Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-23

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

மள்ளர் :
மள்ளர் பற்றி நிகண்டுகள் கூறுவதைப் பார்ப்போம். சேந்தன் திவாகரத்தில்
“ஆருந்திறல் விரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளரெனும் பெயர்” என்றும்,

திவாகரத்திற்குப் பின் தோன்றிய பிங்கல நிகண்டில்
“செருமலை வீரரும் திண்ணியரும் மருத 
நிலமக்களும் மள்ளரெனும் பெயர்” என்றும் கண்டுள்ளது.

இந்த இரு நிகண்டுகளின்படி மள்ளர் மருதநில உழவர் மட்டுமின்றிப் போர் மறவரும் ஆவர். திண்ணியன் என்பதற்குப் பொருள் திறளோன் “யானைத் தலைவன்” “வலிமையுடையோன்” ஆகும். சங்க இலக்கியங்கிளில் இவர் எவ்வாறு பேசப்படுகின்றனர் என்பது பற்றிப் பார்ப்போம்.
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை 
மகளிர் அன்ன துனையொடுவதியும் 
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே 
கழனித் தாமரை மலரும் 
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே (ஐங் - 94)


“மள்ளர் கொட்டின மஞ்ஞை ஆலும் 
உயர் நெடுங்குன்றம் படுமழை தலைஇச் 
சுரம் நனி இனிய ஆகுக தில்ல 
அறநெறி இது எனத் தெளிந்த என் 
பிறைறுதற் குறுமகள் போகிய சுரனே!” (ஐங் - 371)


“கோட் கரும்பு அரற்றும் நாட் சுரத்து அமன்ற 
நெடுங்கால் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி 
வலம்கரிவால் இணர் கொய்தற்கு நின்ற 
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே 
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் 
அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே” (ஐங் - 383)


“மள்ளர் அன்ன மரவம் தழீஇ 
மகளிர் அன்ன ஆடு கொடி துடங்கும் 
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில் 
காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல் 
வெஞ்சின விறல் வேற் காளை யொடு 
இன்று புகுதரும் என வந்தன்று துதே” (ஐங் - 400)


“கார்ச்சேன் இகந்த கரை மருங்கின் நீர்இ 
எருமை எழில் ஏறு எறிபவர் குடி 
செருமிகு மள்ளரின் செம்மார்க்கும் செவ்வி
திருநுதற்குயாம் சேய் குழி” (கார் நாற்பது - 31)


“நன்றே காதலர் சென்ற ஆறே 
சுடு பொன் அன்ன கொன்றை சூடி 
கடிபுகுவனர் போல் மள்ளரும் உடைத்தே” (ஐங் - 432)


“ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில் 
பாவை அன்ன குறுந் தொடி மகளிர் 
இழைநிலை நெகிழ்த்த மள்ளர் கண்டிகும் 
கழைக்கண் நெடுவரை அருவி ஆடி. 
கான யானை தந்த விறகின் .
கடுந்தெறல் செந்தி வேட்டு 
புறம் தார்புரி சடைபுலர்த்துவோனோ (புறம் - 251)

இதுகாறும் கண்ட மேற்கோள்களிலிருந்து மள்ளர் மருத நிலப் பெருங்குடியினர் என அறிகிறோம். 

“தண்டுசேர் மள்ளரின் இயலி அயலாது” (நற. 260 / 3)

“எறில்கொல் அஞ்சா அரவின் அன்ன 
சிறுவன் மள்ளரும் உளரே” (புறம் 39 – 5 - 6)

(அதியமான் நெடுமான் அஞ்சி படை மறவர்)


“......... வயின் வயின் 
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை 
வியத்தென்றும் இழிந்தென்றும் இலனே” (புறம் 77 - 7 - 9)


“பொருநறும் இளையன், கொண்டியும் பெரிது என 
எள்ளி வந்த வம்ப மள்ளர்" (புறம் 78 - 6 - 7)


“இளையரும் முதியரும் வேறு புலம் படர 
எதிர்ப்ப எழா அய் மார்ப மண்புல்ல 
இடைச்சுரத்து இறுத்தமள்ள விளர்த்த” (புறம் 254 – 1 - 3)


“மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே” (குறுந் 364 - 8)

“கல்லென் பேர் ஊர் விழவுட ஆங்கண் 
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு” (புறம் 84 – 5 - 6)


“மள்ளர் குழிஇய விழவினாலும் 
மகளிர் தழிஇய துணங்கையானும் 
யாண்டும் கானேன் மாண்தக் கோன்” (குறுங் 31 – 1 - 3)

(சோழன் கரிகாலன் மகள் ஆதிமந்தி சேர இளவரசன் ஆட்டணத்தி ஆகிய வஞ்சிக் கோனைக் தேடுவது பற்றிப் பாடியது)

“அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்” (குறுந் 34 - 5)

“ஒலி இழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர் 
கலி கொள் மள்ளர் வில்விசையின் உடைய 
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்” (புறம் 10 - 9)

(போர்வைக் கோப்பெருநற்கிள்ளியைக் குறிக்கிறது)

“வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்த்து 
வம்ப மள்ளரோ பலரே (புறம் 79 – 4 - 5)


“கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக” (பதிற்றுபத்து 4324 )

வெம்போர் மள்ளர் தென்கினை கறங்க” (பதிற்றுபத்து 9044 )
மேலே எடுத்தாண்ட மேற்கோள்களிலிருந்து மள்ளர் மூவேந்தர் படை மறவராய் இருந்தனர் எனத் தெரிகிறது.

“மள்ளர் மள்ள! மறவர் மறவ! 
செல்வர் செல்வ! செரு மேம் படுந (பெரும்பாடு 455 - 56)

(மள்ளர் மள்ள - போர் மறவருள் சிறந்த போர் மறவன்; மறவர் மறவ - கொடியோர்க்குக் கொடியவன். செல்வர் செல்வ - செல்வரும் மேம்பட மதிக்கும் செல்வமான்) இது தொன்டைமான் இளந்திரையனைக் குறிக்கும்.

“உள் ஆற்றுக் கவலைப்புள்ளி நீழல் 
முழூஉவள்ளூரம் உனக்கும் மள்ள” (புறம் 219 – 1 - 2)

(மள்ள - இளையோன் - வீரன் - மன்னன் இங்கு மள்ள என்பது வடக்கிருந்து உயிர் நீத்த கோப்பெருநற் சோழனைக் குறிக்கும்)

“அறவர் அறவன்; மறவர் மறவன் 
மள்ளர் மள்ளன்; தொல்லோர் மருகன் " (புறம் 399 – 19 - 20)

(அறவர் அறவன் - அறவோர்க்கு அறவன் 
மறவர் மறவன் - கொடியோர்க்கு கொடியவன் 
மள்ளர் மள்ளன் - போர்வீரருள் சிறந்த போர் வீரன்)

இங்கு மள்ளன் என வருவது பழையோருடைய வழித் தோன்றலாகிய அவன் தாமான் தோன்றிக்கோனைக் குறிக்கும்

“கவிகை மள்ளன் கைப்பட்டோரே” (புறம் 81 / 5)
(மள்ளன் - கோப்பெருநற் கிள்ளியைக் குறிக்கும்)

“செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே! 
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள் அவை! 
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே!” (பதிபத்து 4 – 38 – 13 - 15)

மள்ளர் ஏறே - மள்ளருள் சிங்கம் போன்றவன் என்பது சேரன் களங்காய்க் கண்ணிநார் முடிச் சேரலைக் குறிக்கும்.
மேலே கண்ட மேற்கோள்களிலிருந்து மள்ளர்குல மரபினரே மன்னராக இருந்தனர் எனத் தெரிகிறது.、


“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள” (பரிபாடல் 3 – 41)
(மள்ள - திருமாலைக் குறிக்கும்)


“திருவின் கணவ! பெருவிநல் மள்ள! (பரிபாடல் 3 - 90)

(மள்ள - திருமாலைக் குறிக்கும்)

“செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள” (திருமுருகர் – 262) 
(மள்ள - முருகனைக் குறிக்கும்)


ஈண்டு திருமால் முருகன் முதலிய தெய்வங்கள் ‘மள்ள’ என விளிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மருதநில மக்கள் தங்கள் வழிகாட்டியான மன்னனையே. தெய்வமாகக் கொண்டனர் என முன்னர் கூறியது நினைவிருக்கத்தக்கது. திருமால் சூரியகுலத்தைச் சேர்ந்த சோழ மரபினன் என்பர். முருகன் மலையத்துவசப் பான்டியன் மகளாகிய தடாதகைப் பிராட்டிக்கும் சிவபெருமான் அவதாரமாகக் கருதப்படும் சுந்தரபாண்டியனுக்கும் பிறந்த உக்கிர பாண்டியன் என்பதால், அவனும் மள்ளர் குலத்தைச் சேர்ந்தவன் ஆவன். அதனாலேயே திருமாலும் முருகனும் மள்ளரென விளிக்கப்படுகின்றனர் போலும் மலையத்துவசப் பாண்டியன் தேவியான காஞ்சனமாலை சூரிய குலத்தவனாகிய சூரசேன சோழனது மகள் என்பர்.
ஆக மேலேகண்ட சான்றுகளிலிருந்து மள்ளர் மருதநில மக்களின் மரபுப்பெயர் எனத் தெற்றென விளங்குகிறது. சங்ககாலத்தில் மள்ளனார். அம்மள்ளனார், கடுவன் இளமள்ளனார், கடுவன் மள்ளனார், மதுரை அளக்காஞாழார் மகனார் மள்ளனார் என்ற பெயர்கள் உள்ள புலவர்கள் இருந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். எனவே அந்நாளில் மள்ளர் என்ற ஒரு மரபினர் தமிழகத்தில் இருந்தனர் என்பது உறுதியளிக்கின்றது. நிற்க. சங்க இலக்கியங்களில் மள்ளர் மட்டுமின்றி மல்லர் என்ற ஒரு மரபும் தமிழகத்தில் இருந்ததாக அறிகிறோம். இந்த மல்லர் யார்? என்பது பற்றி அடுத்துப் பார்ப்போம்.
(தொடரும்)

No comments:

Post a Comment