மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
எட்கர் தர்ஸ்டன் கூறுவார்: தேவதாசிகளின் வழிவந்தோர் தங்கள் பெயர்களுக்குப்பின், பிள்ளை, முதலி என்ற பட்டங்களை சூட்டிக்கொள்கின்றனர். இப்பட்டங்கள் பொதுவாய் கைக்கோளர், வெள்ளாளருக்கு உரியவை. இந்த இரு மரபினரிலிருந்தும் ஆலயங்களுக்குப் பணி செய்ய தேரடியார் நியமணம் பெற்றனர்.
Edgar Thurston says: Some of these (Devadasis) affix to their names the title of pillai and Mudali. Which are the usual titles of the two castes (Vellala and Kaikola) from which most of the Dasis are recruited and try to live down the stigma attaching to their birth. (E. Thurston. Castes and Tribes of South India. Vol. II. P. 127)
மேலே கூறியபடி முதலியார் என்ற பட்டத்தை வடமாவட்டங்களில் பல்வேறு வகுப்பாரும் பூண்டு வருகின்றனர். தென்மாவட்டங்களில் பிள்ளை என்ற குலப்பட்டத்தை அகம்படியர், இடையர், இலைவாணியர், இல்லத்துப் பிள்ளைமார், ஈழவா, கொடிக்கால்காரர், இசை வேளாளர் (மேளக்காரர் தேவரடியார்) நாவிதர், வண்ணார் மற்றும் (கொங்கு வேளாளரென்போர் தவிர்த்து) இதர வேளாளர் பிரிவுகள் பூண்டு வருகின்றனர். பிள்ளை என்ற பட்டத்தை வடமாவட்டங்களில் உள்ள இடையரும், பறையரும் தரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கணக்கெழுதும் தொழில் செய்தவர் கணக்கு முதலி அல்லது கணக்குப்பிள்ளை என்றும், பின்னர் முதலியார், பிள்ளைமார் என்றும், நில உடைமை ஏற்பட்டபின் வேளாளர், வெள்ளாளர் என்றும் உரிமை பாராட்ட முற்பட்டனர். இவர்களுள் மரக்கறியை உணவாகக் கொண்டு புலால் உணவைத் தவிர்த்தவர் தம்மைச் சைவமுதலி, சைவப்பிள்ளைமார் சைவவேளாளர் வெள்ளாளர் என்று பாராட்டவும் முற்பட்டனர். பல்வேறு மரபினரும் தம்மை வேளாளர், வெள்ளாளர் என்று கூற முற்பட்டதன் நிமித்தம் “காயிலே கெட்டது கத்தரிக்காய்; சாதியிலே கெட்டது வெள்ளாள சாதி”, “கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளராகி முதலியார் என்று சொன்னார்" என்ற பழமொழிகள் நாட்டில் வழக்கில் வந்தன எனலாம்.
திருமலை நாயக்க மன்னன் அய்யன் என்ற பட்டம் பூண்டி ருந்தான் என முன்னர் கூறியது நினைவிருக்கத்தக்கது. சோழமன்னருள் சிலர் அய்யன் என்ற பட்டம் தரித்திருக்கின்றனர். திருமலை நாயக்கன் தளபதிகள் இராமப்பன், நரசிங்கப்பன் அய்யன் என்ற பட்டத்தை மேற்கொண்டதாக அறிகிறோம். இப்பட்டத்தைப் பூண்டபின் இவர்கள் இராமப்பையன், நரசிங்கப்பையன் என வழங்கலாயினர். இவர்களைப் பின்பற்றி அரசு பணியில் ஈடுபட்ட சிவமதத்தைச் சேர்ந்த பார்ப்பனரும், பின்னர் பல்வேறு தொழில் செய்த பார்ப்பனரும் அய்யன் என்ற பட்டத்தை மேற்கொள்ளலாயினர். அன்மைத் காலத்தில் அய்யன் என்ற சொல் ஒருமையை உணர்த்துவதால் அது உயர்வைக் குறிக்கவில்லை எனக் கருதி அய்யர் என்ற பண்மையால் வழங்க முற்பட்டுள்ளனர். பார்ப்பனரைப் பின்பற்றி செளராஸ்டிரப் பட்டு நெசவாளர் அய்யர் என்ற பட்டத்தை மேற்கொண்டனர். இவர்களுக்கு மதுரை இராணி மங்கம்மாள் இப்பட்டத்தை வழங்கினதாகக் கூறுவர். கிறித்துவ சமயப்பாதிரிகள் அய்யர் என வழங்கி வருவது ஈண்டு நினைவிருக்கத்தக்கது. ஏற்கனவே கூறியது போன்று பிள்ளை, பிள்ளையன், முதலி என்ற பட்டங்கள் முனிவர், மடாதிபதிகள், சமயத்துறவிகள் முதலானோர்க்கு வழங்கின. சைவ சமயப் பெரியார்கள் அப்பர். சுந்தரர், ஞானசம்பந்தர் இவர்கள் மூவர் முதலி எனவும், சமய ஆசானிடம் உபதேசம் பெற்றவர் பிள்ளை, பிள்ளையன் எனவும் பட்டம் தரித்து வந்தனர். நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை, திருமாளிகைப்பிள்ளை, விளாஞ்சோலைப் பிள்ளை, வெம்பத்தூர் பிராமணப்பிள்ளையன் இவர்கள் இதற்கு எடுத்துக்காட்டு ஆவர். இவருள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இன்றையப்பார்ப்பனர் மற்றும் இதர வகுப்பினர் இருந்திருக்கின்றனர். சேரநாடாகிய இன்றைய கேரளாவில், சேரமான் பெருமான் ஏற்படுத்திய ஊரில் வாழ்ந்த சிரிவஸ்தவா கோத்திரம், யஜூர் வேதம் ஓதும் பார்ப்பனர் கோபால் பிள்ளை மகன் நாராயணபிள்ளை என வழங்கியதாக அறிகிறோம் (Dr.R. Caldwell - History of Tinnevelly. Page 65)
பாண்டியர் வரலாறு கண்ட K.A நீலகண்ட சாஸ்திரி பிள்ளை என்ற பட்டம் வழக்கில் வந்தது பற்றிக் கூறுவதாவது:
“அரசின் குடிமக்களில் அரசின் கீழ்ப்பணி செய்தவர்கள் அரசரைத் தந்தையாகப் பாவித்து பற்றுதலோடு தம்மை அரசரது பிள்ளை மக்கள் எனக்கூறிக் கொண்டனர். ஜடாவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில் கோனாட்டில் (புதுக்காட்டை சமத்தானத்தின் ஒரு பகுதி) அதிகாரியாயிருந்தவனைப் பிள்ளை குலசேகர மாபலி வாணராயன் என்று கூறுகின்றது, (இந்த அதிகாரி பிள்ளை மாபலிவாணராயன் என்றும் வழங்கினான்)
A.K Nilakandasastri Says : “The kings to whom those officials who were subjects used terms evincing a paternal interest the terms like Pillai makkal and so on.
An inscription of Jatavarman Vira Pandya mentions a Pillai makka Kullasekara mabali Vinarayan who may be the same as pillai makkal Vanarayan who was in charge of Kanadu (Part of Pudukottai state) under Maravarman Kulaseharan.” [K. A. Nilakanda sastri - The Pandya kingdom. Page. 164].”
அய்யன், பிள்ளை என்ற குலப்பட்டங்கள் வழக்கில் வந்ததுபற்றி எட்கர் தாஸ்டின் கூறுவதாவது, “நாயர் குலப்பட்டம் குழந்தை எனப் பொருள்படும் பிள்ளை ஆகும். இப்பட்டத்தை ஏற்கனவே தென்னாட்டுலே குடுயிருந்த பார்ப்பனர் பூண்டிருந்தனர். பின்னர் பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரைத் தந்தை என்று பொருள்படும் அய்யன் என அழைக்கவும், பார்ப்பனர் அய்யன் என வழங்கலாயினர். அதன்பின் பார்ப்பனர் பூண்டிருந்த பிள்ளை என்ற பட்டத்தைச் சூத்திரர் தமக்கு உரித்தாக்கிக் கொண்டனர்.”
Edgar Thurston says: Nair's title is Pillai (child) once used by Brahmin dwellers in the south. After the Brahmins changed the tille to Ayyan (Father) which the Non - brahmin people called them - the sudras began to use the term Pillai” [Edger Thurston castes & Tribes of South India. Vol. V.).
(தொடரும்)
No comments:
Post a Comment