Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-39

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

குடும்பவாழ்க்கை தமிழகத்தில் முதன்முதலில், தேவேந்திர குலத்தாரிடையே தோன்றியதாலும், அவரைப் பின்பற்றியே பிற குடிகள் திருந்திய குடும்ப வாழ்க்கை மேற்கொண்டதாலும், குடும்பன் என்ற பெயர் சிறப்பாய் இவர்களுக்கே உரித்தாயிற்று எனலாம். அல்லி அரசாணி மாலையில் அர்ச்சுனனைப் பெண் உருவங்கொண்ட கிருஷ்ணன் வாடா குடும்பன் மதி பழிவானென்றழைத்தார். எனக் கண்டிருப்பதிலிருந்து தேவேந்திர குலத்தாருக்கான குடும்பன் என்ற குலப்பட்டம் பாண்டவருள் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கும் சூட்டப்பட்டிருப்பதால், பாண்டவரும் தேவேந்திரிகுலத்தாரும் ஒரே மரபைச் சேர்ந்தவர் எனக்கருத ஏதுவாகின்றது. (அல்லி அரசாணிமாலை. பக். 72) பாரதப்போரில் மூவேந்தர் கலந்துகொண்தாடகச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன என்பது நாம் அறிந்ததே. பண்டியரைப் பஞ்சவன் என்றும், கெளரியா என்றும் சங்கு இலக்கியம் கூறுவதும், கரிவலம்வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் கல்வெட்டுகள் தேவேந்திர குலத்தாருக்குப் பாண்டியன் பஞ்சவன் என்ற விருது வழங்கியதாகக் கூறுவதும் இவண் நினைவிருக்கத்தக்கது. இன்று உயர்குடி என்று பெருமை பாராட்டிவரும் அநேக மரபுகளின் குடும்ப வாழ்க்கை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வாறு அமைந்திருந்ததென்பது பற்றி மாவட்டக் குறிப்புகள், தென்இந்தியக் குலங்களும், குடிகளும் என்ற நூல்கள் விரிவாய் எடுத்து இயம்புவதைக் காணலாம். பெரும்பாலான வகுப்புகள் மிகவும் சமீபகாலத்திலேயே, திருந்திய குடும்ப வாழ்க்கை மேற்கொண்டன என்பதற்கும் இவைகள் முற்காலத்தில் திருந்தாத வாழ்க்கை மேற்க்கொண்டனவாய் இருந்தன என்பதற்கும், இவைகளிடையே நிலவும் பண்டையப் பழக்க வழக்கங்களின் எச்சங்கள் எடுத்துக்காட்டாய் அமையும். தெலுங்கருள் பல வகுப்பார் தமிழகத்தில் குடியேறி நாலைந்து நூற்றாண்டுகளாகியும் கூட, அவரிடையே இன்னும் முற்றும் திருந்திய குடும்ப வாழ்க்கை ஏற்பட வில்லை என்பது மாவட்டக் குறிப்புகள் மற்றும் குலங்களும், குடிமகளும் என்ற நூல்களிலிருந்து அறியலாம். இதுபற்றி அறிஞர் சிலர் வெளியிட்டுள்ள செய்திகளைக் காண்போம்.
எட்கர் தர்ஸ்டன் கூறுவதாவது: “தமிழகத்தில் கம்மவார்களிடத்தில் மணமகன் சில சமயங்களில் மணமகளைவிட வயதில் அதிக இளமையாய் இருக்கக் காணலாம். மக்கள் குடிக்கணக்கெடுப்பில் இருபத்திரண்டு வயதுப்பெண் இரண்டு வயதுள்ள தன் கணவனை ஒருதாய் குழந்தையை வைத்திருப்பதுபோல வைத்திருந்தாள் என ஒரு செய்தி காணப்படுகிறது.”

Edgar Thurston says: “In Tamil country among kammas the bridge - groom is said to be sometimes much younger than the bride and a case is on record of a wife of twenty two years of age who used to carry her husband in her lap as a mother carries her child. [Edgar Thurston: Castes and tribes of South India. Vol. 1,100]
இதே போன்று கொங்கு நாட்டில் இன்று கொங்குவேளாளர் எனக் கூறி வரும் கவுண்டர்களிடம் சிறு பையன்களுக்கு வயது வந்த பெண்ணை மணம்முடிக்கும் பழக்கம் உண்டு. C.M. இராமச்சந்திரன் செட்டியார் இப்பழக்கம் பற்றி கூறுவதாவது: கவுண்டர்களிடையே திருமண உறவுகளில் மாமன் மகளை மணப்பது முதல் உரிமை. அவருக்கு உரிமைப் பெண் என்ற பெயரும் உண்டு. உரிமைப் பெண் மணமகனைவிட மூத்தவளாக இருக்கலாம். இந்தக் கொள்கை சிறிது காலம் வரை வழக்கத்தில் இருந்தது. (CM. இராமச்சந்திரன் செட்டியார். கொங்கு நாட்டு வரலாறு பக்கம் - 54). 
இம்மாதிரி நிகழும் திருமணங்களில் மணமகனது கடமையை வீட்டிலுள்ள வயது வந்த ஆண் மகன் நிறைவேற்றுவான். நாலு வயதுத் தகப்பனுக்கு 2 - வதுக் குழந்தை இருக்கும். இந்தப் பழக்கத்தால் பிறந்த குழந்தையின் தகப்பன் யார்? என்று அருதியிட்டுக் கூற இயலாது. [Edgar Thurston Castes and tribes of south India. Vol.II Page - 193)
நாட்டுக்கோட்டைச் செட்டியாரிடையும் இப்பழக்கம் உண்டு. பிறமலைக் கள்ளர்களிடையே ஏற்கனவே கூட்டுக்கணவர் முறை (Polyandry) வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. இவரது பழக்கம், பற்றி, எட்கர் தர்ஸ்டன் கூறுவதாவது: “பிறமலைக் - கள்ளர்களிடம் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் உள்ளது. பெரும்பாலும் ஒரு பெண் பத்து, எட்டு, ஆறு, இரண்டு கணவருக்கு மனைவி எனவும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவளது கணவன்மார் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தம் குழந்தைகள் என்பர். இன்னுமொரு பெரிய விசித்திரம் என்னவெனில் பத்து, எட்டு, ஆறு, அல்லது இரண்டு தகப்பன்மார் குழந்தைகள் என வழங்காமல் எட்டும் இரண்டும், ஆறும் இரண்டும், நான்கு இரண்டும் (நாலுஇரண்டு) தகப்பன்மார் குழந்தைகள் எனவழங்குவர்.
Edgar Thurston says: "One of the customs of the western Kallas is especially curious. It constanly happens that a woman is the wife often, eight, six or two husbands who are held to be the fathers jointly and severally of any children that may be born of her body and still more curiously when the children grow up they for some unknown reasons invariably style themselves as the children not often, eight or Six fathers as the case may be, but of eight and two or six and two or a four and two fathers”. (Edgar Thurston. Castges and Tribes of South India. Vol. III P.77)

தொடிய நாயக்கர் ஒரு பெண்னைக் குடும்பத்திலுள்ள ஆண்கள் மற்றும் உறவினர் அனைவரும் மனைவியாகப் பாவித்ததாக அறிகிரோம். (Edgar Thurston. Castes and tribes of South India. Vol. V III Page 184 - 85 & 93) மேலே கூறிய பழக்கங்களின் எச்சங்கள் நாடு விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட சிலமரபினரிடையே இன்னும் வழக்கில் இருந்து வருவதாக அறிகிறோம். இதுபற்றி கி. வரதராசுலு கூறுவதாவது: "தருமபுரி மாவட்டத்தில் பாலுறவு முறைகளில் சில நெகிழ்ச்சியான போக்குகளை இங்கு குறிப்பிடுதல் அவசியம். தருமபுரி, கோவை மாவட்டங்களில் மருமகளுக்கும், மாமனுக்கும் உள்ள பாலுறவுகளைப்பற்றி மானிட இயல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளர். அதன் எச்சங்களை இன்னும் காணலாம். இது ஒரு குறிப்பிட்ட சராரிடையே மட்டும் காணப்படுகிறது. இதைப் போலவே தருமபுரி மாவட்டம் கரூர் விட்டாரப் பகுதிகளில் அண்ணன் மனைவிக்கும், தம்பிமார்களுக்கும் இடையே பாலுறவுகள் சென்ற தலைமுறை வரை அனுமதிக்கப்பட்டின. இன்னும் அதன் எச்சங்களைக் காணலாம். (S.V.சுப்ரமணிம், தொகுப்பு ஆசிரியர் நாட்டுப்புற இயல். பக். 237 - 38).
நீலகிரி மலைவாழ் தோடர்களிடம் பல கணவன்முறை இன்னும் நீடிக்கிறது. ஒரு குடும்பத்தில் மூத்த சகோதரன் மனைவியை அவனது உடன்பிறந்தவர் அனைவரும் மனைவியாகக் கொள்வர். கேரள நாயரிடம் பெண்கள் வயதுக்கு வந்த உடன் தாலிகட்டு என ஒரு சடங்கு நடத்தி அந்தத் தாலிக்கட்டில் மணமகனாகப் பங்கு கொள்பவனுக்கு தாலி கட்டி முடிந்த உடன், சன்மானமாக ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து அவனை அனுப்பி விடுவர். இம்மாதிரித் தாலி கட்டப்பட்ட பெண் தான் விரும்பும் ஆடவருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். ஒரே காலத்தில் 12 ஆடவருடன் உறவு வைத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த மாதிரி உறவு மூலம் பிறந்த குழந்தைகளைப் பன்னிரண்டு தகப்பன்மார் குழந்தைகள் (Children of twelve fathers) என்று அழைப்பர். தகப்பன் நம்பூதிரிப் பார்ப்பனராய் இருக்கலாம். ஆனால் அவர் மூலம் பிறந்தவர் நாயர், மேனன், நம்பியார், குரூப், பிள்ளை என்ற பட்டம் தரித்துத் கொள்வர். இப்பழக்கம் மருமக்கத்தாய முறை பின்பற்றப் பட்டதன் விளைவு ஆகும். இங்கு பொதுவாய் ஆண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது. பெண்களுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. நம்பூதிரிப் பார்ப்பனர் தாம் விரும்பும் நாயர் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளலாம். அதே போன்று நாயர் ஆடவரும் தாம் விரும்பும் நாயர் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளலாம். நாயர் பெண்கள் மறுப்புச் சொல்லக் கூடாது. கேரளாவில் உள்ள தீயர், இரவர் இவர்கள் இடையே ஒரே பெண்ணை வீட்டிலுள்ள சகோதரரர் அனைவரும் மனைவியாகக் கொள்வர். இங்குள்ள கம்மாளரும் அப்படியே. (K.M.Kapada.B.A., Ph.D. Marriage and family life in India.]

தமிழகத்தின் சுதேச சமத்தானங்களின் மன்னர், தம் ஆட்சிக்குட்பட்ட பெண்களில் தாம் விரும்புகிறவரை அடைய உரிமை கொண்டாடினர். மன்னர் யாரையாவது விரும்பினால் அதற்கு அப்பெண் உடன்படவேண்டும். சமீன்களிலும் இந்நிலையே வழக்கில் இருக்கின்றது. இதை இராஜ விசுவாசம் என்பர். சமஸ்தானங்களில் பொதுவாய் தெலுங்குப் பார்ப்பனர் இராஜகுருவாய் இருந்து வந்தனர். இவர்கள்தான் சுதேச மன்னர், அல்லது பட்டத்துக்கு உரியவர் திருமணங்களை நடத்தி வைப்பர். இத்திருமணங்களில் சாந்தி முகூர்த்தம் என்ற ஒரு சடங்கு நடைபெற்றால்தான் அவை நிறைவுபெறும். இச்சடங்கு நடைபெறாமல் மணமகனுக்கும், மணமகளுக்கும் கணவன் மனைவியாய்க் கூடி வாழ முடியாது. இச்சடங்கை நடத்தி வைப்பவர் இராஜகுருவே ஆம். மலபாரில் பதினேழாம் நூற்றாண்டு இறுதி பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமணம் ஆன சாமரின் திருமணம் நடத்திவைக்கும் நம்பூதிரி அல்லது வேறு குரு அனுமதியின்றி, அரசியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. அரசிக்கு இராஜகுரு மூலம் முதற் குழந்தை தரிக்கி வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் வழக்கில் இருந்தது. மற்றும் பிரபுக்களுக்கும் இதே பழக்கம் வழக்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edgar Thurston says: “Hamilton writing concerning Malabar at the end of the seventeenth and the beginning of the eighteenth century says that when thë Zamorin marries, he must not co habit with his bride till the Nambudary or other priest has enjoyed her and if he pleases may have three nights of her company because the first fruits of her nuptil must be on holy oblation to the god he worships and some of the nobles are so complacent as to allow the clergy the same tribute (Edgar Thurston - Castes & Tribes of south India ÉVöI. V. Page 210.)
Abbe I. A. Duboin says: There exists in the same part of the country another caste known as Tottiyan in which brother uncles nephews and other relatives are also entitled is posses these wives in common (Abbe Duboin - Hindu manners customes and cermonies - page 117).
Rev. அபே JA டுபாய் கூறுவதாவது:- தமிழகத்தில் தொட்டியன் என்ற வகுப்பார் தங்களது சகோதரர்கள், மற்றுமுள்ள உறவினர்களின் மனைவியருடன் பொதுவாக அனைவரும் உடலுறவு கொள்ள உரிமை பெற்றிருந்தனர். (Rev. அபே. JA டுபாய் - இந்து பழக்கவழக்கங்கள் – பக். 117)
தொட்டிய நாயக்கர் புரோகிதனே மணமகளோடு முதல் இரவைக் கழிக்கும் உரிமை பெற்றிருந்தனர். பார்ப்பனரைத் தவிர மற்ற மரபினர். சூத்திரர் என்பதால், பார்ப்பனர் அனுமதியின்றி, அவர் தாம் திருமணம் செய்த பெண்களோடு கூடி வாழ உரிமை அற்றவர்களாய் இருந்தனர்.
நாய்க்கர் ஆட்சியில் நாயக்க மன்னரை அண்டிவாழ்ந்த தமிழ், மரபினர் தெலுங்கரது பழக்க வழகங்களைப் பின்பற்றலாயினர். இவற்றில் முக்கியமானது தங்களது திருமணங்களைத் தெலுங்குப் பார்ப்பனர் புரோகிதரைக் கொண்டு நடத்துவது ஆகும், தெலுங்கருக்குள் சாந்தி முகூர்த்தம் சடங்கு (கணவன் மனைவி முதல் இரவு) நடைபெற்றால்தான் திருமணம் நிறைவு பெறும். இந்த சாந்தி முகூர்த்தச் சடங்கை நடத்தி வைக்கும் பார்ப்பனப் புரோகிதர் வயது முதிர்ச்சியினாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ முதல் இரவு அன்று தன் கடமையை நிறைவேற்ற முடியாமற் போனால், அந்த மரபிலுள்ள பெரியவர் ஒருவரோடு அந்த மணமகள் முதல் இரவைக் கழிக்க வேண்டும். இதற்கு அந்தப் பெண் உடன்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அவள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. அப்படி மறுத்தால் அந்தப்பெண் கட்டாயப் படுத்தப்படுவாள். நாயக்கர், ஆட்சி தமிழகத்தில் ஏற்படுமுன் தமிழர் பார்ப்பனக் குருக்கள் தலைமையில் திருமணம் நடத்தும் பழக்கம் வழக்கில் இல்லை என்றே தெரிகிறது. தமிழ்ப் பார்ப்பனப் புரோகிதர் தங்கள் மரபினர்க்கு மட்டும் நன்மை துன்மைச் சடங்குகளை நடத்தி வருவது கண்கூடு. காலப்போக்கில் குல உயர்வு தேட முனைந்த பல்வேறு பிரிவினரும். தெலுங்கு பார்ப்பனப் புரோகிதர்களைச் சமயக்குருக்களாக ஏற்று, அவரைக் கொண்டு திருமணம், சாவுச்சடங்குகளை நடத்த முற்பட்டனர். சமீபகாலம் வரை இன்று உயர்சாதி எனப் பாராட்டி வரும் மரபினர். இந்த, சாந்தி முகூர்த்தச் சடங்கை நடத்தி வந்தனர் என்றும் மணப்பெண் முதல் இரவைத் தெலுங்கு பார்பபனக் குருவோடு கழித்து வந்ததாகவும் செவிவழிச் செய்தியாக நாம் அறிகிறோம். சுயமரியாதைத் திருமணம் நாட்டில் பரவியபின்னரும் கூடத், தெலுங்குப் பார்ப்பனக் குருக்களை வைத்து தமிழ்மரபினரில் பலர் திருமணம், சாவுச்சடங்கு மற்றும் புதுமனை புகுவிழாச் சடங்குகளை நடத்தி வருவது கண்கூடு.

செங்குந்தர், கைக்கோள வகுப்பினர் தத்தம் குடும்பங்களிலிருந்து ஒரு பெண்ணை கோயிற் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். இப்பெ ண்களுக்கு கோயில்களில் பொட்டுக் கட்டுவர். இம்மாதிரிக் கோயிலில் பொட்டுக் கட்டுபவர் தேவரடியார் என வழங்கினர். சில மரபினர் பெண்களுக்குத் திருமணம் செய்யாமல், அவர் விரும்பும் ஆடவருடன் கூடிப் பிள்ளைபெற அனுமதித்துள்ளனர். இப்பழக்கத்தை நியாயப்படுத்தச் சில சடங்குகளைச் செய்தனர். கொங்கு நாட்டு மன்றாடியார் வகுப்பைச்சேர்ந்த ஒரு சாரார். 150 ஆண்டுகளுக்கு முன், பழனிப் பகுதியில் பொருபான் என்ற ஊரில் குடியேறியவர், பின்பற்றி வந்த பழக்கத்தை அண்மையில் “இந்து நாளேடு” (The Hindu) படம் பிடித்துக் காட்டியுள்ளதைக் கீழே காண்போம்.
பொருபான் என்பது ஒரு பழைமையான ஊர். அதில் பெரும்பாண்மையாய் இருப்பவர் மன்றாடியார் வகுப்பைச்சேர்ந்தவர். சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் இவர் கொங்குநாடாகிய சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து இங்கு குடியேறியவர் ஆவர். இவருள் ஒரு பிரிவில் பெரும்பாலான குடும்பங்கள் ஒரு விசித்திரமான பழக்கத்தைப் பின்பற்றுகின்றன. அவர்தம் பெண்களுக்கு மணமகனைத் தேடுவதில்லை. நகைகளுக்காகவும், திருமணவிருந்து செலவிற்கு எனவும், பணம் விரையம் செய்வதுமில்லை. அவர் செய்வதெல்லாம் ஒரு வெள்ளிக் காப்பை (வளையல்) தங்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் தொங்க விடுவதுதான். அந்த மரத்தை நெடை மரம் என்பர். இந்த நெடை மரத்தை அந்த வீட்டின் காவல் தெய்வமாக வணங்குவர். வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் வெள்ளிக் காப்பு தொங்கினால், அந்த வீட்டிலுள்ள பெண்ணிற்குத் திருமணம் நடந்து விட்டதாகக் கருத வேண்டும். அந்த வீட்டிலுள்ள பெண் நெடை மரத்தைத் தினமும், வணங்கி வருவர். அந்தப் பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ள விரும்பும் ஆடவர் தாராளமாய் அந்த வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். இம்மாதிரி உறவு மூலம், பிறந்த குழந்தைகளைக் கடவுளின் பிள்ளைகள் என்பர். இப்பழக்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கில் இருந்து வந்துள்ளது. (The Hindu 21 – 4 - 1978)

The Hindu Reports: A girl getting married to a tree may sound strange but the practice prevailed in Porbhan until a quarter of a century ago. Thoughy the practice has been given up, to know how the strange custom was in vogue for many years make one také a close look of the village, of the temples and festivals.
"This is an old village and its people a majority of them. belonging to the Manradi community came from Kongu Nadu Coimbatore and Salem districts over 150 years ago. Many families among a sub - sect of the community followed a strange marriage custom. They did not boother to choose a match for thier daughters. They did not squander their money for jewels and marriage feasts. All that the girl did was to hang a silver bangle on a tree in front of house. 'Nedai Maram’ as it is used to be called. The tree is the protector of the house. The bangled tree in front of the house was an indicattion that the girl of the house was married. She worshipped the tree every day. Her house was open to special visitors and the children born to the girl were looked upon as god's Children'. (The Hindu 21-4-1978.)
காரைக் கட்டு வேளாளர் இடையே உள்ள பழக்கம் பற்றி W.R. கார்னிஸ் கூறுவதாவது:- காரைக் கட்டார் தம்மை இன்று கார் காத்த வேளாளர் என்பர், இவரிடையே விசித்திரமான பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன. பழனிப் பகுதியிலுள்ள இம்மரபினர்க்கு சொத்து இருந்து, ஆண் வரிசு இல்லாமல் பெண் வாரிசு மட்டும் இருப்பின் முறைப்படி பெண்ணை தக்க வயதுடைய ஆண் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில்லை. மாறாக அவளை ஒரு சிறு பையனுக்கோ, அல்லது வீட்டின் வாசற்படி, அல்லது வீட்டின் ஒரு பாகத்திற்கோ மணமுடித்து வைப்பர். அந்தப் பெண் தன் மரபிற்குள் தான் விரும்பம் ஆடவருடன் கூடிக் குழந்தைகள் பெறுவர். இம்மாதிரிப் பிறக்கும் குழந்தைகள் அவளது தந்தையின் சொத்துக்களுக்கு வாரிசாவர்.

W.R. Cornish says:- "In the case of Karaikat Vellalas whenever an estate is likely to descend to a female in default of a male issue she is forbidden to marry an adult but goes through the ceremony of marriage with some young male child or in some cases with a portion of the father's dwelling - house on the understanding that she shall be at liberty to abuse herself with any man of her caste to whom she may take a fancy and her issue so begotten inherits the property which is thus retained in the woman's family. (Surgeon Major W.R. Cornish, - Census of Madras Presidency 1871. Vol. I as found in J.H. Nelson. Madurai Manual. VoIII. Page. 55) .
பழனிப்பகுதியில் வாழும் காரைக் கட்டு வெள்ளாளரிடையே இன்னொரு விநோதப் பழக்கமும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. விதவைகள் மறுமணம் செய்து கொள்வர். கணவனது உறவினரோடு பெண்கள் கூடி அவர்களை மகிழ்விப்பர், குடும்பத்திற்கு வெளியே, பெண்கள் சோரம் போனால் சமூகத்திலிருந்து அவர் நீக்கப்படுவர். இத்தகைய பழக்கம் இருந்துவந்தது இவரிடையே ஏற்கனவே கூட்டுக் கணவன் முறை பின்பற்றப் பட்ட தென்பதைப் புலப்படுத்துவதா யுள்ளது.
“An interesting account written by Licuftenant Ward in 1824 of the Karaikat Vellalar of Palani Hills is referred to in the Madurai Manual. Widows are free to remarry and wives are accustomed it is supposed to grant the last favour to their husbands' relatives. Adultery outside the husband's family entails expulsion from caste. This custom is probably the survival of fraternal polyandry (Madras census Report 1891. Page 232).
சோழப் பேரரசு காலத்தில் தமிழகம் முழுவதும் குடும்பு முறையில் ஊராட்சி நடைபெற்று வந்தது. சோழ அரசு வலி குன்றியகாலை பாண்டியநாடு தன்னுரிமை பெற்றதோடு, அது சோழ நாட்டையும் வென்று அதைத் தன் மேலாதிக்கத்திற்குள் கொண்டு வந்தது. கி.பி.14 ஆம் நூற்றாண்டில் மதுரை விசயநகர அரசு அதைத் தொடர்ந்து நாயக்கமன்னர் ஆளுகைக்குள் வந்து விட்டாலும் பாண்டிய நாட்டின் சில பகுதிகளை குறிப்பாகத் தென்பாண்டி நாட்டில், பாண்டியர் குறுநில மன்னர்களாக இரண்டு மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்து, வந்திருக்கின்றார். கி.பி.18 - ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கூடப், பாண்டிய மன்னர் இருந்ததாகக் குற்றாலக் கல்வெட்டு கூறுவதாக அறிஞர் சிலர் கூறுவர். எனவே குடும்பு முறையானது பாண்டியர் ஆட்சிக்குள்பட்ட இடங்களில் தொடர்ந்து நீடித்துவந்ததாகத் தெரிகிறது. விசயநகர ஆட்சி தமிழகத்தில் பரவும் வரை பாண்டியர் ஆட்சி நடைபெற்று வந்ததால் பாண்டியநாடு, கொங்கு நாடு இங்குள்ள தேவேந்திரகுலத்தார் தொடர்ந்து குடும்பன் என்ற பட்டம் பூண்டு வருகின்றனர் எனலாம். முன்னர் குறிப்பிட்டது போன்று, சோழநாட்டில் இவர் மூப்பன், காலாடி, பணிக்கன், வாய்க்காரன் என்ற குலப்பட்டங்களைத் தரித்து வருகின்றனர். இங்கு இவரது குலப்பட்டங்கள் எவ்வாறு இருப்பினும் பண்டையக் குடும்பு முறையைப் பின்பற்றி, ஊர் பஞ்சாய்த்துமுறை இவர் மத்தியில் அமுலில் இருந்துவருவது அறியத்தக்கது. கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் காணப்படும் அக்கசாலை, வாரியன், இளந்தாரி என்ற உறுப்பினர் இம்மரபினரின் இன்றைய ஊர்ப் பஞ்சாயத்துகளிலும் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலான இதர மரபினரிடம் இவ்வித அமைப்பு இல்லை என்று அந்தர் பெத்தெய்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. (Andhare Betteilli. Caste old and new page 80).
(தொடரும்)

No comments:

Post a Comment