Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-41

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

காலாடி:
காலாடி என்பது தேவேந்திர குலத்தாருள் ஒரு பிரிவாகவும், அப்பிரிவினரது குலப்பட்டமாகவும் இருந்து வருகின்றது. இப்பிரிவினர் தஞ்சை மாவட்டத்தின் மேல்பகுதியிலும் திருச்சி மாவட்டம் லால்குடி சுற்றுப்புறங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்பகுதியிலும், மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றனர். அகராதியில் ‘காலாடி’ என்பதற் ‘சுருக்கன்’ தொழிலற்றுத் திரிபவன், பள்ளர் தலைவன், முயற்சியுடையோன் என்று பொருள் கண்டுள்ளது. இச்சொல்லுக்கு நீர்ப்பாய்ச்சும் கிராம ஊழியக்காரன் என்றும் பொருள் கொள்வர். ‘சேந்தன்’ பிங்கலந்தை சூடாமணி நிகண்டுகளில் காலாடி என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால் ஆற்றுக் காலட்டியர் என்று சொல் பேசப்படுகின்றது. இச்சொல்லுக்கு மருதநிலப்பெண், உழத்தியர் என்று பொருள் தந்துள்ளனர். ஆற்றுக்காலாட்டி என்பதற்கு ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய்களில்வரும் தண்ணிரைக் காலால் தட்டி மீன்பிடித்து விளையாடி மகிழும் மருதநிலச் சிறுமிகள் என்று சிலர் பொருள் கொள்வர். மீன்பித்தும் ஆறுகளில் நீந்தி விளையாடியும் மகிழ்பவர் என்பது சிறுமிகளுக்கே பொருந்தும் எனலாம். இப்பொருள் மற்றப் பெண்களுக்குப் பொருந்தாது. இச்சொல் பள்ளு நூல்களில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாப்பெருங்காலக் காரிகையிலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது. இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் காலாடி என்ற சொல் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. காலாடி என்பதிற்கு காலாட்படையைச் சேர்ந்தவன் என்றும், வேவு தொழில் புரிபவன் என்றும் பொருள் கொள்ளலாம். அகராதிகளில் கண்டுள்ள மற்ற பொருள்கள் எல்லாம் இம்மரபினர்க்குப் பொருந்தாது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புதுக்கோட்டைப் பகுதியில் திருட்டுத் தொழிலைக் குலத்தொழிலாகக் கொண்ட கள்ளர், மறவர், வலையர் இவர்களுள் மாடு திருடுவதில் ஈடுபட்டுவந்தவருக்குத் துணையாக காலாடிப்பிரிவில் ஒரு சிலர் சென்று வந்ததால் இந்தப்பிரிவினர் அனைவரையும் கள்ளர், மறவர் முதலிய பல்வேறு வகுப்பினருடன் சேர்த்து குற்றப் பரம்பரையினர் என அரசு அறிவித்தது. நாடு விடுதலை பெற்றபின் குற்றபரம்பரைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தேவேந்திர குலத்தார் சமூகப் பஞ்சாயத்துக்களுக்குச் சில இடங்களில் ஊர்க் குடும்பன், மூப்பன் இவர்களுக்குத் துணையாக காலாடி என்ற உதவியாளரும் இருந்து வருகின்றனர். இவரை ஒடும்பிள்ளை என்றும் கூறுவர். ஊர்க்கூட்டம் கூட்ட இவர் மக்களைக் கூட்டுவதால் ஒடும்பிள்ளை அல்லது காலாடி என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கொள்ளலாம். ஏன் வசதி படைத்த சுகவாழ்வு உடையவர் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் படையிலும், நெற்காட்டான் செவல் புலித்தேவன் படையிலும் காலாடிப் பட்டமுள்ள படைத்தலைவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாய்க்காரன்:
தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம், நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி தாலுக்காக்களில் உள்ள தேவேந்திர குலத்தார் வாய்க்காரன் என்ற குலப்பட்டம் கொண்டுள்ளனர். இவரது கிரையம், ஒத்திப் பத்திரங்களில் தேவேந்திர வாய்க்காரன் என்று குறப்பிடுகின்றனர். வாய்க்காரன் என்பதற்க்கு சென்னை பல்கலைக்கலக அகராதியில் பேச்சாளன், பிறரைத்திட்டும் சுபாவமுள்ளவன் பள்ளருள் ஒரு பிரிவினர் எனப்பொருள் கண்டுள்ளது. இவைகள் இம்மரபினருக்கு முற்றிலும் பொருந்தாது. இச்சொல் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டு களில் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. வாய்க்காரன் என்பது வயற்காரன், வயலையுடையவன் என்பவற்றிலிருந்து திரிந்திருக்க வேண்டும். விசயநகர, நாயக்கர் ஆட்சி ஏற்படுமுன், வயல்கள் பெரும்பாலும் இம்மரபினர்க்கே சொந்தமாய் இருந்து வந்தது. அந்நியர் ஆட்சியில் இவரது நில புலங்கள் பறிக்கப்பபட்டு, அரசுடைமை ஆக்கப்பட்டு, அவை நாயக்க மன்னரின் கீழ் அரசு பணியில் ஈடுபட்டுவந்த தெலுங்கர் மற்றும் சில முக்கிய தலைவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர்த்தொழிலை, இம்மரபினரே தொடர்ந்து செய்துவந்ததால் வயல்கள் இவரது கைவசமே இருந்து வந்தது எனலாம். ஆரம்பத்தில் இவரை வயற்காரன் என்று கூறும் பழக்கம் ஏற்பட்டுப்பின்னர், அது வாய்க்காரன் என்று திரிந்திருக்க வேண்டும். அரிசன் என்ற பெயர் புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்டது போன்று, இப்பெயர் அரசியல் நோக்கத்தோடு மிகவும் பிற்காலத்தே தோற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும்.

பட்டக்காரர்:
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவேந்திரகுலத்தார் ஊர்த்தலைவர்களைப் பட்டக்காரர் என அழைப்பர். இச்சமூகத்தினரிடையே ஏற்படும் பிணக்குகளை, இவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பேசித் தீர்த்துவைப்பர். இவரது தீர்ப்புக்கு இருதரப்பாரும் கட்டுப்படுவர். கொங்கு நாட்டிலுள்ள கவுண்டர் (கொங்கு வேளாளர்) சமூகத் தலைவர்களுக்கும் பட்டக்காரர் என்ற பட்டம் வழக்கில் உள்ளது. கவுண்டர் இடைக்காலத்தில் இங்கு குடியேறியவர் தேவேந்திற்குலத்தார் பழக்கங்கள் சிலவற்றை கவுண்டர் பின்பற்றி பட்டக்கார் என்ற பட்டத்தைத் தழுவியள்ளுர்.
பண்ணாடி:
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தேவேந்திர குலத்தாருள் ஒரு சாராரும், சேலம் மாவட்டத்தில் கொங்கு 24 நாடுகளில் சேலம் வடகரை நாட்டில் உள்ள தேவேந்திர குலத்தாரும் பண்ணாடி என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். இவரது குடியிருப்பு பண்ணாடி தெரு என்றே வழங்கி வருகின்றது. பண்ணாடி என்பதைப் பண்ணை + ஆடி எனப்பிரிக்கலாம். பண்ணை என்பது மருதநிலம், நீர் நிலை, வயல் எனச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது. பண்ணையார், பெருநிலக்கிழார், பண்ணையாள், வாரக்குடிவைத்துப் பயிர்செய்யும் நிலக்கிழார் என்ற அர்த்தத்தில் பண்ணாடி என்ற குலப்பட்டம் வழக்கில் வந்தது எனலாம். இங்கு வாழ் பிறவகுப்பு நிலக்கிழார்களையும், பண்ணாடி என்று அழைத்து வருவதாகவும் தெரிகிறது. பண்டைய நாளில் தேவேந்திர குலத்தார் பெரிய பண்ணைகள் வைத்து வேளாண்மை கண்டவர் என்பதால், செங்கோட்டைப்பகுதி வாழ் மக்கள் பாண்டியன் என்ற குலப்பட்டத்தைத் தரித்து வருவது போன்று, கொங்கு நாட்டில் உள்ள இம்மரபினர் பண்ணாடி என்ற பட்டத்தைத் தரித்து வருகின்றனர் எனலாம். இம்மரபினர் பற்றித் தோன்றிய செங்கோட்டுப் பள்ளில் இவரது பண்டையச் செல்வச் செழிப்பும் உட்கொள்ளும் ஆகாரம், அணியும் ஆபரணம், உடுக்கும் உடை இவற்றைப் பற்றிச் சிறப்பாய்ப் பேசப்பட்டுள்ளது. (செங்கோட்டுப் பள்ளு செ. 208 - 7 - 8; 283 – 6 - 15; 615 & 616 – 15).
பலகன் :

கொங்கு 24 நாடுகளில் சேலம் மாவட்டத்தில் பூவை, பருத்திப்பள்ளி, ஓமூர், சேலம் நாடுகளில் உள்ள தேவேந்திர குலத்தார். பலகன் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். பலகன் என்பது பலவான் என்பதிலிருந்து திரிந்ததா? என்பது ஆய்வுக்குரியது. பொதுவாகக் கொங்கு நாட்டிலுள்ள இம்மரபினர் வீரமிக்கவர் ஆவர். செங்கோட்டுப்பள்ளு புலியதனைப் பிடித்திழுக்க வல்லோய் (செய் - 768) என்று கூறுவது காண்க. அப்பள்ளு உரையாசிரியர் கூறுவார்: “கொங்குநாட்டு உழவர்கள் புலிகளைப் பிடித்திழுத்தல் அருமையன்று. கல்லும், காடும் வளமும் நிறைந்த அந்த நாட்டில் பன்னூறு ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உழைத்து உரமேறி அவர்கள் துட்ட விலங்குகளை எதிர்த்தெதிர்த்துப் போரிட்டு அதில் கைதேர்ந்தவர்கள். அம்மண்ணில் உழவர் குடி பெண்களும் கூட அப்படியே!”
(செங்கோட்டுப்பள்ளு, செய் - 768 விளக்கக் குறிப்பு) கொங்குநாட்டுப்
பெண்கள் முறத்தால் புலிகளை அடித்துக் கொல்லக் கூடிய வீரம் உள்ளவர் என்று பழம் செய்தி ஒன்று கூறும். பொதுவாய் தேவேந்திர குலத்தார் வீரத்திற்குப்பேர் பெற்றவர் என்பதை ஒருவரும் மறுக்க இயலாது. முக்கூடற்பள்ளில் மதயானை முதற் பிடிக்க வல்லோய் முன் மலைகளையும் முறித்தாய் என வருவது காண்க. (முக்கூடற்பள்ளு செய். – 118)

மண்ணாடி:
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குப் பகுதியிலுள்ள தேவேந்திர குலத்தார் மண்ணாடி என்ற குலப்பட்டம் தரித்து வந்ததாக தாஸ்டன் கூறுவார். மலையடிவாரத்தில் இருப்பதால் இவர் இப்பட்டத்தைக் கொண்டிருப்பதாகச் சிலர் கூறுவர். H.A. ஸ்டூவர்ட் பல்லவர் மன்றாடி என்ற விருதுப்பட்டம் உடையவர் என்றும், தேவேந்திர குலத்தார் பல்லவராய் இருக்கலாம் என்றும், மண்ணாடி என்பது மன்றாடியின் திரிபு என்றும் கூறுவார்.
H.A. Stuart says: The common title of Pallan is Muppan and Kudumban. But some style themselves as Mannadi, Kudumban is próbably a form of Kurumbar and Mannadi is a corruption of Manradi a title borne by the Pallavas (Kurumba People).
H.A ஸ்டூவர்ட் கூறுவது சரியன்று சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் மண்ணாடி என்பது மன்றாடியின் மருஉ என்றும், மண்ணாடி மலை நாட்டின் கிராமத் தலைவர் என்றும், பழனி மலைப்பகுதி வாழ் ஒரு மலைச் சாதி என்றும் பொருள் கண்டுள்ளது. விருபாஷிபுரம், அரியக்குடி பாளையப்பட்டுகள் புலையர்களைப் பழனி மலையிலிருந்து துரத்திவிட்டு, அப்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் பகுதிகளிலிருந்து பல குடும்பங்களை வரவழைத்துக் குடி அமர்த்தினர் என W. பிரான்சிஸ் கூறுவார். (W. Francis: Madurai District Gazattee) இவ்வாறு குடியேறியவர்தான் இன்று மன்னாடி என்ற பட்டம் தரித்துத் தம்மைக் குன்னவர் அல்லது குன்றவர் என்று கூறிவருகின்றனர். (J.H. Nelson. The Madurai Country. Page 100). கேரளாவில் பாலக்காட்டுப் பகுதியில் மண்ணாடியார் என்ற வகுப்பு இருப்பதாகவும், அவர் உழவர் குடி என்றும், அவர் முன்னோர். கொங்கு நாட்டின் காங்கேயம் பகுதியிலிருந்து குடியேறியவர் என்றும், பாலக்காட்டு மண்ணாடியார் என்பவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாழும் மன்றாடியார் என்பவரும் ஒரே மரபினர் என்றும், அவர் (பாலக்காட்டு மண்ணாடியார்) கொங்குவேளாளர் என்றும் புலவர் இராசு வாதிக்கின்றார். ஆனால் அன்னார் ஆராய்ச்சியில், பாலக்காட்டுப் பகுதிவாழ் மண்ணாடியாரின் முன்னோர் சோழநாட்டு உழவர்குடி என்றும், அவர் வேளாளரில் சத்திரியர் என்றும் இம்மரபைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியார் ஒருவர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். (புலவர். இராசு. எம். ஏ. செந்தமிழ்வேள் எம்.ஜி. ஆர். பக். 46).

மண்ணாடியார் சோழநாட்டு உழவர் குடி, வேளாளருள் சத்திரியர் என்பது தேவேந்திர குலத்தாரையே குறிக்கும். இந்தப் பாலக்காட்டு மண்ணாடியாருக்கு, கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் ஆலயத்தின் மேற்கு வாசல் மூலம் நுழையும் உரிமை இருந்து வருவதுவும், பழனிமலை அடிவாரத்தில் ஒரு மண்டபம் இவருடையதாயிருந்து வருவதும் இவர் தேவேந்திர குலத்தாரைச் சேர்ந்தவர் எனக் கருத ஏதுவாகிறது. (இந்து ஆலயங்களின், மேல்வாசல் அரச மரபினர்க்கு ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). பேரூரில் தேவேந்திர குலத்தாருக்கு என ஒரு தனி மண்டபம் இருந்துவருவதுவும், ஆலயத்தின் முக்கிய திருவிழாக்களில் தேவேந்திர குலத்தார் பங்கேற்பதுவும் நினைவுகூரத்தக்கது. மண்ணாடி, என்பது பண்ணாடியின் திரிபு எனக் கொள்ளத்தக்கது. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் மண்ணாடி என்பது மன்றாடியின் திரிபு என்று கண்டுள்ளது சரியன்று. மன்றாடி என்பது இடையரைக் குறிக்கும் என்பது சோழர்காலக் கல்வெட்டுகளால் அரியத்தக்கது. மன்றாடியார் பற்றி K.A. நீலகண்ட சாஸ்திரி கூறுவதைக்காண்போம். விவசாயத்தை அடுத்து கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைப் பராமரிப்பு போன்ற தொழில்கள் மன்றாடியார் என்னும் வகுப்பினரால் போற்றப்பட்டன. இதைப்பற்றி கோயில் கல்வெட்டுக்களிலிருந்து நாம் சில செய்திகளை அறிகிறோம். மன்றாடியார் இத்துறையில் நல்ல அனுபவமிக்கவர்களாய் இருந்தனர். கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஆடு, மாடுகள் எல்லாம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை வைத்துக் கொண்டு கோயிலுக்குப் பால், தயிர், நெய் இவற்றை எல்லாம் அவர்கள் கொடுத்து வந்தனர். (K.A. நீலகண்ட சாஸ்திரி சோழர்கள், பாகம் - 2. முதற்பதிப்பு 1987, பக். 764 - 65)

குறிப்பு :
காலஞ்சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் 1977 - ல் தமிழக முதல்வர் ஆகும் முன் மாற்றுக்கட்சியினர் அவரை மலையாளி எனச்சாடியபோது அதை மறுக்கும் முகத்தான் தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த சுத்தத் தமிழன் என்றும், தம்முன்னோர் கோயம்புத்தூர் பகுதி வாழ் மண்ணாடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் முன்னாளில் பிழைப்புக்காகக் கேரளாவில் உள்ள பாலக்காட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும், எனவேதான் கோயம்புத்துர் பகுதி வாழ் மண்ணாடியார் வகுப்பைச்சேர்ந்தவன் என்றும் கூறியவர், மண்ணாடியார் என்பவர் தேவேந்திர குலத்தாருள் ஒரு உட்பிரிவு என்று 1977 - ல் வெளியிடப்பட்ட இவ்வாசிரியரின் மூவேந்தர் யார்? நூல் கூறவும், அரசியல் காரணமாய்த் தன்னை மன்றாடியார் என மாற்றிக் கூற முற்பட்டார். இக்கூற்றைப் பரவலாக்க அ.தி.மு.க. ஏடாகிய அண்ணாவில் எம். ஜி. ஆர். தனது வரலாற்றைத் தொடர்கட்டுரையாக எழுதச்செய்தார். கொங்கு கவுண்டர் தலைவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வகுப்பாருக்கு அரசியல் லாபம் தேடும் முகத்தான், தங்கள் மரபைச் சேர்ந்த புலவர் இராசுவைக்கொண்டு செந்தமிழ்வேள் எம். ஜி. ஆர் என்ற நூலை எழுதிப் பெரும்புலவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் ஆடம்பரமாய் வெளியிட ஏற்பாடு செய்தனர். 1977 தமிழகச்சட்டசபைத் தேர்தலுக்கு முன் எம். ஜி. ஆர். தேவேந்திரகுலத்தார் தான் மூவேந்தர் மரபினர் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு இவ்வாசிரியருடன் தஞ்சையிலுள்ள ஒரு முக்கிய பிரமுகர் மூலம் தெரடர்பு கொண்டார் ஏன்பது அறியத்தத்தது. (இரா. தேவ ஆசீர்வாதம், பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர். மூவேந்தர் யார்? முற்பகுதி. பின் இணைப்பு 3 - பக்145 – 152 -54)
(முற்றும்).

2 comments:

  1. புருடாய் விட்டே பொழப்ப நடத்துறீங்களே வெக்கமா இல்லியா.

    சித்திரமேழி நாட்டார் என்ற சொல்லே எங்களுடைய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லிய பிறகுதான் உங்களுக்கே தெரியும்.

    அதையும் திருடி இந்த வருடம் விழா எடுக்குறீங்களே அசிங்கமா இல்லையா பள்ளூஸ்

    ReplyDelete
  2. டேய் பள்ளு திருட்டு நாய சாக்கடை செத்துதொலைடா தூக்குமாட்டிட்டு சாவுடா

    ReplyDelete