Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-26

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பண்டையச் சேரநாட்டுப் பண்பாடு பற்றி ஆய்வு செய்த பேராசியர் M.E. மாணிக்கவாசகம் பிள்ளை கூறுவதாவது: “மள்ளர் / மல்லர் போரில் வெற்றி பெற்ற பகை நாடுகளிலிருந்து கவர்ந்த பொருள்கள் அனைத்தையும் தம் நாட்டிற்குக் கொண்டு வருவர். அதற்குச் சன்மானமாக மன்னர் அவர்களுக்கு யானைகளைப் பரிசாக வழங்குவர். மள்ளர் / மல்லர் தலைவரே மன்னராவர்”.
Prof. M.E. Manickavasagam Pillai says:- "The Mallar used to bring booty from victorious wars for which they received elephants as rewards. The ruler is said to be the leader of Mallar who beat the drum in the battlefield and participated in the festivals of swords which was conducted to celebrate the victory in wars. The interest showed by them to participate in the festivals by making thunderous sound and the weapons used by them in warfare showed the special characteristies by which they are identified. (Tolkappiam Preamble Panambaranar.) Prof M.E. Manickavasagam Pillai culture of Ancient Cheras. Page: 33)
பண்டையக் கர்னாடக வரலாற்று ஆசிரியர் பாஸ்கர் ஆனந்த் சாலோட்டர் கூறுவதாவது: “செவிவழிச் செய்திகள் கூறுவதற்கொப்ப துளுவருள் ஒரு பிரிவினராகிய கோறகர், மைலோ, கோலியர், மோகர் மற்றும் சில வகுப்பினர் போர்க்குணம் உள்ளவர் என்ற நம்முடைய யூகத்தை மெய்பிப்பதாக உள்ளது. இவர்களுள் மைலோ (மல்லர்கள்) என்பவர் நாட்டை ஆட்சி செய்தனர் என நம்பப்படுகிறது.
Dr. Bhaskar Anand Saletore says: "The tradition of the Koragars some of whöm seem to have formed part of the Tulu people, tbe Mailos, the Holeyans, the Mogers and others justify our assumption that they belonged to war-like race. It is believed that the Mailos (Mallar) were the rulers of the Country. (Dr. Baskar Anand Saletore MA Ph.D) Ancient Karnataka. Vol. I (History of Tuluva) Page 5.
ஆக நாம் இதுவரை பார்த்ததிலிருந்து மள்ளர் - மல்லர் என இரண்டும் திராவிடராகிய ஒரே இனத்தைக் குறிக்கும் ஏன்றும் அவர் தமிழகத்தில் குடியேறி ஆறுகளுக்குக் கரைகள் கண்டு, காடுகளை அழித்து நாடாக்கி, குளங்கள் வெட்டி, ஆற்று நீர், மழை நீர் இவற்றை அவற்றில் தேக்கி, நிலத்தை உழுது பண்படுத்தி, நெல்,கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய பயிர்களைப் பயிரிட்டு, ஊர்கள் நகரங்கள் அமைத்து, அரசுகளைத் தோற்றுவித்தனர் என்றும், சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தரும் அக் குடியைச் சேர்ந்தவர் என்றும் தெற்றென விளங்குகிறது. இந்த மள்ளர், மல்லர் குடியினர் இன்று தமிழகத்தில் உள்ளனரா? அல்லது அவர் முற்றிலும் மறைந்து விட்டனரா? என்பது பற்றிப் பார்ப்போம்.
மள்ளர் / மல்லர் யார்? 
தமிழகத்தில் மருதநிலத்தில் உழவுத் தொழிவைக் குலத் தொழிலாகச் செய்துவரும் ஒரே சமூகம் பள்ளர் ஆவர் என்பதை ஒருவரும் மறுக்கு இயலாது. அவர் ஏர்த் தொழில் செய்வதில் மட்டுமின்றிப் போர்த் தொழிலும் ஆற்றுவதற்கு ஏற்ற உடற்கட்டு, மற்றும் வலிமை உள்ளவராகவும் உள்ளனர். தமிழகத்தில் உள்ள கள்ளர், மறவர், அகம்படியர், சாணார் இன்றைய வேளாளர், வெள்ளாளர் இவர்கள் பரம்பரையாய் உழவுத் தொழில் செய்பவர் அன்று. பள்ளர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டம் பொருநை (தாமிரபரணி), மதுரை மாவட்டம் வைகை, தஞ்சை, திருச்சி, கோவை, சேலம் மாவட்டங்களில் பவானி, அமாரவதி, காவிரி முதலிய ஆற்றுப் பாய்ச்சல் பகுதிகளில் இருந்து வருவது கண்கூடு. இவர் பள்ளர் என்ற பொதுப் பெயரோடு கடைஞன், காலாடி, குடும்பன் பன்னாடி தேவேந்திர குலத்தான் என்ற உட்பிரிவுகளை உடையவராக உள்ளனர். இவர் எல்லோரும் தம்மைத் தேவேந்திர குல வேளாளர் என உரிமை பாராட்டி வருகின்றனர். மேலே கண்ட பிரிவுகளில், கடைஞன் மற்றும் காலாடியின் பெண் பாலாகக் கருதப்படும் ஆற்றுக் காலட்டியார் என்பவை மருதநிலத் திணை நில மக்களாக நிகண்டுகளில் பேசப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

M. சீனிவாச அய்யங்கார் இம்மக்கள் பற்றிக் கூறுவதாவது : 
பண்டைய நாளில் பள்ளர் என்ற வகுப்பு தமிழகத்தில் இல்லை. அதற்குப் பதில் தமிழ் இலக்கியங்களில் மள்ளர் என்ற வகுப்பும் பள்ளருள் ஒரு உட்பிரிவாகக் கருதப்படும் கடைஞன் என்ற வகுப்பும் பேசப்படுகின்றன். இவர் முக்கியமாய்ப் பாண்டிய நாட்டில் உள்ளனர். இவர் பரம்பரையாய்ச் செய்து வரும் தொழில் தொண்டை மண்டலத்தில் உள்ள பள்ளி அல்லது வன்னியர் வகுப்பினர் செய்து வருவதை ஒத்திருக்கின்றது. இவர் விவசாயத் தொழிலாளராக மட்டுமின்றிப் படைவீரராகவும் இருந்தனர்."

M. Srinivasa Ayyanagar Says: "There was no such caste as Pallan but instead we find in early, Tamil literature Mallar and Kadaignar, the latter appearing as a sub - division of pallar caste. They are chiefly found in the Pandya country and correspond to the traditional occupation to the Palli or Vanniyar caste of Tondaimandalam. These people, are agricultural labourers and soldiers' [M. Srinivasa Ayyangar. Tamil Studies. Page 71]

M. சீனிவாச அய்யங்கார் பள்ளரை மருதநில மக்களாகிய மள்ளர் என்று கூற முன்வரும் போது, பரம்பரைத் தொழில் அவரை இன்றையப் பள்ளி அல்லது வன்னிய வகுப்புடன் ஒப்பிடுவது சரியன்று. சங்க இலக்கியங்கள் மள்ளர் உழவராக மட்டுமின்றிப் போர் மறவராகவும் செயல்பட்டனர் எனப் பேசுவதாக நாம் ஏற்கனவே கண்டோம். ஆனால், பள்ளி என்பது முல்லை நிலத்துக் குடியிருப்பு ஆகும். முல்லை நிலத்து மக்கள் கால்நடை பேணுபவர். காஞ்சிநகர் அமைப்பு பற்றிப் பெரும்பாணாற்றுப் படையை மேற்கோள் காட்டி M. சீனிவாச அய்யங்கார் கூறும்போது, பள்ளி (இடையர்) வகுப்பார் காஞ்சி நகருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்ததாகக் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (M. Srinivasa Ayyangar. Tamil Studies. Page 76)
மேலும் இவர் (M.சீனிவாச அய்யங்கர்) பள்ளர் என்பது சரியாய் மள்ளர் என உச்சரிக்கப்பட வேண்டுமென்றும், அவர் பாண்டியர் படை மறவர் என்றும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. “The Pallar Correctly Mallar formed the Pandian army” (M. Srinivasa Ayyangar Tamil Studies. Page 107) இங்கும் M. சீனிவாச அய்யங்கார் மள்ளர் / பள்ளர் பாண்டியர் படைவீரர் என்று மட்டும் கூறுவது சரியன்று. ஏற்கனவே மேற்கோள்கள் காட்டிய இலக்கியங்களில் அவர் மூவேந்தரின் படை மறவராய் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
M.சீனிவாச அய்யங்கார் பள்ளர் என்பது மள்ளர் என உச்சரிக்கப்படவேண்டுமென்றும் பள்ளருள் ஒருபிரிவாகிய கடைஞன் என்பவர் பள்ளருடன் சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்றனர் என்று கொண்டு அதே கருத்தை டாக்டர் K.R. அனுமந்தனும் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுவதாவது: “பள்ளர் கடைஞன் என்ற பட்டமும் கொண்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் பண்டைய நாளில் வீரத்திற்குப் பேர் போனவராகப் பேசப்படும் மள்ளர் அனேகமாய் இன்றையப் பள்ளரின் முன்னோராக இருக்கலாம்.”
Dr. K.R. Hanumanthan says: “The ancient heroic tribe called Mallar described in the Sangam classics were probably the ancestors of Pallas’. [Dr.KR. Hanumanthan untouchability – A Historical study Page 100]
மேலும் தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் மள்ளர்தான் இன்று பள்ளர் என வழங்குகின்றனர் என்ற கருத்தைப் பல அறிஞரும் வெளியிட்டுள்ளனர். டாக்டர் G. ஓப்பர்ட்(Original inhabitants of India. page. 98), டாக்டர் வின்சுலோ (Tamil and English Dictionary. Page 745), T.K.வேலுப்பிள்ளை (Travancore State Manual 1940). ஞா. தேவநேயப் பாவாணர் (செந்தமிழ்ச் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு) பண்டித சவரிராயார், ந.சி. கந்தையா பிள்ளை. (தமிழ் சரித்திரம். பக். 206) சோ. இலாக்குமிரதன் பாரதி (நமது சமூகம் பக்கம் 218) இவர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவர் ஆவர். இம்மரபினர் பற்றி நாயக்கர் காலமாகிய கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பள்ளு நூல்களில் பள்ளர் என்ற மள்ளர் என்றும் பேசப்படுவதைக் காணலாம். மேலும், 1961 - ல் அரசு எடுத்த மக்கள் குடிக்கணக்கிலும், இன்றையப் பள்ளர் சங்ககால மள்ளரின் வழித் தோன்றல்கள் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. (Census of India 1961. Vol IV Madras. Part VI. Villagae survey. Monograph Kanakkangiri Village. Salem Dt.)

A.V சுப்ரமணிய அய்யர் இம்மக்கள் பற்றிக்கூறுவதாவது: "மக்களில் முக்கிய உணவாகப் பயன்படும் நெல் பண்டைக் காலந்தொட்டு தமிழகத்திலும், பிற பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருவது பலரும் அறிந்ததே. இதைப் பண்டுதொட்டுப் பயிர் செய்து வருபவர் பள்ளர் ஆவர். இவர் ஏற்கனவே செடியூல் வகுப்புப் பட்டியலில் இடம்பெற்றுக் காந்தியால் அரிசன் என வழங்குபவருள் ஒரு சாராராவர். இவரது பழக்க வழக்கம் மற்ற மரபினரிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும். இன்றைய நாளில் பல்வேறு பிரிவினரும் நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. ஆனால் இது சாகுபடி தொழிலாளர் தகராறு காரணமாகவே ஆகும். எனினும், நெல் சாகுபடி பெரும்பாலும் பள்ளரின் கையிலேயே இன்னும் தொடர்ந்து இருந்து வருவது அது அவரது பரம்பரைத் தொழில் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது. இத்தொழிலைச் செய்வதில் அவர் மிகவும் பெருமை கொள்வர். இதில் அவர்களுக்கு ஈடானவர் தமிழகத்தில் வேறு ஒருவரும் இல்லை எனில் அது மிகையாகது.”
A.V.Subramania Ayyar says: “It is common knowledge that the tilling of the soil and the cultivation of the stable food or paddy have been in the ages past mainly in the hands of a welknown community in this as in any other areas of the land. The community is known as Pallar who constitute an important group of Harijans in Gandhian parlance and of scheduled castes in legal termminology with a special culture of their own. Though in recent generation some people of other communities have also taken to paddy cultivation as a matter of necessity owing to agrarain trouble or other causes, the bulk of the work even today is in the hands of the pallas who take pride in the hereditary occupation and whose skill in the technique of Paddy cultivation is unsurpassed inspite of economic backwardness of the community has been having a happy existence and they would not give up their customs and manners and way of life for all the world'. (A.V.Subramania Ayyar - Tamil Studies, part II. pagae 67, 68)
(தொடரும்)

No comments:

Post a Comment