பேரைக்கு அருகில் உள்ள கல்லாம்பாறையில் வாழும் கடையப் பிரிவினரின் சமீபகால வாழ்க்கை முறையை ஆதாரமாகக் கொண்டது.) இவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றியுள்ளனர் அனேகர் குடிபெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். நெல்லைக்கு அருகில் இவர் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது. முருகன் ஆலயங்களுக்கு பக்தர்களாக காவிடி ஆட்டத்திற்கு கொட்டு அடிப்பவர் இந்தப் பிரிவினரே ஆவர்.

பின் இணைப்பு - II
(சங்க காலத்தில் இருந்த மள்ளர் என்ற பெயருடைய புலவர்களும்
அவர்கள் இயற்றிய பாக்களும்.)

1. கடுவன் இளமள்ளனார் - நற்றினை பாடல் 150 
2. கடுவன் மள்ளனார் – குறுந்தொகை - 82 
3. மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார் – அகநானூறு - 354. 
4. மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் - அகநானூறு - 70, 256. 
5. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் - நற்றிணை 297, 321, குறுந்தொகை – 188, 215, அகநானூறு - 33, 144, 174, 244, 344, 353, புறநானூறு - 388. 
6. மதுரை அளக்கர் ஞாழா மகனார் அம்மள்ளனார் - அகநானூறு -
314.
7.அம்மள்ளனார், நற்றிணை - 82. 
8. மள்ளனார் – நற்றிணை – 204, குறுந்தொகை - 72
9. திருக்குறளுக்கு உரை எழுதிய பத்துப் பேர்களுள் மல்லர் என்ற புலவரும் ஒருவர். அந்த உரை இப்போது கிடைக்கப்பெறவில்லை.

தகவல் :
Er. Dr. G. குருசாமிசித்தர் B.E., M.Sc., (Egg) PhD., (U conn. USA) தலைவர் தேவேந்திரர்சங்கம் , 5 / 1, குருசாமி நகர், கோவை - 641 046.

(முற்றும்).

மூவேந்தர் யார்? பகுதி-41

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

காலாடி:
காலாடி என்பது தேவேந்திர குலத்தாருள் ஒரு பிரிவாகவும், அப்பிரிவினரது குலப்பட்டமாகவும் இருந்து வருகின்றது. இப்பிரிவினர் தஞ்சை மாவட்டத்தின் மேல்பகுதியிலும் திருச்சி மாவட்டம் லால்குடி சுற்றுப்புறங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்பகுதியிலும், மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றனர். அகராதியில் ‘காலாடி’ என்பதற் ‘சுருக்கன்’ தொழிலற்றுத் திரிபவன், பள்ளர் தலைவன், முயற்சியுடையோன் என்று பொருள் கண்டுள்ளது. இச்சொல்லுக்கு நீர்ப்பாய்ச்சும் கிராம ஊழியக்காரன் என்றும் பொருள் கொள்வர். ‘சேந்தன்’ பிங்கலந்தை சூடாமணி நிகண்டுகளில் காலாடி என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால் ஆற்றுக் காலட்டியர் என்று சொல் பேசப்படுகின்றது. இச்சொல்லுக்கு மருதநிலப்பெண், உழத்தியர் என்று பொருள் தந்துள்ளனர். ஆற்றுக்காலாட்டி என்பதற்கு ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய்களில்வரும் தண்ணிரைக் காலால் தட்டி மீன்பிடித்து விளையாடி மகிழும் மருதநிலச் சிறுமிகள் என்று சிலர் பொருள் கொள்வர். மீன்பித்தும் ஆறுகளில் நீந்தி விளையாடியும் மகிழ்பவர் என்பது சிறுமிகளுக்கே பொருந்தும் எனலாம். இப்பொருள் மற்றப் பெண்களுக்குப் பொருந்தாது. இச்சொல் பள்ளு நூல்களில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாப்பெருங்காலக் காரிகையிலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது. இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் காலாடி என்ற சொல் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. காலாடி என்பதிற்கு காலாட்படையைச் சேர்ந்தவன் என்றும், வேவு தொழில் புரிபவன் என்றும் பொருள் கொள்ளலாம். அகராதிகளில் கண்டுள்ள மற்ற பொருள்கள் எல்லாம் இம்மரபினர்க்குப் பொருந்தாது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புதுக்கோட்டைப் பகுதியில் திருட்டுத் தொழிலைக் குலத்தொழிலாகக் கொண்ட கள்ளர், மறவர், வலையர் இவர்களுள் மாடு திருடுவதில் ஈடுபட்டுவந்தவருக்குத் துணையாக காலாடிப்பிரிவில் ஒரு சிலர் சென்று வந்ததால் இந்தப்பிரிவினர் அனைவரையும் கள்ளர், மறவர் முதலிய பல்வேறு வகுப்பினருடன் சேர்த்து குற்றப் பரம்பரையினர் என அரசு அறிவித்தது. நாடு விடுதலை பெற்றபின் குற்றபரம்பரைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தேவேந்திர குலத்தார் சமூகப் பஞ்சாயத்துக்களுக்குச் சில இடங்களில் ஊர்க் குடும்பன், மூப்பன் இவர்களுக்குத் துணையாக காலாடி என்ற உதவியாளரும் இருந்து வருகின்றனர். இவரை ஒடும்பிள்ளை என்றும் கூறுவர். ஊர்க்கூட்டம் கூட்ட இவர் மக்களைக் கூட்டுவதால் ஒடும்பிள்ளை அல்லது காலாடி என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கொள்ளலாம். ஏன் வசதி படைத்த சுகவாழ்வு உடையவர் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் படையிலும், நெற்காட்டான் செவல் புலித்தேவன் படையிலும் காலாடிப் பட்டமுள்ள படைத்தலைவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாய்க்காரன்:
தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம், நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி தாலுக்காக்களில் உள்ள தேவேந்திர குலத்தார் வாய்க்காரன் என்ற குலப்பட்டம் கொண்டுள்ளனர். இவரது கிரையம், ஒத்திப் பத்திரங்களில் தேவேந்திர வாய்க்காரன் என்று குறப்பிடுகின்றனர். வாய்க்காரன் என்பதற்க்கு சென்னை பல்கலைக்கலக அகராதியில் பேச்சாளன், பிறரைத்திட்டும் சுபாவமுள்ளவன் பள்ளருள் ஒரு பிரிவினர் எனப்பொருள் கண்டுள்ளது. இவைகள் இம்மரபினருக்கு முற்றிலும் பொருந்தாது. இச்சொல் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டு களில் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. வாய்க்காரன் என்பது வயற்காரன், வயலையுடையவன் என்பவற்றிலிருந்து திரிந்திருக்க வேண்டும். விசயநகர, நாயக்கர் ஆட்சி ஏற்படுமுன், வயல்கள் பெரும்பாலும் இம்மரபினர்க்கே சொந்தமாய் இருந்து வந்தது. அந்நியர் ஆட்சியில் இவரது நில புலங்கள் பறிக்கப்பபட்டு, அரசுடைமை ஆக்கப்பட்டு, அவை நாயக்க மன்னரின் கீழ் அரசு பணியில் ஈடுபட்டுவந்த தெலுங்கர் மற்றும் சில முக்கிய தலைவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர்த்தொழிலை, இம்மரபினரே தொடர்ந்து செய்துவந்ததால் வயல்கள் இவரது கைவசமே இருந்து வந்தது எனலாம். ஆரம்பத்தில் இவரை வயற்காரன் என்று கூறும் பழக்கம் ஏற்பட்டுப்பின்னர், அது வாய்க்காரன் என்று திரிந்திருக்க வேண்டும். அரிசன் என்ற பெயர் புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்டது போன்று, இப்பெயர் அரசியல் நோக்கத்தோடு மிகவும் பிற்காலத்தே தோற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும்.

பட்டக்காரர்:
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவேந்திரகுலத்தார் ஊர்த்தலைவர்களைப் பட்டக்காரர் என அழைப்பர். இச்சமூகத்தினரிடையே ஏற்படும் பிணக்குகளை, இவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பேசித் தீர்த்துவைப்பர். இவரது தீர்ப்புக்கு இருதரப்பாரும் கட்டுப்படுவர். கொங்கு நாட்டிலுள்ள கவுண்டர் (கொங்கு வேளாளர்) சமூகத் தலைவர்களுக்கும் பட்டக்காரர் என்ற பட்டம் வழக்கில் உள்ளது. கவுண்டர் இடைக்காலத்தில் இங்கு குடியேறியவர் தேவேந்திற்குலத்தார் பழக்கங்கள் சிலவற்றை கவுண்டர் பின்பற்றி பட்டக்கார் என்ற பட்டத்தைத் தழுவியள்ளுர்.
பண்ணாடி:
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவேந்திர குலத்தாருள் ஒரு சாராரும், சேலம் மாவட்டத்தில் கொங்கு 24 நாடுகளில் சேலம் வடகரை நாட்டில் உள்ள தேவேந்திர குலத்தாரும் பண்ணாடி என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். இவரது குடியிருப்பு பண்ணாடி தெரு என்றே வழங்கி வருகின்றது. பண்ணாடி என்பதைப் பண்ணை + ஆடி எனப்பிரிக்கலாம். பண்ணை என்பது மருதநிலம், நீர் நிலை, வயல் எனச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது. பண்ணையார், பெருநிலக்கிழார், பண்ணையாள், வாரக்குடிவைத்துப் பயிர்செய்யும் நிலக்கிழார் என்ற அர்த்தத்தில் பண்ணாடி என்ற குலப்பட்டம் வழக்கில் வந்தது எனலாம். இங்கு வாழ் பிறவகுப்பு நிலக்கிழார்களையும், பண்ணாடி என்று அழைத்து வருவதாகவும் தெரிகிறது. பண்டைய நாளில் தேவேந்திர குலத்தார் பெரிய பண்ணைகள் வைத்து வேளாண்மை கண்டவர் என்பதால், செங்கோட்டைப்பகுதி வாழ் மக்கள் பாண்டியன் என்ற குலப்பட்டத்தைத் தரித்து வருவது போன்று, கொங்கு நாட்டில் உள்ள இம்மரபினர் பண்ணாடி என்ற பட்டத்தைத் தரித்து வருகின்றனர் எனலாம். இம்மரபினர் பற்றித் தோன்றிய செங்கோட்டுப் பள்ளில் இவரது பண்டையச் செல்வச் செழிப்பும் உட்கொள்ளும் ஆகாரம், அணியும் ஆபரணம், உடுக்கும் உடை இவற்றைப் பற்றிச் சிறப்பாய்ப் பேசப்பட்டுள்ளது. (செங்கோட்டுப் பள்ளு செ. 208 - 7 - 8; 283 – 6 - 15; 615 & 616 – 15).
பலகன் :

கொங்கு 24 நாடுகளில் சேலம் மாவட்டத்தில் பூவை, பருத்திப்பள்ளி, ஓமூர், சேலம் நாடுகளில் உள்ள தேவேந்திர குலத்தார். பலகன் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். பலகன் என்பது பலவான் என்பதிலிருந்து திரிந்ததா? என்பது ஆய்வுக்குரியது. பொதுவாகக் கொங்கு நாட்டிலுள்ள இம்மரபினர் வீரமிக்கவர் ஆவர். செங்கோட்டுப்பள்ளு புலியதனைப் பிடித்திழுக்க வல்லோய் (செய் - 768) என்று கூறுவது காண்க. அப்பள்ளு உரையாசிரியர் கூறுவார்: “கொங்குநாட்டு உழவர்கள் புலிகளைப் பிடித்திழுத்தல் அருமையன்று. கல்லும், காடும் வளமும் நிறைந்த அந்த நாட்டில் பன்னூறு ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உழைத்து உரமேறி அவர்கள் துட்ட விலங்குகளை எதிர்த்தெதிர்த்துப் போரிட்டு அதில் கைதேர்ந்தவர்கள். அம்மண்ணில் உழவர் குடி பெண்களும் கூட அப்படியே!”
(செங்கோட்டுப்பள்ளு, செய் - 768 விளக்கக் குறிப்பு) கொங்குநாட்டுப்
பெண்கள் முறத்தால் புலிகளை அடித்துக் கொல்லக் கூடிய வீரம் உள்ளவர் என்று பழம் செய்தி ஒன்று கூறும். பொதுவாய் தேவேந்திர குலத்தார் வீரத்திற்குப்பேர் பெற்றவர் என்பதை ஒருவரும் மறுக்க இயலாது. முக்கூடற்பள்ளில் மதயானை முதற் பிடிக்க வல்லோய் முன் மலைகளையும் முறித்தாய் என வருவது காண்க. (முக்கூடற்பள்ளு செய். – 118)

மண்ணாடி:
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குப் பகுதியிலுள்ள தேவேந்திர குலத்தார் மண்ணாடி என்ற குலப்பட்டம் தரித்து வந்ததாக தாஸ்டன் கூறுவார். மலையடிவாரத்தில் இருப்பதால் இவர் இப்பட்டத்தைக் கொண்டிருப்பதாகச் சிலர் கூறுவர். H.A. ஸ்டூவர்ட் பல்லவர் மன்றாடி என்ற விருதுப்பட்டம் உடையவர் என்றும், தேவேந்திர குலத்தார் பல்லவராய் இருக்கலாம் என்றும், மண்ணாடி என்பது மன்றாடியின் திரிபு என்றும் கூறுவார்.
H.A. Stuart says: The common title of Pallan is Muppan and Kudumban. But some style themselves as Mannadi, Kudumban is próbably a form of Kurumbar and Mannadi is a corruption of Manradi a title borne by the Pallavas (Kurumba People).
H.A ஸ்டூவர்ட் கூறுவது சரியன்று சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் மண்ணாடி என்பது மன்றாடியின் மருஉ என்றும், மண்ணாடி மலை நாட்டின் கிராமத் தலைவர் என்றும், பழனி மலைப்பகுதி வாழ் ஒரு மலைச் சாதி என்றும் பொருள் கண்டுள்ளது. விருபாஷிபுரம், அரியக்குடி பாளையப்பட்டுகள் புலையர்களைப் பழனி மலையிலிருந்து துரத்திவிட்டு, அப்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் பகுதிகளிலிருந்து பல குடும்பங்களை வரவழைத்துக் குடி அமர்த்தினர் என W. பிரான்சிஸ் கூறுவார். (W. Francis: Madurai District Gazattee) இவ்வாறு குடியேறியவர்தான் இன்று மன்னாடி என்ற பட்டம் தரித்துத் தம்மைக் குன்னவர் அல்லது குன்றவர் என்று கூறிவருகின்றனர். (J.H. Nelson. The Madurai Country. Page 100). கேரளாவில் பாலக்காட்டுப் பகுதியில் மண்ணாடியார் என்ற வகுப்பு இருப்பதாகவும், அவர் உழவர் குடி என்றும், அவர் முன்னோர். கொங்கு நாட்டின் காங்கேயம் பகுதியிலிருந்து குடியேறியவர் என்றும், பாலக்காட்டு மண்ணாடியார் என்பவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாழும் மன்றாடியார் என்பவரும் ஒரே மரபினர் என்றும், அவர் (பாலக்காட்டு மண்ணாடியார்) கொங்குவேளாளர் என்றும் புலவர் இராசு வாதிக்கின்றார். ஆனால் அன்னார் ஆராய்ச்சியில், பாலக்காட்டுப் பகுதிவாழ் மண்ணாடியாரின் முன்னோர் சோழநாட்டு உழவர்குடி என்றும், அவர் வேளாளரில் சத்திரியர் என்றும் இம்மரபைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியார் ஒருவர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். (புலவர். இராசு. எம். ஏ. செந்தமிழ்வேள் எம்.ஜி. ஆர். பக். 46).

மண்ணாடியார் சோழநாட்டு உழவர் குடி, வேளாளருள் சத்திரியர் என்பது தேவேந்திர குலத்தாரையே குறிக்கும். இந்தப் பாலக்காட்டு மண்ணாடியாருக்கு, கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் ஆலயத்தின் மேற்கு வாசல் மூலம் நுழையும் உரிமை இருந்து வருவதுவும், பழனிமலை அடிவாரத்தில் ஒரு மண்டபம் இவருடையதாயிருந்து வருவதும் இவர் தேவேந்திர குலத்தாரைச் சேர்ந்தவர் எனக் கருத ஏதுவாகிறது. (இந்து ஆலயங்களின், மேல்வாசல் அரச மரபினர்க்கு ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). பேரூரில் தேவேந்திர குலத்தாருக்கு என ஒரு தனி மண்டபம் இருந்துவருவதுவும், ஆலயத்தின் முக்கிய திருவிழாக்களில் தேவேந்திர குலத்தார் பங்கேற்பதுவும் நினைவுகூரத்தக்கது. மண்ணாடி, என்பது பண்ணாடியின் திரிபு எனக் கொள்ளத்தக்கது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் மண்ணாடி என்பது மன்றாடியின் திரிபு என்று கண்டுள்ளது சரியன்று. மன்றாடி என்பது இடையரைக் குறிக்கும் என்பது சோழர்காலக் கல்வெட்டுகளால் அரியத்தக்கது. மன்றாடியார் பற்றி K.A. நீலகண்ட சாஸ்திரி கூறுவதைக்காண்போம். விவசாயத்தை அடுத்து கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைப் பராமரிப்பு போன்ற தொழில்கள் மன்றாடியார் என்னும் வகுப்பினரால் போற்றப்பட்டன. இதைப்பற்றி கோயில் கல்வெட்டுக்களிலிருந்து நாம் சில செய்திகளை அறிகிறோம். மன்றாடியார் இத்துறையில் நல்ல அனுபவமிக்கவர்களாய் இருந்தனர். கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஆடு, மாடுகள் எல்லாம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை வைத்துக் கொண்டு கோயிலுக்குப் பால், தயிர், நெய் இவற்றை எல்லாம் அவர்கள் கொடுத்து வந்தனர். (K.A. நீலகண்ட சாஸ்திரி சோழர்கள், பாகம் - 2. முதற்பதிப்பு 1987, பக். 764 - 65)

குறிப்பு :
காலஞ்சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் 1977 - ல் தமிழக முதல்வர் ஆகும் முன் மாற்றுக்கட்சியினர் அவரை மலையாளி எனச்சாடியபோது அதை மறுக்கும் முகத்தான் தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த சுத்தத் தமிழன் என்றும், தம்முன்னோர் கோயம்புத்தூர் பகுதி வாழ் மண்ணாடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் முன்னாளில் பிழைப்புக்காகக் கேரளாவில் உள்ள பாலக்காட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும், எனவேதான் கோயம்புத்துர் பகுதி வாழ் மண்ணாடியார் வகுப்பைச்சேர்ந்தவன் என்றும் கூறியவர், மண்ணாடியார் என்பவர் தேவேந்திர குலத்தாருள் ஒரு உட்பிரிவு என்று 1977 - ல் வெளியிடப்பட்ட இவ்வாசிரியரின் மூவேந்தர் யார்? நூல் கூறவும், அரசியல் காரணமாய்த் தன்னை மன்றாடியார் என மாற்றிக் கூற முற்பட்டார். இக்கூற்றைப் பரவலாக்க அ.தி.மு.க. ஏடாகிய அண்ணாவில் எம். ஜி. ஆர். தனது வரலாற்றைத் தொடர்கட்டுரையாக எழுதச்செய்தார். கொங்கு கவுண்டர் தலைவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வகுப்பாருக்கு அரசியல் லாபம் தேடும் முகத்தான், தங்கள் மரபைச் சேர்ந்த புலவர் இராசுவைக்கொண்டு செந்தமிழ்வேள் எம். ஜி. ஆர் என்ற நூலை எழுதிப் பெரும்புலவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் ஆடம்பரமாய் வெளியிட ஏற்பாடு செய்தனர். 1977 தமிழகச்சட்டசபைத் தேர்தலுக்கு முன் எம். ஜி. ஆர். தேவேந்திரகுலத்தார் தான் மூவேந்தர் மரபினர் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு இவ்வாசிரியருடன் தஞ்சையிலுள்ள ஒரு முக்கிய பிரமுகர் மூலம் தெரடர்பு கொண்டார் ஏன்பது அறியத்தத்தது. (இரா. தேவ ஆசீர்வாதம், பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர். மூவேந்தர் யார்? முற்பகுதி. பின் இணைப்பு 3 - பக்145 – 152 -54)
(முற்றும்).

மூவேந்தர் யார்? பகுதி-40

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பாண்டியன்:
நெல்லை மாவட்டம் செங்கோட்டைப் பகுதி வாழ்தேவேந்திர குலத்தார் பாண்டியன் என்ற குலப் பட்டம் பூண்டு வருகின்றனர். சுமார். 70 - 80 ஆண்டுகளுக்கு முன், செங்கோட்டைப் பகுதிவாழ் மறவர் பாண்டியர் என்ற பட்டம் தங்களுக்கே உரியது என்றும், தேவேந்திர குலத்தார் அதைத் தரிக்கக்கூடாது என்றும், அன்றையத் திருவனந்தபுரம் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் என்றும், அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாண்டியன் என்ற பட்டம் தேவேந்திர குலத்தாருக்கே உரியது என்றும், அது மறவருக்கு உரியதல்ல என்றும் தீர்ப்பு வழங்கியதாக இப்பகுதிவாழ் தேவேந்திரகுலத்தார் கூறுகின்றனர். இவர் கைவசமுள்ள கிரையம், ஒத்திப்பத்திரங்களில் தம்மைப்பாண்டியன் என்றே பதிந்து வருகின்றனர். இப்பட்டத்தை மறவரும், சாணார் என்ற நாடாரும் தரித்து வருவதுடன், தாங்கள்தான் பாண்டிய மன்னர் பரம்பரை என்று கூறிவருகின்றனர். (மோசஸ் பொன்னையா - நாடார் வரலாறு. முத்துதேவர் – முக்குலத்தோர் - மூவேந்தர்) (குறிப்பு: இந்த இரு மரபினருள் பெரும்பாலோரின் தாயகம் தமிழகம் இல்லை. இவருள் பல பிரிவுகள் உண்டு. சிலபிரிவுகள் தமிழகத்தின் பழங்குடியினராய் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பிரிவுகள், வேற்றிடங்களிலிருந்து இடைக் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர் என்றே கருத வேண்டியுள்ளது. இவரது உடற்கட்டு, தோற்றம், பேச்சு பழக்கவழக்கம் இவைகள், மற்றப் பெரும்பாலான தமிழ் மரபினருடையவற்றிலிருந்து வேறுபடுவது இதற்குச் சான்றாக அமையும்.

பாண்டிய நாட்டிலுள்ள தேவேந்திரகுலத்தார் அனைவரும் பாண்டியன் பட்டம் தரிக்காமல், செங்கோட்டைப் பகுதிவாழ் இம்மரபினர் மட்டும், அதைத் தரித்து வருவது பாண்டிய நாட்டில் சில நூற்றாண்டுகளாய் மறவர் ஆதிக்கம் மேலோங்கியிருந்து வந்ததினாலேயாம். இங்கு பெரும் எண்ணிக்கையிலான பாளையப் பட்டுகள் இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை குறுநிலமன்னர் மற்றும், அவரது ஆளுகையின் கீழ் உள்ள மறவர், பாண்டியன் என்ற பட்டத்தைத்தரிக்க முற்பட்டதால் தேவேந்திர குலத்தார் குடும்பன் என்ற பட்டத்தையே மேற்கொள்ளலாயினர் எனலாம். எனினும் இவருள் சிலர் தங்கள், இயற்பெயர்களுடன் பாண்டி, பாண்டியன் என்பதைச் சேர்த்து வழங்கி வருவது கண்கூடு. இம்மரபுப் பெண்களில் கூடச் சிலர் பாண்டி, பாண்டியம்மாள் என்ற பெயர்களைக் கொண்டுள்ளனர். பாண்டிய நாட்டிலுள்ள பாணர் மேஸ்திரி என்போர் தங்களைப் பாண்டிய குலவேளாளர் என்பர். மற்றும் பாண்டிய நாட்டிலுள்ள பூர்வீக வண்ணார், நாவிதர், கம்மாளர், ஒச்சர், குயவர் இவர்கள் முறையே தங்களைப் பாண்டிய வண்ணார், பாண்டியநாவிதர், பாண்டியக் கம்மாளர், பாண்டிய ஒச்சர் பாண்டியகுலாலர் என்று கூறுவது வழக்கமாய் இருந்து வருகின்றது. இவ்வாறு இவர்கள் கூறிவருவது தாம், பாண்டிய நாட்டின் பூர்வீகக் குடியினர் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.
மூப்பன் : -
சோழ நாட்டில் திருச்சி மாவட்டத்திலும், தஞ்சை மாவட்டத்தின். மேல் பகுதியிலும், சேலம் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுமுள்ள தேவேந்திர குலத்தார் மூப்பன் என்ற பட்டம் பூண்டு வருகின்றனர். தேவேந்திர குலத்தாரைத் தவிர, கொங்கு நாட்டில் சாணாருள் ஒரு சாராரும், மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வலையரும் முப்பன் என்ற பட்டம் தரித்துவருகின்றனர். இவர் தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், பாபநாசம் தாலுக்காக்களிலும், திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவிலுமுள்ள சுருதிமான் வகுப்பார் அண்மைக்காலம் வரை மூப்பன் என வழங்கினர். இவருள் பொருளாதாரத்தில் முன்னேறியவர் அதை இழி சொல்லாகக் கருதி, மூப்பனார் என்று அழைக்க முற்பட்டுள்ளனர். இவரைப்பின்பற்றி இவ்வகுப்பைச் சேர்ந்த அனைவரும். மூப்பனார் என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர். எனினும் மற்ற வகுப்பார், பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள இம்மரபினரை. மூப்பன் என்றே தொடர்ந்து அழைத்து வருகின்றனர். மூப்பனார் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. மூப்பன் எனில் வயதில் மூத்தவன், ஊர்த்தலைவன் என்று பொருள்படும். திருச்சி மாவட்டத்தில் தேவேந்திர குலத்தார் வேளாண்மைத் தொழிலுக்கு வேலையாட்கள் சேர்த்து வேலை வாங்குபவரை மூப்பன் என அழைப்பதுண்டு. இம்மாவட்டம் முசிறி தாலுக்கா அரசலூர் கிராமக் கல்வெட்டு ஒன்றில் “பள்ள மாணிக்க மூப்பன்” (தென் இந்திய கோயில் சாசனங்கள் பாகம் I. எண் 796) என்று பொறிக்கப்பட்டுள்ளது காண்க, ஊர்சபைகளுக்கு புள்ளி மூப்பன், நாட்டு மூப்பன் என்ற சமூகத் தலைவர்கள் இவர் மத்தியில் இருந்து வருகின்றனர். ஊர் சமூகப் பஞ்சாயத்துத் தலைவர் மூப்பன் என்றே வழங்கி வருகின்றனர். ஊர் சமூகப் பஞ்சாயத்துத் தலைவரை மூப்பன் என்று வழங்கும் பழக்கத்தை ஒட்டி இப்பகுதிவாழ் தேவேந்திர குலத்தார் அனைவரும் மூப்பன் என்பதைக் குலப்பட்டமாகப் பூண்டு வருகின்றனர் எனலாம்.
பணிக்கன்.
தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர், பாபநாசம் தாலுக்காகளில் தேவேந்திரகுலத்தாருள் ஒருசாரார் பணிக்கன் என்ற குலப்பட்டம் தாங்கி வருகின்றனர். பணிக்கன் என்பது படைக்கலம் பயிற்றுவோன் என்ற பொருளில் இவருக்கு வழங்கி வருவதாகக் கருதற்பாலது. சென்னை பல்கலைக் கழக அகராதியில் பணிக்கன் என்ற சொல்லுக்கு ஆசிரியர், படைக்கலம் பயிற்றுவோன், கூத்து பயில்விப்போன் தலைமைக் கொற்றன், தச்சன், யானைப்பாகன், நாவிதர் தலைவன் விஷவைத்தியன், சாராயம் காய்ச்சுவோன், பள்ளர் சாதியில் ஒருவகுப்பு எனப் பொருள் கண்டுள்ளது. கேரளாவில் போர்ப்பயிற்சி செய்பவன், தேகப்பயிற்சி கற்பிக்கும் ஆசிரியன் இவர்கள் பணிக்கன் என வழங்கி வருகின்றனர். ஈழவர், இலை வாணியர் இவருள் ஒரு சாரார் பணிக்கன் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர்."
தொண்டைமான்:

திருச்சி மாவட்டத்தில் தேவேந்திரகுலத்தாருள் ஒரு பிரிவினர் தொண்டைமான் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். கள்ளர், பள்ளி (படையாட்சி) ஏன்? கொங்கு வேளாளர் என வழங்கிவரும் கவுண்டருள் சிலரும் தொண்டைமான் என்ற குலப்பட்டம் தரித்து வருகின்றனர். சங்ககாலத்தில், சோழரின் கீழ் இருந்த இளந்திரையன் தொண்டைமான் என்ற பட்டத்தைத் தரித்திருந்தான். பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியில், கலிங்கப் போரைத் தலைமை தாங்கி நடத்திய படைத்தலைவன் கருணாகரன் தொண்டைமான் என்ற பட்டம் பூண்டிருந்தான். இவனைப் பல்லவ இளவரசன் என்பர். சோழர் காலக் கல்வெட்டில் சோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரத் தொண்டைமானார் (SII.Vol. IV. -862) என்று பொறிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மன்னர் வடுகர் இனத்தைச் சேர்ந்தவர், இவர் தொண்டைமான் என்ற பட்டம் தாங்கி வந்தனர் என்பதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டைத் தொண்டைமான் கீழிருந்து பணிபுரிந்த கள்ளருள் சிலர் தொண்டைமான் என்ற குலப்பட்டம் பூண்டதால் புதுக்கோட்டைத் தொண்டைமான் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற தவறான கருத்து நாட்டில் நிலவுகின்றது. இவ்வாசிரியரும் ஏற்கனவே இவரைக் கள்ளர் என்றே எழுதிவந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதுக்கோட்டை அரசைத்தோற்றுவித்தவர் தொண்டைமண்டலப் பகுதியிலிருந்து இங்கு இடைக்காலத்தில் குடியேயேறியவர் ஆவர்.
தொண்டைமண்டலத்திலிருந்து வந்ததால் தொண்டைமான் என்ற பட்டத்தைப் பூண்டனர் என வரலாற்றறிஞர் கூறுவர். இவர் தொண்டைமான், இளந்திரையன் மற்றம் கருணாகரன் தொண்டைமான் வழித் தோன்றல் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. தொண்டைமான் இளந்திரையன் மள்ளர் குடியைச் சேர்ந்தவன் என்பது நாம் அறிந்ததுவே. கருணாகரத் தொண்டைமான் வேளாளன் என்று கல்வெட்டு கூறுவதால் அவன் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவனே ஆவன். திருச்சி மாவட்டத்தில் தொண்டைமான் என்ற பட்டம் தரித்துவரும் தேவேந்திரகுலத்தார் ஏற்கனவே தொண்டை மண்டலப் பகுதியில் வாழ்ந்து அப்பகுதி வேற்று நாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, அங்கிருந்து தெற்கே குடிபோந்தவரின் வழித் தோன்றல்கள் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. செங்கற்பட்டு மாவட்டக் குறிப்பில், தேவேந்திர குலத்தார் அங்கு அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் கண்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டக் குறிப்பு தயாரித்த பின்னர், எடுக்கப்பட்ட மக்கள் குடிக்கணக்கில் இவரது எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதற்குக்காரணம் ஆங்கிருந்த, தேவேந்திர குலத்தாருள் ஒரு சாரார் இடையே வெளி இடங்களுக்குச் சென்றிருக்கவேண்டும்; மற்றும் இன்னொரு சாரார் பள்ளி (படையாச்சி - வன்னியர்) வகுப்பாருடன் கலந்திருக்கவேண்டும். (பள்ளர் பெண்பால் பெயர் - பள்ளியும், பள்ளி மரபுப் பெயரும் ஒன்றாய் இருப்பதால் இவ்விணைப்பு சாத்தியமே ஆகும்) பள்ளி வகுப்பில் இந்திர குலத்தார் என்ற ஒரு உட்பிரிவு இருந்து வருகின்றது. இவர் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவரா? என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-39

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

குடும்பவாழ்க்கை தமிழகத்தில் முதன்முதலில், தேவேந்திர குலத்தாரிடையே தோன்றியதாலும், அவரைப் பின்பற்றியே பிற குடிகள் திருந்திய குடும்ப வாழ்க்கை மேற்கொண்டதாலும், குடும்பன் என்ற பெயர் சிறப்பாய் இவர்களுக்கே உரித்தாயிற்று எனலாம். அல்லி அரசாணி மாலையில் அர்ச்சுனனைப் பெண் உருவங்கொண்ட கிருஷ்ணன் வாடா குடும்பன் மதி பழிவானென்றழைத்தார். எனக் கண்டிருப்பதிலிருந்து தேவேந்திர குலத்தாருக்கான குடும்பன் என்ற குலப்பட்டம் பாண்டவருள் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கும் சூட்டப்பட்டிருப்பதால், பாண்டவரும் தேவேந்திரிகுலத்தாரும் ஒரே மரபைச் சேர்ந்தவர் எனக்கருத ஏதுவாகின்றது. (அல்லி அரசாணிமாலை. பக். 72) பாரதப்போரில் மூவேந்தர் கலந்துகொண்தாடகச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன என்பது நாம் அறிந்ததே. பண்டியரைப் பஞ்சவன் என்றும், கெளரியா என்றும் சங்கு இலக்கியம் கூறுவதும், கரிவலம்வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் கல்வெட்டுகள் தேவேந்திர குலத்தாருக்குப் பாண்டியன் பஞ்சவன் என்ற விருது வழங்கியதாகக் கூறுவதும் இவண் நினைவிருக்கத்தக்கது. இன்று உயர்குடி என்று பெருமை பாராட்டிவரும் அநேக மரபுகளின் குடும்ப வாழ்க்கை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வாறு அமைந்திருந்ததென்பது பற்றி மாவட்டக் குறிப்புகள், தென்இந்தியக் குலங்களும், குடிகளும் என்ற நூல்கள் விரிவாய் எடுத்து இயம்புவதைக் காணலாம். பெரும்பாலான வகுப்புகள் மிகவும் சமீபகாலத்திலேயே, திருந்திய குடும்ப வாழ்க்கை மேற்கொண்டன என்பதற்கும் இவைகள் முற்காலத்தில் திருந்தாத வாழ்க்கை மேற்க்கொண்டனவாய் இருந்தன என்பதற்கும், இவைகளிடையே நிலவும் பண்டையப் பழக்க வழக்கங்களின் எச்சங்கள் எடுத்துக்காட்டாய் அமையும். தெலுங்கருள் பல வகுப்பார் தமிழகத்தில் குடியேறி நாலைந்து நூற்றாண்டுகளாகியும் கூட, அவரிடையே இன்னும் முற்றும் திருந்திய குடும்ப வாழ்க்கை ஏற்பட வில்லை என்பது மாவட்டக் குறிப்புகள் மற்றும் குலங்களும், குடிமகளும் என்ற நூல்களிலிருந்து அறியலாம். இதுபற்றி அறிஞர் சிலர் வெளியிட்டுள்ள செய்திகளைக் காண்போம்.
எட்கர் தர்ஸ்டன் கூறுவதாவது: “தமிழகத்தில் கம்மவார்களிடத்தில் மணமகன் சில சமயங்களில் மணமகளைவிட வயதில் அதிக இளமையாய் இருக்கக் காணலாம். மக்கள் குடிக்கணக்கெடுப்பில் இருபத்திரண்டு வயதுப்பெண் இரண்டு வயதுள்ள தன் கணவனை ஒருதாய் குழந்தையை வைத்திருப்பதுபோல வைத்திருந்தாள் என ஒரு செய்தி காணப்படுகிறது.”

Edgar Thurston says: “In Tamil country among kammas the bridge - groom is said to be sometimes much younger than the bride and a case is on record of a wife of twenty two years of age who used to carry her husband in her lap as a mother carries her child. [Edgar Thurston: Castes and tribes of South India. Vol. 1,100]
இதே போன்று கொங்கு நாட்டில் இன்று கொங்குவேளாளர் எனக் கூறி வரும் கவுண்டர்களிடம் சிறு பையன்களுக்கு வயது வந்த பெண்ணை மணம்முடிக்கும் பழக்கம் உண்டு. C.M. இராமச்சந்திரன் செட்டியார் இப்பழக்கம் பற்றி கூறுவதாவது: கவுண்டர்களிடையே திருமண உறவுகளில் மாமன் மகளை மணப்பது முதல் உரிமை. அவருக்கு உரிமைப் பெண் என்ற பெயரும் உண்டு. உரிமைப் பெண் மணமகனைவிட மூத்தவளாக இருக்கலாம். இந்தக் கொள்கை சிறிது காலம் வரை வழக்கத்தில் இருந்தது. (CM. இராமச்சந்திரன் செட்டியார். கொங்கு நாட்டு வரலாறு பக்கம் - 54). 
இம்மாதிரி நிகழும் திருமணங்களில் மணமகனது கடமையை வீட்டிலுள்ள வயது வந்த ஆண் மகன் நிறைவேற்றுவான். நாலு வயதுத் தகப்பனுக்கு 2 - வதுக் குழந்தை இருக்கும். இந்தப் பழக்கத்தால் பிறந்த குழந்தையின் தகப்பன் யார்? என்று அருதியிட்டுக் கூற இயலாது. [Edgar Thurston Castes and tribes of south India. Vol.II Page - 193)
நாட்டுக்கோட்டைச் செட்டியாரிடையும் இப்பழக்கம் உண்டு. பிறமலைக் கள்ளர்களிடையே ஏற்கனவே கூட்டுக்கணவர் முறை (Polyandry) வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. இவரது பழக்கம், பற்றி, எட்கர் தர்ஸ்டன் கூறுவதாவது: “பிறமலைக் - கள்ளர்களிடம் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் உள்ளது. பெரும்பாலும் ஒரு பெண் பத்து, எட்டு, ஆறு, இரண்டு கணவருக்கு மனைவி எனவும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவளது கணவன்மார் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தம் குழந்தைகள் என்பர். இன்னுமொரு பெரிய விசித்திரம் என்னவெனில் பத்து, எட்டு, ஆறு, அல்லது இரண்டு தகப்பன்மார் குழந்தைகள் என வழங்காமல் எட்டும் இரண்டும், ஆறும் இரண்டும், நான்கு இரண்டும் (நாலுஇரண்டு) தகப்பன்மார் குழந்தைகள் எனவழங்குவர்.
Edgar Thurston says: "One of the customs of the western Kallas is especially curious. It constanly happens that a woman is the wife often, eight, six or two husbands who are held to be the fathers jointly and severally of any children that may be born of her body and still more curiously when the children grow up they for some unknown reasons invariably style themselves as the children not often, eight or Six fathers as the case may be, but of eight and two or six and two or a four and two fathers”. (Edgar Thurston. Castges and Tribes of South India. Vol. III P.77)

தொடிய நாயக்கர் ஒரு பெண்னைக் குடும்பத்திலுள்ள ஆண்கள் மற்றும் உறவினர் அனைவரும் மனைவியாகப் பாவித்ததாக அறிகிரோம். (Edgar Thurston. Castes and tribes of South India. Vol. V III Page 184 - 85 & 93) மேலே கூறிய பழக்கங்களின் எச்சங்கள் நாடு விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட சிலமரபினரிடையே இன்னும் வழக்கில் இருந்து வருவதாக அறிகிறோம். இதுபற்றி கி. வரதராசுலு கூறுவதாவது: "தருமபுரி மாவட்டத்தில் பாலுறவு முறைகளில் சில நெகிழ்ச்சியான போக்குகளை இங்கு குறிப்பிடுதல் அவசியம். தருமபுரி, கோவை மாவட்டங்களில் மருமகளுக்கும், மாமனுக்கும் உள்ள பாலுறவுகளைப்பற்றி மானிட இயல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளர். அதன் எச்சங்களை இன்னும் காணலாம். இது ஒரு குறிப்பிட்ட சராரிடையே மட்டும் காணப்படுகிறது. இதைப் போலவே தருமபுரி மாவட்டம் கரூர் விட்டாரப் பகுதிகளில் அண்ணன் மனைவிக்கும், தம்பிமார்களுக்கும் இடையே பாலுறவுகள் சென்ற தலைமுறை வரை அனுமதிக்கப்பட்டின. இன்னும் அதன் எச்சங்களைக் காணலாம். (S.V.சுப்ரமணிம், தொகுப்பு ஆசிரியர் நாட்டுப்புற இயல். பக். 237 - 38).
நீலகிரி மலைவாழ் தோடர்களிடம் பல கணவன்முறை இன்னும் நீடிக்கிறது. ஒரு குடும்பத்தில் மூத்த சகோதரன் மனைவியை அவனது உடன்பிறந்தவர் அனைவரும் மனைவியாகக் கொள்வர். கேரள நாயரிடம் பெண்கள் வயதுக்கு வந்த உடன் தாலிகட்டு என ஒரு சடங்கு நடத்தி அந்தத் தாலிக்கட்டில் மணமகனாகப் பங்கு கொள்பவனுக்கு தாலி கட்டி முடிந்த உடன், சன்மானமாக ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து அவனை அனுப்பி விடுவர். இம்மாதிரித் தாலி கட்டப்பட்ட பெண் தான் விரும்பும் ஆடவருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். ஒரே காலத்தில் 12 ஆடவருடன் உறவு வைத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த மாதிரி உறவு மூலம் பிறந்த குழந்தைகளைப் பன்னிரண்டு தகப்பன்மார் குழந்தைகள் (Children of twelve fathers) என்று அழைப்பர். தகப்பன் நம்பூதிரிப் பார்ப்பனராய் இருக்கலாம். ஆனால் அவர் மூலம் பிறந்தவர் நாயர், மேனன், நம்பியார், குரூப், பிள்ளை என்ற பட்டம் தரித்துத் கொள்வர். இப்பழக்கம் மருமக்கத்தாய முறை பின்பற்றப் பட்டதன் விளைவு ஆகும். இங்கு பொதுவாய் ஆண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது. பெண்களுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. நம்பூதிரிப் பார்ப்பனர் தாம் விரும்பும் நாயர் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளலாம். அதே போன்று நாயர் ஆடவரும் தாம் விரும்பும் நாயர் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளலாம். நாயர் பெண்கள் மறுப்புச் சொல்லக் கூடாது. கேரளாவில் உள்ள தீயர், இரவர் இவர்கள் இடையே ஒரே பெண்ணை வீட்டிலுள்ள சகோதரரர் அனைவரும் மனைவியாகக் கொள்வர். இங்குள்ள கம்மாளரும் அப்படியே. (K.M.Kapada.B.A., Ph.D. Marriage and family life in India.]

தமிழகத்தின் சுதேச சமத்தானங்களின் மன்னர், தம் ஆட்சிக்குட்பட்ட பெண்களில் தாம் விரும்புகிறவரை அடைய உரிமை கொண்டாடினர். மன்னர் யாரையாவது விரும்பினால் அதற்கு அப்பெண் உடன்படவேண்டும். சமீன்களிலும் இந்நிலையே வழக்கில் இருக்கின்றது. இதை இராஜ விசுவாசம் என்பர். சமஸ்தானங்களில் பொதுவாய் தெலுங்குப் பார்ப்பனர் இராஜகுருவாய் இருந்து வந்தனர். இவர்கள்தான் சுதேச மன்னர், அல்லது பட்டத்துக்கு உரியவர் திருமணங்களை நடத்தி வைப்பர். இத்திருமணங்களில் சாந்தி முகூர்த்தம் என்ற ஒரு சடங்கு நடைபெற்றால்தான் அவை நிறைவுபெறும். இச்சடங்கு நடைபெறாமல் மணமகனுக்கும், மணமகளுக்கும் கணவன் மனைவியாய்க் கூடி வாழ முடியாது. இச்சடங்கை நடத்தி வைப்பவர் இராஜகுருவே ஆம். மலபாரில் பதினேழாம் நூற்றாண்டு இறுதி பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமணம் ஆன சாமரின் திருமணம் நடத்திவைக்கும் நம்பூதிரி அல்லது வேறு குரு அனுமதியின்றி, அரசியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. அரசிக்கு இராஜகுரு மூலம் முதற் குழந்தை தரிக்கி வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் வழக்கில் இருந்தது. மற்றும் பிரபுக்களுக்கும் இதே பழக்கம் வழக்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edgar Thurston says: “Hamilton writing concerning Malabar at the end of the seventeenth and the beginning of the eighteenth century says that when thë Zamorin marries, he must not co habit with his bride till the Nambudary or other priest has enjoyed her and if he pleases may have three nights of her company because the first fruits of her nuptil must be on holy oblation to the god he worships and some of the nobles are so complacent as to allow the clergy the same tribute (Edgar Thurston - Castes & Tribes of south India ÉVöI. V. Page 210.)
Abbe I. A. Duboin says: There exists in the same part of the country another caste known as Tottiyan in which brother uncles nephews and other relatives are also entitled is posses these wives in common (Abbe Duboin - Hindu manners customes and cermonies - page 117).
Rev. அபே JA டுபாய் கூறுவதாவது:- தமிழகத்தில் தொட்டியன் என்ற வகுப்பார் தங்களது சகோதரர்கள், மற்றுமுள்ள உறவினர்களின் மனைவியருடன் பொதுவாக அனைவரும் உடலுறவு கொள்ள உரிமை பெற்றிருந்தனர். (Rev. அபே. JA டுபாய் - இந்து பழக்கவழக்கங்கள் – பக். 117)
தொட்டிய நாயக்கர் புரோகிதனே மணமகளோடு முதல் இரவைக் கழிக்கும் உரிமை பெற்றிருந்தனர். பார்ப்பனரைத் தவிர மற்ற மரபினர். சூத்திரர் என்பதால், பார்ப்பனர் அனுமதியின்றி, அவர் தாம் திருமணம் செய்த பெண்களோடு கூடி வாழ உரிமை அற்றவர்களாய் இருந்தனர்.
நாய்க்கர் ஆட்சியில் நாயக்க மன்னரை அண்டிவாழ்ந்த தமிழ், மரபினர் தெலுங்கரது பழக்க வழகங்களைப் பின்பற்றலாயினர். இவற்றில் முக்கியமானது தங்களது திருமணங்களைத் தெலுங்குப் பார்ப்பனர் புரோகிதரைக் கொண்டு நடத்துவது ஆகும், தெலுங்கருக்குள் சாந்தி முகூர்த்தம் சடங்கு (கணவன் மனைவி முதல் இரவு) நடைபெற்றால்தான் திருமணம் நிறைவு பெறும். இந்த சாந்தி முகூர்த்தச் சடங்கை நடத்தி வைக்கும் பார்ப்பனப் புரோகிதர் வயது முதிர்ச்சியினாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ முதல் இரவு அன்று தன் கடமையை நிறைவேற்ற முடியாமற் போனால், அந்த மரபிலுள்ள பெரியவர் ஒருவரோடு அந்த மணமகள் முதல் இரவைக் கழிக்க வேண்டும். இதற்கு அந்தப் பெண் உடன்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அவள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. அப்படி மறுத்தால் அந்தப்பெண் கட்டாயப் படுத்தப்படுவாள். நாயக்கர், ஆட்சி தமிழகத்தில் ஏற்படுமுன் தமிழர் பார்ப்பனக் குருக்கள் தலைமையில் திருமணம் நடத்தும் பழக்கம் வழக்கில் இல்லை என்றே தெரிகிறது. தமிழ்ப் பார்ப்பனப் புரோகிதர் தங்கள் மரபினர்க்கு மட்டும் நன்மை துன்மைச் சடங்குகளை நடத்தி வருவது கண்கூடு. காலப்போக்கில் குல உயர்வு தேட முனைந்த பல்வேறு பிரிவினரும். தெலுங்கு பார்ப்பனப் புரோகிதர்களைச் சமயக்குருக்களாக ஏற்று, அவரைக் கொண்டு திருமணம், சாவுச்சடங்குகளை நடத்த முற்பட்டனர். சமீபகாலம் வரை இன்று உயர்சாதி எனப் பாராட்டி வரும் மரபினர். இந்த, சாந்தி முகூர்த்தச் சடங்கை நடத்தி வந்தனர் என்றும் மணப்பெண் முதல் இரவைத் தெலுங்கு பார்பபனக் குருவோடு கழித்து வந்ததாகவும் செவிவழிச் செய்தியாக நாம் அறிகிறோம். சுயமரியாதைத் திருமணம் நாட்டில் பரவியபின்னரும் கூடத், தெலுங்குப் பார்ப்பனக் குருக்களை வைத்து தமிழ்மரபினரில் பலர் திருமணம், சாவுச்சடங்கு மற்றும் புதுமனை புகுவிழாச் சடங்குகளை நடத்தி வருவது கண்கூடு.

செங்குந்தர், கைக்கோள வகுப்பினர் தத்தம் குடும்பங்களிலிருந்து ஒரு பெண்ணை கோயிற் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். இப்பெ ண்களுக்கு கோயில்களில் பொட்டுக் கட்டுவர். இம்மாதிரிக் கோயிலில் பொட்டுக் கட்டுபவர் தேவரடியார் என வழங்கினர். சில மரபினர் பெண்களுக்குத் திருமணம் செய்யாமல், அவர் விரும்பும் ஆடவருடன் கூடிப் பிள்ளைபெற அனுமதித்துள்ளனர். இப்பழக்கத்தை நியாயப்படுத்தச் சில சடங்குகளைச் செய்தனர். கொங்கு நாட்டு மன்றாடியார் வகுப்பைச்சேர்ந்த ஒரு சாரார். 150 ஆண்டுகளுக்கு முன், பழனிப் பகுதியில் பொருபான் என்ற ஊரில் குடியேறியவர், பின்பற்றி வந்த பழக்கத்தை அண்மையில் “இந்து நாளேடு” (The Hindu) படம் பிடித்துக் காட்டியுள்ளதைக் கீழே காண்போம்.
பொருபான் என்பது ஒரு பழைமையான ஊர். அதில் பெரும்பாண்மையாய் இருப்பவர் மன்றாடியார் வகுப்பைச்சேர்ந்தவர். சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் இவர் கொங்குநாடாகிய சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து இங்கு குடியேறியவர் ஆவர். இவருள் ஒரு பிரிவில் பெரும்பாலான குடும்பங்கள் ஒரு விசித்திரமான பழக்கத்தைப் பின்பற்றுகின்றன. அவர்தம் பெண்களுக்கு மணமகனைத் தேடுவதில்லை. நகைகளுக்காகவும், திருமணவிருந்து செலவிற்கு எனவும், பணம் விரையம் செய்வதுமில்லை. அவர் செய்வதெல்லாம் ஒரு வெள்ளிக் காப்பை (வளையல்) தங்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் தொங்க விடுவதுதான். அந்த மரத்தை நெடை மரம் என்பர். இந்த நெடை மரத்தை அந்த வீட்டின் காவல் தெய்வமாக வணங்குவர். வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் வெள்ளிக் காப்பு தொங்கினால், அந்த வீட்டிலுள்ள பெண்ணிற்குத் திருமணம் நடந்து விட்டதாகக் கருத வேண்டும். அந்த வீட்டிலுள்ள பெண் நெடை மரத்தைத் தினமும், வணங்கி வருவர். அந்தப் பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ள விரும்பும் ஆடவர் தாராளமாய் அந்த வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். இம்மாதிரி உறவு மூலம், பிறந்த குழந்தைகளைக் கடவுளின் பிள்ளைகள் என்பர். இப்பழக்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கில் இருந்து வந்துள்ளது. (The Hindu 21 – 4 - 1978)

The Hindu Reports: A girl getting married to a tree may sound strange but the practice prevailed in Porbhan until a quarter of a century ago. Thoughy the practice has been given up, to know how the strange custom was in vogue for many years make one také a close look of the village, of the temples and festivals.
"This is an old village and its people a majority of them. belonging to the Manradi community came from Kongu Nadu Coimbatore and Salem districts over 150 years ago. Many families among a sub - sect of the community followed a strange marriage custom. They did not boother to choose a match for thier daughters. They did not squander their money for jewels and marriage feasts. All that the girl did was to hang a silver bangle on a tree in front of house. 'Nedai Maram’ as it is used to be called. The tree is the protector of the house. The bangled tree in front of the house was an indicattion that the girl of the house was married. She worshipped the tree every day. Her house was open to special visitors and the children born to the girl were looked upon as god's Children'. (The Hindu 21-4-1978.)
காரைக் கட்டு வேளாளர் இடையே உள்ள பழக்கம் பற்றி W.R. கார்னிஸ் கூறுவதாவது:- காரைக் கட்டார் தம்மை இன்று கார் காத்த வேளாளர் என்பர், இவரிடையே விசித்திரமான பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன. பழனிப் பகுதியிலுள்ள இம்மரபினர்க்கு சொத்து இருந்து, ஆண் வரிசு இல்லாமல் பெண் வாரிசு மட்டும் இருப்பின் முறைப்படி பெண்ணை தக்க வயதுடைய ஆண் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில்லை. மாறாக அவளை ஒரு சிறு பையனுக்கோ, அல்லது வீட்டின் வாசற்படி, அல்லது வீட்டின் ஒரு பாகத்திற்கோ மணமுடித்து வைப்பர். அந்தப் பெண் தன் மரபிற்குள் தான் விரும்பம் ஆடவருடன் கூடிக் குழந்தைகள் பெறுவர். இம்மாதிரிப் பிறக்கும் குழந்தைகள் அவளது தந்தையின் சொத்துக்களுக்கு வாரிசாவர்.

W.R. Cornish says:- "In the case of Karaikat Vellalas whenever an estate is likely to descend to a female in default of a male issue she is forbidden to marry an adult but goes through the ceremony of marriage with some young male child or in some cases with a portion of the father's dwelling - house on the understanding that she shall be at liberty to abuse herself with any man of her caste to whom she may take a fancy and her issue so begotten inherits the property which is thus retained in the woman's family. (Surgeon Major W.R. Cornish, - Census of Madras Presidency 1871. Vol. I as found in J.H. Nelson. Madurai Manual. VoIII. Page. 55) .
பழனிப்பகுதியில் வாழும் காரைக் கட்டு வெள்ளாளரிடையே இன்னொரு விநோதப் பழக்கமும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. விதவைகள் மறுமணம் செய்து கொள்வர். கணவனது உறவினரோடு பெண்கள் கூடி அவர்களை மகிழ்விப்பர், குடும்பத்திற்கு வெளியே, பெண்கள் சோரம் போனால் சமூகத்திலிருந்து அவர் நீக்கப்படுவர். இத்தகைய பழக்கம் இருந்துவந்தது இவரிடையே ஏற்கனவே கூட்டுக் கணவன் முறை பின்பற்றப் பட்ட தென்பதைப் புலப்படுத்துவதா யுள்ளது.
“An interesting account written by Licuftenant Ward in 1824 of the Karaikat Vellalar of Palani Hills is referred to in the Madurai Manual. Widows are free to remarry and wives are accustomed it is supposed to grant the last favour to their husbands' relatives. Adultery outside the husband's family entails expulsion from caste. This custom is probably the survival of fraternal polyandry (Madras census Report 1891. Page 232).
சோழப் பேரரசு காலத்தில் தமிழகம் முழுவதும் குடும்பு முறையில் ஊராட்சி நடைபெற்று வந்தது. சோழ அரசு வலி குன்றியகாலை பாண்டியநாடு தன்னுரிமை பெற்றதோடு, அது சோழ நாட்டையும் வென்று அதைத் தன் மேலாதிக்கத்திற்குள் கொண்டு வந்தது. கி.பி.14 ஆம் நூற்றாண்டில் மதுரை விசயநகர அரசு அதைத் தொடர்ந்து நாயக்கமன்னர் ஆளுகைக்குள் வந்து விட்டாலும் பாண்டிய நாட்டின் சில பகுதிகளை குறிப்பாகத் தென்பாண்டி நாட்டில், பாண்டியர் குறுநில மன்னர்களாக இரண்டு மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்து, வந்திருக்கின்றார். கி.பி.18 - ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கூடப், பாண்டிய மன்னர் இருந்ததாகக் குற்றாலக் கல்வெட்டு கூறுவதாக அறிஞர் சிலர் கூறுவர். எனவே குடும்பு முறையானது பாண்டியர் ஆட்சிக்குள்பட்ட இடங்களில் தொடர்ந்து நீடித்துவந்ததாகத் தெரிகிறது. விசயநகர ஆட்சி தமிழகத்தில் பரவும் வரை பாண்டியர் ஆட்சி நடைபெற்று வந்ததால் பாண்டியநாடு, கொங்கு நாடு இங்குள்ள தேவேந்திரகுலத்தார் தொடர்ந்து குடும்பன் என்ற பட்டம் பூண்டு வருகின்றனர் எனலாம். முன்னர் குறிப்பிட்டது போன்று, சோழநாட்டில் இவர் மூப்பன், காலாடி, பணிக்கன், வாய்க்காரன் என்ற குலப்பட்டங்களைத் தரித்து வருகின்றனர். இங்கு இவரது குலப்பட்டங்கள் எவ்வாறு இருப்பினும் பண்டையக் குடும்பு முறையைப் பின்பற்றி, ஊர் பஞ்சாய்த்துமுறை இவர் மத்தியில் அமுலில் இருந்துவருவது அறியத்தக்கது. கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் காணப்படும் அக்கசாலை, வாரியன், இளந்தாரி என்ற உறுப்பினர் இம்மரபினரின் இன்றைய ஊர்ப் பஞ்சாயத்துகளிலும் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலான இதர மரபினரிடம் இவ்வித அமைப்பு இல்லை என்று அந்தர் பெத்தெய்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. (Andhare Betteilli. Caste old and new page 80).
(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-38

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

குடும்பன்:

குடும்பன் என்ற குலப்பட்டம் பள்ளுநூல்கள் தோன்றிய பின்னரே பெரு வழக்கில் வந்ததாகத் தெரிகிறது. அதற்கு முன்பு கரிவலம் வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் ஆலயங்களில் திருமலை நாயக்க மன்னனது ஆணையால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தேவேந்திரக் குடும்பன் என்று கண்டுள்ளது என முன்னர் குறிப்பிடப்ட்டிருப்பதை வாசகர் அறிவர். குடும்பன் என்பது ஒரு குடும்பத்தின் தலைவன் ஆவன். ஒரு கணவன் மனைவி அவரது குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து கூடி வாழ்வது குடும்பம் எனப்படும். குடும்பம் தனி உடைமை ஏற்பட்டபின் உருவானது ஆகும். தகப்பனே குடும்பத்தின் தலைவனாவான்; அவனுக்குப்பின், அவனது ஆண் சந்ததியினரே அவனது உடைமை களுக்கு உரியவராவர். மக்களிடையே நாகரிகம் ஏற்பட்ட பின்னரே இம்மாதிரிக் குடும்பமுறை மக்களிடையே தோற்றம் பெற்றது என்பர் ஆராய்ச்சியாளர். தமிழகத்தில் முதன் முதல் திராவிடராகிய மருதநில மக்களிடையேதான் குடும்பு முறை ஏற்பட்டது எனலாம். இந்தக் குடும்பன் என்ற பட்டம் கரிவலம் வந்த நல்லூர், சிவிலிபுத்தூர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள செய்திபற்றியும், பள்ளு நூல்கள் தோன்றியபின், அது பெரும் வழக்கில் வந்தது பற்றியும் மேலே கூறியிருப்பது நினைவிருக்கத் தக்கது. இக்கல்வெட்டுகளும், பள்ளு நூல்களும் நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியவை ஆகும். எனவே, நாயக்கர், ஆட்சிக்குமுன் தமிழ் வேந்தர் ஆட்சியின்போது குடும்பன் என்ற பட்டம் இம்மக்களுக்கு ஏற்பட்டிருந்ததா? என்பது ஆய்வுக்குரியது. தமிழ் அகராதிகளில் குடும்பன் என்பதற்குப் பொதுவாய் பள்ளரின் தலைவன் என்று பொருள் கண்டுள்ளனர். சென்னை பல்கலைக் கழக அகராதியில் (Madras lexicon) குடும்பன் என்பதற்கு நிலம் அளப்பவன் என்று பொருள் கண்டுள்ளது. கி.பி. 9 - 10 நூற்றாண்டுகளில் தோன்றிய திவாகரம், பிங்கலந்தை நிகண்டுகளில் குடும்பன் என்பது இடம் பெறக்காணோம். ஆனால் அதற்குப் பதில் குடும்பினி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பினி என்பதற்கு அந்நிகண்டுகளில் குடும்பத்தலைவி என்று பொருள் கண்டுள்ளது. இடைக்காலச்சோழ மன்னர் கல்வெட்டுகளில் “குடும்பிகள்” என்ற சொல் இடம்பெற்றுள்ளது. ஆக குடும்பினியின் ஆண்பால் பெயர் “குடும்பி” என வழங்கியதாக அறிகிறோம். கி.பி.16 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய சூடாமணி நிகண்டில் “குடும்பினி” என்பதற்குச் தேவி என்று பொருள் கண்டுள்ளனர். தேவி என்பது பெண் தெய்வத்தைக் குறிப்பதுடன், அது மன்னரின் பட்டத்து ராணியையும் குறிப்பதாயுள்ளது. மன்னரின் பட்டத்து ராணி கோப்பெருந்தேவி என வழங்கியது என்பது நாம் அறிந்ததுவே. குடும்பன் என்ற குலப்பட்டம் வழக்கில் உள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்தலைவரையும் ஊர்க்குடும்பன் என்று வழங்குவர். ஊர்க்குடும்பன் எனில் ஊரில் குடும்பு பார்க்கிறவன் ஊர்சபை, ஊர்மன்றம் இவற்றிற்குத் தலைவராக இருப்பவர் என்று பொருள்படும். சங்க இலக்கியங்களில் வரும் ஊரன், மகிழ்நன், கிழவன் என்பவை அன்று இருந்த ஊர்த் தலைவர்களைச் சுட்டுவதாயுள. இத்தலைவர்கள் ஊர் காவலர், புரவலர் எனவும் வழங்கினர் என்பது நாம் அறிந்ததே.
இம்மரபினரைக் கொத்தடிமையாகச் சித்திரிக்கும் முக்கூடற் பள்ளில் இவரைக் 'குடும்பு செய்தூராருக்குக் குழைத்தான் (செய் - 88) என வருவது காண்க. இச்செய்யுளின்புடி, அக்காலத்தில் இம்மரபினரின் தலைவர்கள் தம் மரபினர்க்கு மட்டுமின்றி ஊரிலுள்ள எல்லாப் பிரிவினருக்கும் தலைவராயிருந்து குடும்பு பார்த்தனர் எனத்தெரிகிறது. கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் இறுதியில், சோழர் ஆட்சி தமிழகம் முழுவதுவும் பெரும்பாலும் பரவிய வேலையில் ஊராட்சி முறை சம்பந்தபட்ட பல்வேறு அலுவல்களைக் கவனிப்பதற்கு ஏற்பட்ட ஊர் சபையின் வாரியங்கள் குடும்பு என வழங்கியதாக அறிகிறோம். ஊரானது பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குட ஓலை மூலம் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வாரியம், பொன் வாரியம், கழனி வாரியம், ஆட்டை வாரியம் எனப் பல்வேறு வாரியங்களில் அங்கம் வகித்தனர். இக்காலத்தில் ஒருவர் தேர்தலுக்கு நிற்க சில விதிமுறைகள் ஏற்பட்டிருந்தன. இக்காலத்தில் தேர்தலுக்கு அபேட்சகராக ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் அக்காலத்தில் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படுவர். அவருக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்ச வயது 31; அதிகபட்ச வயது 60 ஆகும். வயது வரம்பு விதி இடையிடையே மாற்றம் பெற்றுள்ளது. அபேட்சகரது உறவினர் ஒருவரும் ஏற்கனவே அங்கத்தினராக இருந்திருக்கக்கூடாது. அங்கத்தினரோ அல்லது அவரது உறவினரோ கையூட்டு வாங்காதவராகவும் இருந்திருக்கவேண்டும். நல்ல கல்வி, அறிவு உடையவராகவும் அரசுக்குத் தீர்வை (வரி) செலுத்துபவராகவும், குறைந்தது கால்வேலி நஞ்சை நிலம் உடையவராகவும் இருப்பதுடன், அவரது நடத்தையில் எவ்விதமான ஒழுங்கீனமும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இத்தேர்தல் விதிமுறைகள் உத்ரமேரூர், திருச்செய் நல்லூர் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான பல வாரியங்களை மேற்பார்வையிடும் அமைப்பு குடும்பு வாரியம் என வழங்கியது. கல்வெட்டுகளில் குடும்பு வாரியப்பெருமக்களும் தோட்ட வாரியப் பெருமக்களும், (ARE 690 / 1904) களத்து இப்பாட்டை குடும்பு வாரியப் பெருமக்களும், எரிவாரியப் பெருமக்களும், இருநூற்றுவயப் பெருமக்களும் (ARE 688 / 1904) என்று பொறிக்கப்பட்டுள்ளது காண்க. இடைக்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாழர் குடும்பு பார்த்தனர் என்பது, தஞ்சை மாவட்டம் மன்னார்குடி கைலாசநாதசுவாமி கோயிலில் உள்ள வெள்ளாழரை . . . பிடாகைகளுக்கு குடும்பும், புரவும் செய்தாரையாதல், ஊர்க்கணக்கரையாதல், பிராமணரிலும், வெள் ளாழரிலும் முதலிகளுக்கு கொளச் சொன்னார் (SII. Vol. VI. ARE 98 / 1897) என்ற கல்வெட்டாலும் மன்னார்குடி இராஜகோபால் பெருமாள் கோயிலிலுள்ள ஆண்டு தோறும் குடும்பு மாறி இடவும்; நாட்டில் வெள்ளாழரையா ... ... ... குடும்பும் புரவும் செய்தாரையாதல், ஊர்க்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்ளாழரிலும், முதலிகளுக்குக் கொளச் சொன்னார் (ARE 104 / 1897) என்ற கல்வெட்டாலும் நன்கு விளங்கும். (குறிப்பு: புரவு என்பது வரிவசூல் ஆகும்) அக்காலத்தில் குடும்பு பார்த்தவர் தேவேந்திரகுல வேளாளரே ஆவர். கல்வெட்டுகளில் வெள்ளாழர் என்று பொறிக்கப்பட்டுள்ளவர் இம்மரபினரே என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை. (இவ்வாசிரியரின் வேளாளர் யார்? நூலைப் பார்க்கவும்).

இன்று வேளாளர், வெள்ளாளர் என வழங்குபவர் அன்று வெவ்வேறு தொழில் மக்களாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வினைஞர், களமர், தொழுவர், கடைசியர், கூத்தர், விறலியர், பரத்தையர், பாணர் முதலிய பல்வேறு இனக்குழுக்களிலிருந்து தோன்றியவர் ஆவர். இவர் நாளடைவில் வளர்ச்சி பெற்று, இன்றைய நிலையை எய்தியுள்ளனர். சோழர் கால மரபை ஒட்டி தேவேந்திர குலத்தாரிடையே குடும்பு முறை பண்டு தொட்டு நீடித்து வருவதை மாவட்டக்குறிப்பு, மற்றும் மக்கள் குடிக்கணக்கு இவைகள் மூலம் அறியலாம். இவரிடையே பஞ்சாயத்து முறை அமுலில் இருந்து வருவது போன்று உயர் சாதி என்று பாராட்டுவோர்மத்தியில் அவை இல்லாதது சிந்திக்கத் தக்க ஒன்றாகும்.
அடுத்து குடும்பு என்ற சொல் எப்படிப் பிறந்ததென்பது பற்றிப் பார்ப்போம். இச்சொல் 'குடி என்ற சொல் அடிப்படையிலிருந்தே தோன்றியிருக்கிவேண்டும். குடிமை, குடித்தனம், குடிகை, குடில், குடும்பம், குடும்பி குடும்பினி, குடியானவன், என்ற சொற்கள் பிறந்திருக்கின்றன. குடி என்ற சொல் ஊர்பெயர்களில் அமைந்து குடியிருப்பையும் உணர்த்தும். உறவு முறையுடைய ஒரு குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகையப் பல குடிகள் சேர்ந்து வாழும் இடம் குடியிருப்பு என்றும் அவ்விதம் கூடிவாழ்பவர் குடிஎன்றும் பொருள்படும். திருக்குறளில் குடிமை என்னும் அதிகாரத்தில் வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி பண்பிற்தலை பிரிதலின்று (செய். 985) என்ற செய்யுளில் பழங்குடி என்பதற்குப் பரிமேலழகர், சேர, சோழ, பாண்டியர் என்றாப்போல், தொன்றுதொட்டு மேம்பட்டு வரும் குடி என்று பொருள் கண்டுள்ளார் என்பதை நாம் அறிவோம். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் இச்சொல்பற்றிக் கூறுவதாவது: தமிழில்குடி என்பது குடும்பம், குலம், ஆட்சிக்குடி மக்கள், நாட்டு மக்கள் ஆகிய எல்லாப் பொருளும் உடையது. இப் பொருள்கள் குடியாட்சி, விரிவடைந்து வளர்ந்த வகையைக் குறிக்கின்றன. குடும்பமே குலமாய், சமுதாயமாய், நாட்டு மக்களாய் வளர, குடும்ப ஆட்சியே நாடாக விரிவுற்று வளர்ந்து குடியாட்சியாக முதிர்வுற்ற நிலையை அது காட்டுகிறது. (பன்மொழிப்புலவர் – கா. அப்பாத்துரை. மொழி வளம் சேகர் பதிப்பகம். தி. நகர் சென்னை - 17) குடுமி என்ற சொல்லுக்கு வெற்றி, உச்சி, கண்மயிர் எனப் பிங்கலந்தை நிகண்டு பொருள் கூறுகின்றது. சங்ககாலத்துப்பாண்டிய மன்னருள் ஒருவன் முதுகுடிமிப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டான் என்பது குடிமிக் கோமாற்கண்டு (புறம். - 64) என்ற செய்யுளால் அறியலாம். குடும்பி என்பதற்கு சம்சாரி என்று பொருள்படும் என்பது குடும்பி யெனுங் குறிப்பை மாற்றி (ஞான பா. உற்ப. 69) என்ற செய்யுள் மேற்கோளால் அறியலாம். குடும்பம் என்பது சமுசாரம் என்பதையே குறிக்கும் என்பது குடும்பத்தைக் குற்றமறைப்பான் (கம்ப. இராமா. சேது. ப. 53) என்ற மேற்கோளால் புலனாகும். அடுத்து குடும்பன் குடும்பத்தலைவன் எனப் பொருள்படும், என்பது. ஏழைக்குடும்பனாகி (தாயு. தே. சோ) என்ற தாயுமானவர் பாடலால் அறியலாம். குடும்பன் எனும் சொல் பொதுவாய், எல்லா மரபினருடைய குடும்பத்தலைவரைக் குறிக்கலாமென்றாலும், ஏற்கனவே கூறியது போன்று அது பண்டு தொட்டு வரும் வழக்கப்படி, தேவேந்திர குலத்தாரின் ஊர் மன்றத் தலைவரையும், அதையொட்டி அம்மரபினரின் ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் சுட்டும் குலப்பட்டமாக அது

வழங்குகின்றது.

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-37

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

ஆக இதுவரை நாம் கண்ட மேற்கோள்களிலிருந்து ஏற்கனவே தெய்வமும், அரசனும் அய்யன் என வழங்கினர். ஆலயங்களிலும் அரசரின் கீழும் பணி செய்த பார்ப்பனர் தெய்வத்திற்கும், அரசருக்கும் தாங்கள் பற்றுதலுள்ள குழந்தைக்ள் எனத் தம்மைப் பிள்ளைகள் எனவழங்கினர். நாயக்கர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு அதிகமாகவும், அவரைப் பார்ப்பனரல்லாதார் தந்தைபோல் பாவித்து அய்யன் என்றும், தம்மை அவரது பிள்ளைகள் என்றும் கூறிக்கொண்டனர் எனத் தெரிகிறது.
சோழ பாண்டிய மன்னர் இடைக்காலத்தில் தேவர். உடையார், வர்மன் முதலிய பட்டங்களைத் தரித்திருந்தனர். இவர் ஆட்சிக்குப் பிறகு அந்நியர் ஆட்சியில் பாளையப்பட்டுகளாகவும், குறுநிலமன்னராகவும், பள்ளி, வாணாதிராயர், மறவர், தெலுங்கு தொட்டிய வகுப்பார் முதலியோர் நியமனம் பெற்றனர். இவர்களுள் பள்ளி வகுப்பார் படையாட்ச்சி, வன்னியர், காமிண்டன் முதலிய பட்டங்களையும், வாணாதிராயர் தேவர் என்ற பட்டத்தையும் மேற்கொண்டனர். நாயக்கரின் கீழ் சேவை செய்த பள்ளி, கள்ளர் வகுப்பாரும் நாயக்கர் என்ற பட்டம் தரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. நந்தமன் மலையமான் என்பவருள் நில உடைமையாளரானவர் உடையார் என்றும், சுருதிமான்களில் செல்வாக்குப் பெற்றவர் மூப்பன்(தலைவன்) என்றும் பட்டம் பூண்டனர். இவர்களைப் பின்பற்றி இந்த மரபுகளைச் சேர்ந்த எல்லோரும் உடையார், மூப்பன் என்ற பட்டங்களைத் தழுவ ஆரம்பித்தனர். (குறிப்பு இந்த வகுப்புகள் பறையரிலிருந்து பிரிந்தவர் என எட்கர் தர்ஸ்டன் கூறுவார்.) (Castes & Tribes of S.I. Vo V), பிறமலைக் கள்ளருக்கு தேவேந்திர பிள்ளைத் தேவனை திருமலை நாயக்கன் அரசனாக்கி அவனுக்கு தேவேந்திர திருமலை பின்னைத் தேவன் எனப் பட்டம் சூட்டினர். பிறமலைக் கள்ளர் அம்பலகாரன் என்ற பட்டம் தரித்து வந்ததாகவும், பின்னாளில் மறவர் போன்று தேவர் என்ற பட்டத்தை மேற்கொண்டனர் என்றும் அறிகிறோம். (W. Francis. Madurai Gazetteer and E. Thurston casters & Tribes of South India. Vol. III Page. 88). மறவருள் பல்வேறு பிரிவுகள் உண்டு. தேவர் என்ற பட்டத்தைத் தவிர சேர்வை, கரையாளர், தலைவன் என்ற பட்டங்கள் உடைய பிரிவுகளும் இருந்தன. ஆனால் இக்காலத்தில் குல உயர்வுக்காக, எல்லாப் பிரிவினரும் தேவர் என்ற பட்டத்தைப் பூண்டு வருகின்றனர். மறவர் மற்றும் பிறமலைக் கள்ளர் தவிர, இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை குறுநில மன்னர் தங்களிடம் சில குறிப்பிட்ட தொழில் செய்த கள்ளருக்குத் தேவர் என்ற பட்டத்தை வழங்கியதாக கூறுவர். இக்காலத்தில் அகம்படியர் என்று கூறிவரும் சேர்வை சேர்வைகாரர் என்பவர் இராமநாதபுரம் கீழ் பகுதியிலுள்ள இடையர், வலையர் வல்லம்பார் முதலிய வகுப்புகளிலிருந்து இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை மன்னர் இவர்களுக்குப் படைத் தொழில் மற்றும் பல்வேறு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டவர் எனலாம். இராமநாதபுரம் சேதுபதியும், சிவகங்கை மன்னரும் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பர். இவர் இருவரும் வடுகர் என அனுமானிக்க வேண்டியுள்ளது. (தமிழ் மூவேந்தரான தேவேந்திரர் வீழ்ச்சி) இந்த இரு இடங்களிலும் மறவர் அதிகம் இல்லாமல், சேர்வை என்பவர் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்து வருவதுவும் சிந்திக்கத்தக்கது. சேவை செய்தவர் சேர்வை, சேர்வைகாரர் என்ற குலப்பட்டத்தை மேற்கொள்ளலாயினர். குல உயர்வுக்காக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இம்மரபினரில் சிலர் சமீப காலமாய்த் தங்களைத் தேவர் என்றே கூறிவருகின்றனர். ஏன்? கள்ளர் கூடக் கள்ளர் வகுப்பு இல்லாத மாவட்டங்களுக்குச் செல்லும்போது, அங்கு தம்மைக் கள்ளர் என்று கூறாமல் தேவர் என்றே கூறி வருகின்றனர். கள்ளர், மறவர், அகம்படியர் மூவரும் தேவர் என்ற பட்டத்திற்கு உரியவர் என்றும் தாங்கள் முக்குலம் என்றும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர் என்றும் கூறி வருவதுடன், முக்குலத்தோர் என்ற அமைப்பைத் தேவர் பேரவை என்று அழைக்கவும் முற்பட்டுள்ளனர். அத்துடன் நிற்காது, மூன்று வகுப்பையையும் தேவர் என்று அழைக்கவும் அரசை வற்புறுத்திவருகின்றனர். இத் தேவர் என்ற பட்டத்திற்கும், முக்குலம் என்பதற்கும் ஆதாரமாய் ஒரு புராணக்கதையையும் மேற்கோள் காட்டுவர். ஒரு காலத்தில் அகலிகையை மணக்க கெளதமரிஷியும், தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய தேவேந்திரனும் விரும்பினர். ஆனால் இவர் இருவருள் யாருக்கு அகலிகையை மணம் செய்து கொடுப்பது என்பது பற்றி முடிவு செய்ய ஒரு நிபந்தனை விதித்தனர். அதன்படி ஆயிரம் ஆண்டுகள் தண்ணீருள் மூழ்கி இருப்பவர் அகலிகையை மணக்கத் தகுதியாவர். கெளதமர் ரிஷி ஆனபடியால், ஆயிரம் ஆண்டுகள் தண்ணிருள் மூழ்கி இருந்தார். ஆனால் தேவேந்திரனால் அவ்வாறு தண்ணிருள் மூழ்கி இருக்க முடியவில்லை. கெளதமர் போட்டியில் வெற்றி பெற்றதால் அகலிகையை மனைவியாகக்கொண்டார். இதில் தேவேந்திரன் தோல்வி கண்டான். எனினும் அகலிகை மீதுள்ள மோகம் அவனை விட்டபாடில்லை. அவளை எப்படியாவது, ஒரு தடவையாவது அடைய வேண்டுமென முடிவு கொண்டு, ஒரு நாள் நள்ளிரவில் சேவற்கோழி உருவம் எடுத்து கெளதமர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, அவரது இல்லத்தின் கூரை முகட்டில் ஏறி, விடிந்து விட்டதற்கு அறிகுறியாகச் சேவற்கோழி கூவுவதுபோல் கூவினான். கெளதமர் நித்திரை கலைந்து பொழுது விடிந்து விட்டதாதக் கருதி, அவசர அவசரமாய்ப் படுக்கையிலிருந்து எழுந்து காலைக்கடன்களை முடிக்க ஆற்றுக்கரைக்கு விரைந்தார். தேவேந்திரன் தனது சக்தியால் இரவுப்பொழுதை நீட்டிவிட்டு கூரையிலிருந்து இறங்கி அகலிகையோடு கூடிமகிழ்ந்தான். கெளதமர் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தமது இல்லத்திற்குத் திருபும்போது, தமது இல்லத்தில் மூன்று சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கெளதம்ரைக் கண்டதும் ஒரு சிறுவன் ஒடி ஒளிந்தான். இன்னொருவன் வீட்டின் தூணில் (மரம்) ஏறினான். மூன்றாமவன் வீட்டின் வாசற்படியிலேயே நின்றான். ஒடி ஒளிந்தவன் கள்ளன் எனவும், மரத்தூணில் ஏறியவன் மறவன் எனவும், வீட்டின் வாசற்படியில் அசையாமல் நின்றவன் அகம்படியன் (அகம் - வீடு, வீட்டுப்படி) எனவும் பெயர் பெற்றனர். இவர் மூவரும் தேவேந்திரனுக்குப் பிறந்தவர் என்பதால் தேவர் என்ற குலப்பட்டத்திற்கு உரியவராயினர் என்பர். (குறிப்பு: ஜெயலலிதாவை முதலமைச்சராகக் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளர், மறவர். அகம்படியர் மூவரையும் தேவர் என்று ஒரே வகுப்பாக அழைக்க வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தஞ்சைக் கள்ளர் தம்மைத் தேவர் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை.) சாணார் வகுப்பார் சமீப காலமாய் நாடார் என்ற குலப்பட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஊர்ப்புறங்களில் சாணான், சாணாவி, நாடாவி, (தொடாதவர்) என்றே வழங்கி வருபவர். கடந்த ஒரு நூறு ஆண்டு காலத்தில் இவருள் ஒரு சாரார் தொழில் துறையிலும், இன்னொரு சாரார் கிறித்துவமறையில் சேர்ந்து கல்வி கற்று, அரசுபணிகளில் சேர்ந்து முன்னேறியதாலும், குலஉயர்வுக்காக நாடாவி என்பதை நாடார் என, மாற்றி உபயோகிக்கலாயினர். நாடார் என்றாலும் நாட்டிற்கு வெளியே காட்டுப் பகுதியில் வாழ்பவர் என்றே பொருள்படும். தமிழ் சங்க இலக்கியங்களிலோ, நிகண்டுகளிலோ சாணார் என்பதோ நாடார் என்பதோ இடம் பெறவில்லை.
டாக்டர் R. கால்டுவெல் இம்மரபினர் பற்றி எழுதிய சாணார் வரலாற்றில் கூறியுள்ளதை இராபர்ட் L. ஹார்டு கிரேவ் ஜூனியர் தமது “தென் இந்திய நாடார்” என்ற நூலில் எடுத்தாண்டிருப்பதைப் பார்ப்போம்: “நாடார் ஈழத்திலிருந்து (இலங்கை) முதன்முதில் வந்தவர், யாழ்பாணப்பகுதியிலிருந்து பனங்கன்றுகளுடன் இராமநாதபுரம் வழியாக நெல்லை மாவட்டத்தில் குடியேறினர். பாண்டியன் இவர்களுக்குப் பனைமரம் வளர்ப்பதற்குத் தகுதியான திருச்செந்தூருக்குத் தெற்கேயுள்ள தருசாய்க் கிடந்த மானாடு என்ற சேரிப்பகுதியைக் கொடுத்து உதவி, அங்கு குடி அமர்த்தினான். இன்னொரு பிரிவினர் ஈழத்தின் இதரப் பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாய் தென் திருவாங்கூரில் குடியேறிப் பின்னர் வடதிருவாங்கூர், நெல்லை மாவட்டம் மேற்குப் பகுதிகளுக்குப் பரவினர். இவரை ஈழவர் என்றும் தீயர் என்றும் அழைத்தனர். ஈழவர் எனில் ஈழத்திலிருந்து வந்தவர், தீயர் எனில் தீவிலிருந்து வந்தவர் எனப் பொருள்படும். தென் திருவாங்கூரில் குடியேறியவருள் சிலர் நெல்லை மாவட்டத்தின் பிறபகுதிகளில் பனங்காடுகள் அதிகம் இருந்ததால் பனைமரம் ஏற அங்கு வரவழைக்கப்பட்டனர். இவர் மக்கள் தொகை பெருக இராமநாதபுரம் மற்றும் விடக்கேயுள்ள இடங்களுக்குப் பரவினர். ஆக இவர் பூர்வீகம் ஈழம் ஆகும். தமிழகத்தில் முதன் முதலில் குடியேறிய இடம் அனேகமாக மானாடு என்ற தேரிக்காடு ஆகும். இங்கு இவரது பூர்வீகக் குலதெய்வம் இன்றும் வணங்கப்பட்டு வருகிறது.
Robert L. Hardgrave Jr. says: Á Number of places are mentioned as the home of the Nadars. Chola Country - Madurai and South Travancore. Caldwell tried to establish as emigrants from the North coast of Ceylon. Ezhavas Thiyar - Climbers of cocounts are a divisions of Shanars. They are descendants of Shanans. Caldwell said that one group came from Jaffna, bringing with them Jaffna Palmyra seedlings regarded as the best in the east. The pandya rulers gave the title over the sandy waste waste lands of Manadu in the south eastern portion of the district (Tinnevelly) the region möst suitable for the cultivation of palmyras. The other group of emigrànts esteemed a lower division of the Caste came by sea from ceylon to the south of Travancore whence according to Caldwell they gradually spread into Tinneyelly on invitation from the Nadans to serve as climbers in the immense palmyra forests

Manadu the desolate land of the Teris seems more probably as their place of origin as well as the region of their greatest concentration. Here among the palmyars with which the Community has been traditionally associated with are the family temple sites of the ancestral village of the Nadars. Even as the Nadars have left their home – land in migration into southern Travancore into northern Trinnevelly and rammad however tenuous their links with the land of their origin may have become the family -deity has bound them ultimately to the ancestral land of south - eastern Tinnevelly [Robert L. Hardgrave Jr. - Nadras of South India, Page191.)
இராபர்ட் L. ஹார்டுகிரேவ் மேலும் கூறுவதாவது: நாடன் வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுபான்மையினர் தாம்பிரபரணி ஆற்றுக்குத் தெற்கே பெரிய நிலப்பரப்புகளுக்குச் சொந்தக்காரராயிருந்தனர். இந்த நிலப்பிரபுக்கள் பாளையப்பட்டுகளின் கீழ் இருந்த் சிறுநிலக்கிழார் போன்றோ அல்லது திருச்செந்தூர்ப்குதியில் நாயக்கமன்னர் நேரடிப் பார்வையில் இருந்த நிலக்கிழார் போன்றோ, நாயக்கமன்னர் அல்லது அனேகமாய் அவருக்கு முன்னே இருந்த பாண்டியரிடமிருந்தோ வரிவசூல் செய்யும் அதிகாரம் பெற்றிருந்தனர். ஒரு பழங்குறிப்பு பாண்டியர் தேரிக்காட்டில் உள்ள நாடன்களில் ஏழுநபர்களை வரிவசூல் செய்ய நியமித்ததாகக் கூறும். இன்னொரு குறிப்பு கி.பி. 1609 - ல் பதினொரு நாடன்கள் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டதாகக் கூறும். அதிலிருந்து இவர்கள் வழிவந்தோர், அந்நிலப்பகுதியில் இருந்த குடிகளிடம் வழி வழியாய் வரிவசூல் செய்து வந்ததால், அப்பகுதிவாழ் குடிகள் மீது இவர்கள் குற்ற இயல் இல்லாத சமூக வாழ்க்கை சம்பந்தமான அதிகாரம் செலுத்தி வந்தனர்.
Robert L. Hardgravejr. says: "A small portion of the community of the Nadans possesed vast tracts of land in regions south of Tambaraparni river. Invested as the tax gatherers by the Nayaks and probably by the Pandyas before them, these Nadans or lords of the lands held their position either directly under the Nayaks as in the region of Trichendur or as petty lords under the Poligars. One account speaks of the appointment by the Pandyas of seven collectors from the Nadan Community in the teri region. Another records the appointment in 1609 of Eleven Nadans to collect taxes from the people. As hereditary tax collectors the Nadans held civil authority over the lands in their control. (Robert L. Hardgraver Jr. Nadars of South India. Page.29) "

ஏற்கனவே கூறியது போன்று, இவர் ஆரம்பகாலத்தில் பனைஏறி, மரமேறி என்றே ஊர்ப்புறங்களில் வழங்கினர். தமிழ் வேந்தர் சங்க காலத்தில் நீர் நாடன், புனல் நாடன், காவிரி நாடன், கானக நாடன் எனவும், இடைக் காலத்தில் குறுநிலத் தலைவர்கள் நாடாள்வான் என வழங்கியதை மனதிற்கொண்டு, தங்களது சாதிப் பெயராகிய சாணார் (சாண் + நார் = சாணார், சாண்நார் உதவியால் மரமேறுதல்) என்பதை இம்மரபினருள் உயிர் வகுப்பு எனக் கூறிக்கொண்டு வசதிபடைத்த ஒரு சாரார் முதன் முதலாக நாடன் என்ற பட்டம் தரிக்க முற்பட்டனர். அவரைப் பின்பற்றிக் கிறித்துவ மறையில் சேர்ந்தவரும் வணிகத்தில் முன்னேறியவரும் நாடன், நாடான் என்ற பட்டத்தைத் தரிக்கலாயினர்.
1921 - ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு எடுப்பின்போது, தமது குலப்பெயரை சாணார் என்பதற்குப் பதிலாக, நாடார் என்று பதியும்படி அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆட்சியாளர் மக்கள் விரும்பும் சாதிப் பெயரைப் பதியலாம் என ஆணை பிறப்பித்ததாகத் தெரிகிறது. ஆக 1921 – லிருந்து தான் நாடான் என்பது சாதிப்பெயராக வழக்கில் வந்தது எனலாம்.
W. பிரான்சிஸ் இன்றைய வழக்கில் உள்ள சாதிப் பெயர்களும், குலப்பட்டங்களும் சமீப காலத்திலே தோன்றின எனவும், அவற்றிலிருந்து அவைகளைத் தரித்திருக்கும் மக்கள் மரபு எது? என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதென்றும் கூறுவர். (W. Francis census of India. 1901 Vol. XV. Part I Report. Page 78) எட்கர் தர்ஸ்டன் W. பிரான்சிஸ் கருத்தை இன்னும் சற்று விரிவாக விளக்குவாராவர். பிராமணர் ஏற்கனவே பிள்ளை, முதலி என்ற பட்டங்களைத் தரித்திருந்தனர். ஆனால் இவற்றை இன்று சூத்திரர் தரித்து வருகின்றனர். நாயக் மன்னர் தந்தை என்னும் பொருள்பட அய்யன் என்ற பட்டம் தரித்திருந்தனர். ஆனால் அதை இப்போது சிவப்பிராமணர் குலப்பட்டமாகப் பூண்டு வருகின்றனர்.
Edgar Thurston Says: 'Caste titles and names are however of recent origin and little can be inferred from them whatever their mëaning may be shown to be Brahmins for example appear to have borne the title of Pillai, Mudali which are now used by the Sudras and the Nayak Kings on the other hand called themselves as Ayyan (Father) which is now extensively the title of Saivite Brahmins. To this day the cultivating Vellalas, weaving Kaikolas and semi - civilized wild tribes of the Jatapur use equally the title of Mudali'. [Edgar Thurston castes and Tribes of South India, Vol. VIII Page 179.]
தமிழகத்திலுள்ள எல்லா வகுப்பினருடைய குலப்பட்டங்களைப் பற்றி ஆராயின் விரிவடையும் என்பதால் தேவேந்திரகுலத்தார் குலப்பட்டங்களை மட்டும் ஈண்டு விரிவாய் ஆராய்வோம். மள்ளர் - பள்ளர் மருதநில மக்கள் என்பதால் தாங்கள் வேந்தன் குலம் என்னும் பொருள்பட இந்திரகுலம், புரந்தரன் குலம், தேவேந்திரகுலம் என உரிமை பாராட்டிவருவதாக ஏற்கனவே கண்டோம். நெல்லை செங்கோட்டைப் பகுதிவாழ் இம்மரபின் பாண்டியன் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். இது தவிரப் பாண்டிய நாட்டின் இதரப்பகுதியில் உள்ள பெரும்பாலான இம்மரபினர் குடும்பன் என்ற குலப்பட்டமும், ஒரு சிறுபான்மையினர் காலாடி என்ற பட்டமும், பூண்டு வருகின்றனர். பண்டையச் சேரநாடாகிய கொங்கு நாட்டின் ஒரு பகுதியில் இம்மரபினர் குடும்பன் என்ற பட்டத்தைக் கொண்டுள்ளனர். கொங்கு நாட்டின் மற்றப் பகுதிகளில் பண்ணாடி, மண்ணாடி, பலகன் என்ற பட்டங்களைத் தரித்துவருகின்றனர். சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலாடி என்ற பட்டம் தரித்து வரக் காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பன் என்ற பட்டம்தரித்து வருப்வதும் உண்டு சோழ நாட்டின் மற்றப் பகுதிகளில் உள்ளவர் மூப்பன் பணிக்கண், வாய்க்காரன் என்ற குலப்பட்டங்களையுடையவராய் உள்ளனர். இக்குலப்பட்டங்கள் உணர்த்தும் பொருள் பற்றியும், அவை எவ்வாறு வழக்கில் வந்தன என்பது பற்றியும் பார்ப்போம்.
(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-36

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

எட்கர் தர்ஸ்டன் கூறுவார்: தேவதாசிகளின் வழிவந்தோர் தங்கள் பெயர்களுக்குப்பின், பிள்ளை, முதலி என்ற பட்டங்களை சூட்டிக்கொள்கின்றனர். இப்பட்டங்கள் பொதுவாய் கைக்கோளர், வெள்ளாளருக்கு உரியவை. இந்த இரு மரபினரிலிருந்தும் ஆலயங்களுக்குப் பணி செய்ய தேரடியார் நியமணம் பெற்றனர்.
Edgar Thurston says: Some of these (Devadasis) affix to their names the title of pillai and Mudali. Which are the usual titles of the two castes (Vellala and Kaikola) from which most of the Dasis are recruited and try to live down the stigma attaching to their birth. (E. Thurston. Castes and Tribes of South India. Vol. II. P. 127)
மேலே கூறியபடி முதலியார் என்ற பட்டத்தை வடமாவட்டங்களில் பல்வேறு வகுப்பாரும் பூண்டு வருகின்றனர். தென்மாவட்டங்களில் பிள்ளை என்ற குலப்பட்டத்தை அகம்படியர், இடையர், இலைவாணியர், இல்லத்துப் பிள்ளைமார், ஈழவா, கொடிக்கால்காரர், இசை வேளாளர் (மேளக்காரர் தேவரடியார்) நாவிதர், வண்ணார் மற்றும் (கொங்கு வேளாளரென்போர் தவிர்த்து) இதர வேளாளர் பிரிவுகள் பூண்டு வருகின்றனர். பிள்ளை என்ற பட்டத்தை வடமாவட்டங்களில் உள்ள இடையரும், பறையரும் தரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கணக்கெழுதும் தொழில் செய்தவர் கணக்கு முதலி அல்லது கணக்குப்பிள்ளை என்றும், பின்னர் முதலியார், பிள்ளைமார் என்றும், நில உடைமை ஏற்பட்டபின் வேளாளர், வெள்ளாளர் என்றும் உரிமை பாராட்ட முற்பட்டனர். இவர்களுள் மரக்கறியை உணவாகக் கொண்டு புலால் உணவைத் தவிர்த்தவர் தம்மைச் சைவமுதலி, சைவப்பிள்ளைமார் சைவவேளாளர் வெள்ளாளர் என்று பாராட்டவும் முற்பட்டனர். பல்வேறு மரபினரும் தம்மை வேளாளர், வெள்ளாளர் என்று கூற முற்பட்டதன் நிமித்தம் “காயிலே கெட்டது கத்தரிக்காய்; சாதியிலே கெட்டது வெள்ளாள சாதி”, “கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளராகி முதலியார் என்று சொன்னார்" என்ற பழமொழிகள் நாட்டில் வழக்கில் வந்தன எனலாம்.

திருமலை நாயக்க மன்னன் அய்யன் என்ற பட்டம் பூண்டி ருந்தான் என முன்னர் கூறியது நினைவிருக்கத்தக்கது. சோழமன்னருள் சிலர் அய்யன் என்ற பட்டம் தரித்திருக்கின்றனர். திருமலை நாயக்கன் தளபதிகள் இராமப்பன், நரசிங்கப்பன் அய்யன் என்ற பட்டத்தை மேற்கொண்டதாக அறிகிறோம். இப்பட்டத்தைப் பூண்டபின் இவர்கள் இராமப்பையன், நரசிங்கப்பையன் என வழங்கலாயினர். இவர்களைப் பின்பற்றி அரசு பணியில் ஈடுபட்ட சிவமதத்தைச் சேர்ந்த பார்ப்பனரும், பின்னர் பல்வேறு தொழில் செய்த பார்ப்பனரும் அய்யன் என்ற பட்டத்தை மேற்கொள்ளலாயினர். அன்மைத் காலத்தில் அய்யன் என்ற சொல் ஒருமையை உணர்த்துவதால் அது உயர்வைக் குறிக்கவில்லை எனக் கருதி அய்யர் என்ற பண்மையால் வழங்க முற்பட்டுள்ளனர். பார்ப்பனரைப் பின்பற்றி செளராஸ்டிரப் பட்டு நெசவாளர் அய்யர் என்ற பட்டத்தை மேற்கொண்டனர். இவர்களுக்கு மதுரை இராணி மங்கம்மாள் இப்பட்டத்தை வழங்கினதாகக் கூறுவர். கிறித்துவ சமயப்பாதிரிகள் அய்யர் என வழங்கி வருவது ஈண்டு நினைவிருக்கத்தக்கது. ஏற்கனவே கூறியது போன்று பிள்ளை, பிள்ளையன், முதலி என்ற பட்டங்கள் முனிவர், மடாதிபதிகள், சமயத்துறவிகள் முதலானோர்க்கு வழங்கின. சைவ சமயப் பெரியார்கள் அப்பர். சுந்தரர், ஞானசம்பந்தர் இவர்கள் மூவர் முதலி எனவும், சமய ஆசானிடம் உபதேசம் பெற்றவர் பிள்ளை, பிள்ளையன் எனவும் பட்டம் தரித்து வந்தனர். நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை, திருமாளிகைப்பிள்ளை, விளாஞ்சோலைப் பிள்ளை, வெம்பத்தூர் பிராமணப்பிள்ளையன் இவர்கள் இதற்கு எடுத்துக்காட்டு ஆவர். இவருள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இன்றையப்பார்ப்பனர் மற்றும் இதர வகுப்பினர் இருந்திருக்கின்றனர். சேரநாடாகிய இன்றைய கேரளாவில், சேரமான் பெருமான் ஏற்படுத்திய ஊரில் வாழ்ந்த சிரிவஸ்தவா கோத்திரம், யஜூர் வேதம் ஓதும் பார்ப்பனர் கோபால் பிள்ளை மகன் நாராயணபிள்ளை என வழங்கியதாக அறிகிறோம் (Dr.R. Caldwell - History of Tinnevelly. Page 65)
பாண்டியர் வரலாறு கண்ட K.A நீலகண்ட சாஸ்திரி பிள்ளை என்ற பட்டம் வழக்கில் வந்தது பற்றிக் கூறுவதாவது:
“அரசின் குடிமக்களில் அரசின் கீழ்ப்பணி செய்தவர்கள் அரசரைத் தந்தையாகப் பாவித்து பற்றுதலோடு தம்மை அரசரது பிள்ளை மக்கள் எனக்கூறிக் கொண்டனர். ஜடாவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில் கோனாட்டில் (புதுக்காட்டை சமத்தானத்தின் ஒரு பகுதி) அதிகாரியாயிருந்தவனைப் பிள்ளை குலசேகர மாபலி வாணராயன் என்று கூறுகின்றது, (இந்த அதிகாரி பிள்ளை மாபலிவாணராயன் என்றும் வழங்கினான்)
A.K Nilakandasastri Says : “The kings to whom those officials who were subjects used terms evincing a paternal interest the terms like Pillai makkal and so on.
An inscription of Jatavarman Vira Pandya mentions a Pillai makka Kullasekara mabali Vinarayan who may be the same as pillai makkal Vanarayan who was in charge of Kanadu (Part of Pudukottai state) under Maravarman Kulaseharan.” [K. A. Nilakanda sastri - The Pandya kingdom. Page. 164].”

அய்யன், பிள்ளை என்ற குலப்பட்டங்கள் வழக்கில் வந்ததுபற்றி எட்கர் தாஸ்டின் கூறுவதாவது, “நாயர் குலப்பட்டம் குழந்தை எனப் பொருள்படும் பிள்ளை ஆகும். இப்பட்டத்தை ஏற்கனவே தென்னாட்டுலே குடுயிருந்த பார்ப்பனர் பூண்டிருந்தனர். பின்னர் பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரைத் தந்தை என்று பொருள்படும் அய்யன் என அழைக்கவும், பார்ப்பனர் அய்யன் என வழங்கலாயினர். அதன்பின் பார்ப்பனர் பூண்டிருந்த பிள்ளை என்ற பட்டத்தைச் சூத்திரர் தமக்கு உரித்தாக்கிக் கொண்டனர்.”

Edgar Thurston says: Nair's title is Pillai (child) once used by Brahmin dwellers in the south. After the Brahmins changed the tille to Ayyan (Father) which the Non - brahmin people called them - the sudras began to use the term Pillai” [Edger Thurston castes & Tribes of South India. Vol. V.).
(தொடரும்)