Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-20

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

தலைமக்கள்
ஊரன் : -
“குண்டு நீர் ஆம் பற்றண் டுறையூரன்” (நற். 100 - 3)
“வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் 
தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர” (அக 286 – 6 - 7)

“கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து 
பழன யாமை பசுவெயில் கொள்ளும் 
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர” (அகம் 306 – 6 - 8)

“போர் முற்று ஒன்று அறியாத 
புரிசை சூழ்புனல் ஊரன்” 
(கலி மருதம் 2 - 5).

“முன் எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த 
அகன் பெருவட்டி நிறைய மனையோள் 
அரிகாற் பெரும் பயறு நிரைக்கும் ஊர” (ஜங், 47 – 1 - 3)

(ஊர, ஊரன் என்பது ஊர்த் தலைவனைக் குறிக்கும்)

மகிழ்நன் :
“மகிழ்நன் மார்பே வெய்யை யால் நீ” (குறு.73 - 1).
“கழனிநல் ஊர் மகிழ்நர்க்கு என” (நற்.70-8)
“அம்மவாழி தோழி மகிழ்நன்” (ஜங்.31 - 1)
“தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் 
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே அதா அன்று”
(சிறுபாண் 66 - 67)

(இங்கு மகிழ்நன் பாண்டியனைச் சுட்டும்)
“செல்லல் மகிழ்நல்நிற் செய்கடன் உடையென்மன்”
(அகம் 376 -1 )

“பழம்பல் நெல்லின் வேளூர் வாயில் 
………………………………………………………………………..
“புனை இருங்கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என 
மனை யோட் தேற்றும் மகிழ்நன் ஆயின்” (அகம் 166 – 4 -11)

(இது வேளூர் தலைவனைக் குறிக்கிறது).

கிழவன் :
“குருதித்துகளாடிய களம் கிழவோயே.” (புறம் 371 - 27)
(குருதியுலர்ந்து களப்பட்ட போர்க்களத்தை யுரிமை கொண்டவனே - இது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைச் சுட்டுகிறது).
“சாரி நெல்லின் சிறை கொள் வேலி 
ஆயிரம் விளையூட்டாக 
காவிரி புரக்கும் நாடு கிழவோனே” (பொருள் 246 - 48)

(கிழவன். இது கரிகால் சோழனைக் குறிக்கிறது)
“கடும்ப கட்டு யானைச் சோழர் மருகன் 
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்” (அகம் 356 – 12 - 13)

(இவன் சோழன் வழிவந்தவன் ; மிழலைக் கூற்றத்து வேள் ஆவான்.)
“காமம் கை மிகச் சிறத்தலின் நாண் இழந்து 
ஆடினை என்ப - மகிழ்ந! அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் (அக 266 – 8 - 10)

(இது நீடூர் கிழவன் - எவ்வியைக் குறிக்கிறது)
“கொழுமீன் விளைந்த கள்ளின் 
விழுநீர் வேலி நாடு கிழவோனே” (புறம் 13 – 12 - 13)

(நாடு கிழவோனே - நாட்டை உடையோனே - இது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியைக் குறிக்கிறது.)
“கடற் பல்தாரத்த நாடு கிழவோயே” (புறம் 30 - 15) 
(கிழவோயே - இது சோழன் நலங்கிள்ளியைக் குறிக்கிறது)

“காவிரிக் கிழவன் மாயா நல்இசைக் 
கிள்ளி வளவன் உள்ளி அவற்படர்தும்

செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்” (புறம், 399 – 12 -14)
(கிழவன் - இது சோழன் கிள்ளிவளவனைக் குறிக்கிறது)

“ஒரு பிடி படியும் சீறிடம் 
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! (புறம் 40 – 10 - 11).

(கிழவோய் - இது சோழன் கிள்ளிவளவனைக் குறிக்கிறது)
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள் நிற்பா”
(தொல். பொருள் திணை – கற்பியல் – நாற்பா – 11)


“மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசு முழங்குதானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும!” (புறம் 35 – 3 – 5)

(தமிழ்க் கிழவர் – தமிழ் வேந்தர்)
“விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!” (திருமுருகு 267)
(கிழவ – இது முருகனைக் குறிக்கிறது)

“பழம் முதிர்ச்சி சோலை மலை கிழவோனே” (திருமுருகு 317)
(மலை கிழவோனே – இது முருகனைக் குறிக்கிறது)

மேலே கண்ட மேற்கோள்களினால் ஊரன், மகிழ்நன், கிழவன் என்பவர் மருதநிலத் தலைவர்களையும், வேளீர்களையும்; தமிழ் வேந்தரையும் ஏன்? முருகக் கடவுளையும் சுட்டுவதாயுள.
(தொடரும்)

No comments:

Post a Comment