மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியன்
“அகத்தியனோடு தமிழாராய்ந்தும்,
மண்ணதிரா வகை வென்று தென்மதுரா புரஞ்செய்தும்
அங்கதனில் அருந் தமிழ் நற் சங்கம் இரீ இத்
தமிழ் வளர்த்தும்”
எனவும்.
சின்னமனூர் செப்பேட்டில்
“தென்தமிழ் கரைக்ண்டும்
………………………………………………………………………………..
உளமிக்க மதியானா லொண்டமிழும் வடமொழியும்
பழுதறத் தானாராய்ந்தும் பண்டிதரின் மெந்தோன்றியும்"
எனவும் கண்டுள்ளது. இதற்குச் சான்றாக அமையும். பாண்டியர் மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தனர் என்பதற்கு
“தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே" (புறம் 53 / 13)
“தமிழ்நிலை பெற்ற தாங் கரு மரபின்
மகிழ்நனை மருகின் மதுரையும் வறிதே" (சிறுபாண் 66 - 67)
என்ற மேற்கோள்கள் சான்றாகும். பாண்டிய நாடு செந்தமிழ் நாடு என்வும், மற்றவை கொடுந்தமிழ் நாடு எனவும் வழங்கின என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஒளவையார் பாண்டியன் ஒருவனைப் பற்றிப் பேசும் போது, 'நின்னாடு நல்ல தமிழுடைத்து' என்று கூறியதுவும், பாண்டியன் “தமிழ் நாடன் என வழங்கியதுவும் அறியத்தக்கது. தமிழரை அண்டித்தொழுது தொழில் கற்று வாழ்ந்த மக்கள் தமிழைக்கற்று சுத்தத்தமிழ் பேசியவர் ஒரு புறம் இருக்க, தமிழரை அண்டாமலும், தமிழை அறைகுறையாகக் கற்று நன்கு அதை உச்சரித்துப் பேசத்தெரியாதவர்களும் அந்நாளில் நாட்டில் இருந்தனர். இத்தகையோர் பேசிய பேச்சுக்கள் தான் சேரிமொழி, வழுவுச்சொல். விரவுமொழி, தழுவுழெழி எனப் பலவாறு வழங்கின எனலாம். இக்காலத்திலும் கூடத் தமிழை நன்றாய்ப் பேசத்தெரியாத சில வகுப்பார் தமிழகத்தில் இருந்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் பிற மலைக்கள்ளர் பேசும் தமிழ் அப்பகுதிவாழ் பிற மரபினர் புரிந்து கொள்ள முடியாதவாறு உள்ளதாகத் தெரிகிறது. (அஜ்மல்கான் - பிறமலைக்கள்ளர் சமுதாய மொழியியல்) ஏன்? புதுக்கோட்டைப்பகுதி வாழ் கள்ளர் பேசும்தமிழ் அங்குள்ள மற்ற மரபினர் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாய் உள்ளது என மொழியியல் ஆராய்ச்சியாளர் கூறுவர். 'பறையன் பேச்சு அரைப்பேச்சு (Paraya talk is half talk) என்ற மொழியும் நினைவு கூரத்தக்கது. “தமிழரென்போர் பறையர் தவிர்த்த மற்றவர்” என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் கண்டுள்ளது இதனாலே போலும். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவருள் ஒரு சாராரைப் பழந்தமிழர் என்று தனிமைப் படுத்தும்போது தமிழைப் புதிதாய்த் தாய்மொழியாகக் கொண்டவர் உள்ளனர் என்பது சொல்லாமலே விளங்கும். ஆங்கிலேயரிடம் இந்திய நாடு அடிமைப்பட்டபோது, அவர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொள்ளுமுகத்தான், அதை நாட்டில் விரைவில் பரப்ப ஆங்காங்கு பள்ளிகள் நிறுவி, இந்தியருக்கு ஆங்கில மொழியைக் கற்பிக்க வகை செய்தனர். அதே போன்று இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்து சுயாட்சி பெற்றபின், இந்தி மொழி இந்நாட்டின் பொது மொழிகளில் ஒன்றாக ஏற்பட்டதன் விளைவாய், அதை இந்திய நாடு முழுவதும் பரப்பும் முகத்தான் மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதுவும் நாம் அறிந்ததே. சோழ நாட்டிற்கு வடக்கே அருவநாடு, அருவா வடதலை நாடு இருந்ததென அறிகிறோம். இப்பகுதியில் குறும்பர், ஒளியர், அருவாளர், எயினர் முதலிய பல இனமக்கள் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அவர்களில் சிறுபான்மை குறும்பர் தவிர்த்து மற்றப்பிரிவினர் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக இன்று இங்கு பள்ளி (படையாட்சி - வன்னியர்) பறையர் ஆகிய இரு வகுப்பினரும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராய் இருந்து வரக்காண்கிறோம். இவர்கள் பண்டைய ஒளியர், அருவாளர், எயினர் மரபினரா? இது ஆய்வுக்குரியது. அக்காலத்தில் ஆறுகளுக்குக் கரைகள் இல்லாததால், அவை கட்டுப்பாடின்றி காட்டாறுகளாய் எதேச்சையாய் ஒடிக்கொண்டிருந்தன. காட்டுவாணர் அவற்றின் நீரைப் பயன்படுத்திப் பயிர்த்தொழில் செய்யும் அறிவுத் திறன் பெற்றிருக்கவில்லை எனத் தெரிகிறது. ஆகத் தமிழர் இங்கு குடியேறின பிறகுதான் ஆறுகளுக்குக் கரைகள் கண்டு கால்வாய்கள் அமைத்து குளங்கள் வெட்டி அவற்றில் நீரைத்தேக்கி, காடுகளை அழித்து, நிலத்தை வெட்டிக் கொத்தி சமப்படுத்தி, அவைகளைச் சுற்றி வரப்புகள் அமைத்து வயல்களாக்கி, நீரின் உதவியால் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை உற்பத்தி செய்து ஊர், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இதன் காரணமாகவே மூவேந்தரின் தலைநகரங்கள் தழகத்தின் முக்கிய ஆறுகளின் கரைகளிலேயே அமைந்தன எனலாம். காவிரிப்பகுதியை வளப்படுத்திய பின் சோழமன்னன் கரிகாலனும் சோழ இளவரசன் இளந்திரையனும் தொண்டை நாட்டிலிலுள்ள பாலாற்றுப் பகுதியில், அங்கிருந்த குறும்பர், ஒளியர், அருவாளர், எயினர் முதலிய மரபினரை வென்று அடக்கி அப்பகுதியில் தமிழ் மரபினரைக் குடியேற்றி பயிர்த் தொழிலை அங்கு தோற்றுவித்து, நாட்டை வளப்படுத்தினர் என்பர். இதற்குச் சங்க இலக்கியங்களாகிய பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப் படை சான்றாக அமையும். நாட்டில் மழையின்றிப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வறுமையால் அல்லலுற மூவேந்தரும் தேவலோகம் சென்று, தேவேந்திரனிடம் மழை வரம் வேண்டியதாகத் திருவிளையாடல் புராணம் கூறும். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தேவலோகத்திலிருந்து தேவ கன்னியர் மக்களில் நான்கு குடும்பத்தாரைச் சென்னெல், கன்னெல், கதலி, பனை முதலிய வித்துக்களுடன் ரிஷபம், சாவி இவற்றுடன் அழைத்து வந்து, நாட்டில் கிணறுகள் தோண்டி வேளாண்மை கண்டு நாட்டை செழிக்கச் செய்து, மக்களின் பசிப்பிணியைப் போக்கியதாகக் கரிவலம் வந்த நல்லூர் (ARE 432 / 1914) சீவிலிபுத்தூர் (ARE 588 / 1926) கல்வெட்டுகள் கூறுகின்றன.
சூரவாதித்தசோழன் வெற்றிலையை மலேயாவிலிருந்து கொண்டு வந்து சோழநாட்டில் பயிரிட்டதாகச் செவ்வந்திப் புராணமும், உறையூர்ப் புராணமும் கூறுகின்றன. புராண மரபுச் சோழன் காந்தமன் குடகு மலையைப் பிளந்து காவிரியைச் சோழ நாட்டில் ஓடச்செய்ததாக பழஞ் செய்தி மூலம் அறிகிறோம். சோழன் கரிகாலன், காவிரி ஆற்றுக்குக் கரை கட்டினான் என்பது 'பொன்னிக்குக் கரை கண்ட பூபதியே, என மூவருலாவில் ஒட்டக்கூத்தர் கூறுவதன் மூலம் அறிகிறோம். மூவேந்தரும் ஒரே தாயின் சேய்கள் எனவும், ஒரு காலத்தில் மூவரும் கொற்கையில் தங்கியிருந்ததாகவும், அவருள் மூத்தவனாகிய பாண்டியன் அங்கேயே தங்கிவிடச் சேரனும், சோழனும் பாண்டியனைவிட்டுப் பிரிந்து வடக்கு நோக்கி வந்து சேரன் வஞ்சியிலும், சோழன் உறையூரிலும் தலைநகரை அமைத்து அப்பகுதிகளை ஆண்டு வந்தனர் எனவும் செவிவழிச் செய்தியாக அறிகிறோம்.
மூவேந்தரின் தொன்மை பற்றிய
“வழங்குவதுள் வீழ்த்த கண்ணும் பழங்குடி
பண்பின்தலைப் பிரிதல் இன்று “ (குறள் 955).
என்ற செய்யுளுக்கு உரைகண்ட பரிமேலழகர் ‘பழங்குடி’ என்ற சொல்லுக்கு “சேர, சோழ, பாண்டியர் என்றார்ப் போலப் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வரும் குடி” என்று பொருள் கூறுவார். இளங்கோ அடிகள் “பதிஎழில் அறியாப் பழங்குடி கெழி இய” (சிலம்பு மங் 15) என்பார். இரண்ய முட்டத்துய பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் இவரைப் “பதியெழில் அறியாப் பழங்குடி கெழி இ” என்று கூறுகின்றார். (மலைபடு 479). ஐயாரிதனார் இவரைக் “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி” (பு. பொ. வெ. 35) என்பார். இந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பாண்டிய நாடே பழமையான தென வரலாறு கூறும். மாணிக்கவாசகர் “பாண்டியநாடே பழம்பதி” என்று கூறுவதுவும், இதனாலே யாம். எனவே மூவேந்தருள் பாண்டியரே மிகவும் பழமையானவர் என்றும், சேரனும், சோழனும் அரசுகளைத் தோற்றுவிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே பாண்டியன் அரசைத் தோற்றுவித்தான் என்றும் கருதவேண்டியுள்ளது. இதன் காரணமாகவே ஏற்கனவே கூறியதுபோல் பாண்டியன் நாட்டில் தமிழைப் பரப்ப தமிழ்ச்சங்களை நிறுவ வேண்டியதாயிற்று எனலாம். பாண்டியன் என்ற சொல் பண்டு, பாண்டு என்ற சொற்களிலிருந்து பிறந்ததாகத் தெரிகிறது. பழமை, பழமையோன், பழமையானவன், பண்டையோன் என்ற சொற்களையும் உற்று நோக்குக. தமிழ் மூவேந்தரும் ஒரே குடியைச் சேர்ந்தவர் என்பதுவும், அக்குடி பெருங்குடி என்பதுவும். "பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிகுடி. இளங்கோ அடிகள் கூற்றால் நன்கு புலனாகும் (சிலம்பு 1 – 31 ).
மூவேந்தருக்கும் தனித்தனி நாடுகள் இருந்தது போன்று. தனித்தனிப் படை, கொடி, குடை, குடி, முரசு, களிறு, தேர், தார், முடி இவை ஒன்பதும் உண்டு என்பது.
"படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்பன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய" (தொ.பொ. 616)
என்ற மேற்கோளால் விளங்கும்.
(தொடரும்)
No comments:
Post a Comment