மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
M. சீனிவாச அய்யங்கார். இத்தகைய சச்சரவுகள் பற்றிக் கூறுவதாவது :
“பிற்காலத்தில் வலங்கை இடங்கைப் பிரிவினர் 12 கால்பந்தல், 5 முரசு, குரங்குக் கொடி, குதிரை மேல் சவாரி இந்த உரிமைகள் தங்களுக்கு உரியதெனப் பாராட்டியும், இடங்கைப் பிரிவினர் அவற்றைத் தமக்கு உரியதெனக்கூற முற்படும்போது இருவரிடையேயும் சச்சரவு நிகழ்வது வழக்கமாய் இருந்து வந்துள்ளது.”
M. Srinivasa Ayyangar ways
"The members of the two divisions struggle for certain honorary distinctions such as the use of the twelve
pillars in the marriage Pandal, the beating of five big drums oncertain ceremonious occassions, the ride on horse back or the carrying of a monkey flag. These privileges are claimed by the right hand castes on all public and festive occassions and whenever these privileges are exercised by a member of the left hand faction fight usually occurs'. (M. Srinivasa Ayyangar. Tamil studies Page 96.)
பள்ளர் இடங்கை, தாம் வலங்கைப் பிரிவினர் எனவும், அதனால் பள்ளரைவிடத் தாம் உயர்ந்த சாதியினர் எனவும் பறையர் பெருமை பாராட்டிவருவது குறிப்பிடத் தக்கது. சில வகுப்பினர், இடைக்காலத்தில் மன்னரிடம் சில உரிமைகள் கோரி அவற்றைப் பெற்றனர் என வரலாறு கூறும். இடையர் வீட்டின் இருபுறமும் வாயில் அமைக்கவும், வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசவும், நன்மைக்குச் சிவிகை ஏறவும், மேல் வளையிட்டுக் பாடை கட்டவும் அவற்றின் மேல் பச்சைப் பட்டு, புலியூர் பட்டு கட்டவும், பேரிகை கொட்டவும் உரிமை பெற்றதாக மதுரை மேலுர் கூற்றத்து கீரனூரில் கிடைத்துள்ள கல்வெட்டு கூறுகிறது (நாகசாமி, யாவரும் கேளிர் பக். 252). கம்மாளர்க்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இரட்டைச் சங்கு ஊதவும், நன்மை துன்மைக்குப் பேரிகை கொட்டவும், செருப்பு அணிந்து செல்லவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் உரிமை வழங்கியதாகத் தெரிகிறது (ARE 562 / 1898). (திருப்பேருர் புராண வசன சுருக்கம் பக். 66 - ல் கண்டபடி) கரிவலம்வந்த நல்லூர் கல்வெட்டின்படி (ARE 432 / 1914) பறையருக்கு நன்மைக்கு மூன்று கால் பந்தல், இருசிலம்பு (சீவலிபுத்தூர் கல்வெட்டுப்படி ஒரு சிலம்பு) ஒரு கொடுக்கு ஒத்த மாராப்பு, ஒரு பந்தம், கீழ்ப் பாவாடை, மஞ்சியில் தண்டியக் கொம்பில்லாத வீடு துன்மைக்குக் கட்டணமும் வழங்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளை யானை :
மன்னர்க்கு அக்காலத்தில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இருந்தன என்பது
“தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப”
(தொல் 5 பொருள் இயல் செ. 17)
என்ற மேற்கோளால் விளங்கும். இந்தப் படைகளை நடத்திச் சென்றவர் மன்னரின் பின்னோராகிய மள்ளர் - பள்ளர் குடியினரேயாம். எனவே மன்னர்க்குக் கூறப்பட்ட உரிமைகள் அவரது மரபினர்க்கும் உரித்தாயிற்று. வெள்ளையானை தேவேந்தினுடைய வாகனம் ஆகும். அதை ஐராவதம் என்றும் கூறுவர். நாட்டை ஆளும் மன்னனையும், அவன் அரண்மனையையும் மையமாகக் கொண்டே தெய்வமும், அதன் இருப்பிடமாகிய ஆலயமும் தோன்றியதென்பர். நாடாளும் மன்னனையும், தெய்வத்தையும் இறைவன் என வழங்குவது கவனத்திற்குரியது. “கோ” எனில் ஆரசன் “இல்” என்பது இருப்பிடம் ஆகக் கோயில் என்பது அரசனது இருப்பிடமாகிய அரண்மனையை முதலில் குறித்து பின்னர், அது தெய்வத்தின் உறைவிடமாகிய ஆலயத்தையும் குறிப்பதாயிற்று. மன்னன் தெய்வத்தின் பிரதிநிதி என்பது “திருவிடை மன்னனைக்கானில் திருமாலைக் கண்டேனே" (திருவாய்மொழி 4 - 48) என்பதிலிருந்து அறியற்பாலது. இங்கு "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" (குறள் 388) என்று வள்ளுவர் கூறுவதும் சிந்திக்கத்தக்கது. இதன் காரணமாகவே, மருதநில வேந்தனைப் பின்னாளில் இந்திரன், தேவேந்தின், புரந்தன், தேவர்வேந்தன் எனத் தெய்வீகப்படுத்தினர். வெள்ளையானை தேவேந்திரனுக்கு ஏற்பட்ட வாகனம் எனப் புராணங்கள் கூறும். மன்னர் தெய்வீகப்படுத்தப் பட்டதால், தேவேந்திரனுக்கு வாகனமாக ஏற்பட்ட வெள்ளை யானை அவருக்கும் (மன்னருக்கும்) உரித்தாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர். ஆக, மன்னருக்கு வெள்ளையானை உண்டு என்கும் போது, அது அவரது மரபினர்க்கும் உரித்தாயிற்று என்பது சொல்லாமலே விளங்கும்.
இம்மரபினரைத் தேவகன்னியின் மக்கள் எனவும், இவரைத் தேவலோகத்திலுள்ள தேவேந்திரனிடமிருந்து பாண்டியன் உக்கிரப் பெருவழுத்தி அழைத்துவந்தான் என்றும், கரிவலம் வந்த நல்லூர் (ARE 432 / 1914), சீவிலிபுத்தூர் கல்வெட்டுகள் (ARE 588 / 1926) கூறுவது ஈண்டு நினைவு கூறத்தக்கது. இவ்வாறு இந்தக் கல்வெட்டுகள் கூறுவது, இந்த மக்கள் அரச மரபினர் என்பதை உணர்த்தவே ஆம். இதைக் கருத்திற்கொண்டே, மேலேகண்ட இரு கல்வெட்டுகளிலும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இம்மக்களுக்கு வெள்ளை யானையையும் விருதாக வழங்கியதாகத் தெரிகிறது. சைவ சமயப்பெரியாருள் ஒருவராகிய “திருநாவுகரசர் வெள்ளானை வேண்டும் வரங்கொடுப்பாய் வெண்காடு மேவிய வேந்தனாரே” என இறைவனை வேண்டுவதைத் திருமறையில் காணத்தக்கது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில், புதுக்கோட்டை வட்டாரத்தில் பறையர் இம்மரபினர் உரிமைகள் தங்களுக்கு உண்டு என்று வாதாடிய போது, மற்றச் சிறப்புகளுடன் வெள்ளை யானையும் இம்மரபினர்க்கு (பள்ளர் - மள்ளர்) உண்டு எனத் தீர்ப்பாகியுள்ளது. காண்க. (IPS - 929) வெள்ளை யானை இம்மரபினர்க்கு ஏற்பட்டது என்பதை ஒட்டியே இம்மரபினர் இருக்கும் தென்மாவட்டங்களில் ஊர் தேர்த் திருவிழாக்களின் போது, இவரது தலைவர்களை அழைக்க கோயிலார் மேளதாளம், மாலை மரியாதை, வெண் வட்டக்குடை, பகற்பந்தம் இவற்றுடன் கோயில் யானையையும் அனுப்பி வைக்கும் பழக்கம் உள்ளது. இப்பழக்கம் அநேக இடங்களில் நின்று போனாலும், கோவை மாவட்டம், பேரூர் போன்ற ஒரு சில இடங்களிலுள்ள ஆலயங்களில் அது இன்னும் அமுலில் இருந்து வருவதாகத் தெரிகிறது. பாண்டிய நாட்டில் இம்மரபினர் திருமணவிழாவில் மாப்பிள்ளை அழைப்பின்போதும், பட்டினப்பிரவேசத்தின் போதும் மாப்பிள்ளையை “வெள்ளை யானை மீது ஏறிவரும் விருது பெற்ற பாண்டின்” என வாழ்த்துவது அறியத்தக்கது.
வெண் வட்டக் குடை :
வெண்வட்டக்குடை என்பது அரச சின்னங்களில் முக்கியமான ஒன்றாகும். வெண்வட்டக்குடை என்பதுவும், வெண்கொற்றக்குடை என்பதுவும் ஒன்றே. இது வெள்ளை யானைபோன்று தெய்வத்திற்கும், தெய்வத்தின் பிரதிநிதியாகிய மன்னர்க்கும், அவரது மரபினர்க்கும் உரியதாகும். சங்க இலக்கியங்களில் தமிழ் வேந்தர் வெண்கொற்றக் குடை உடையவர் என்று பேசப்படுவது
“கொற்ற நீள் குடைகொடித் தேர்ச்செழிப”
(புறம் 24 - 23).
“கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்”
(புறம் 367 / 14)
என்ற மேற்கோள்களால் அறியத்தக்கது. கோயில் உற்சவகாலத்தில் தெய்வத்தின் உருவச்சிலையை நகர் வீதிகளில் ஊர்வலமாய் எடுத்து வரும்போது, அதன் மீது வெண்வட்டக் குடை பிடித்து வருவதை அனைவரும் அறிவர். கோயில் விழா தேரோட்டம் மற்றும் நெல் அறுவடை உற்சவங்கள் நடைபெறுவதற்குக் கோயிலார் தேவேந்திர குலத்தார் தலைவர்களை அழைக்க, வெண்வட்டக்குடையையும் அனுப்புவது மரபாய் இருந்துவந்தது. ஆனால் இப்பழக்கம் காலப்போக்கில் சிறுகச்சிறுக அருகி வருகின்றது. எனினும் ஒரு சில இடங்களில் இவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே தெரிகிறது.
(தொடரும்)
https://www.facebook.com/thontamilarnagarigam/posts/1519469471530941?__xts__[0]=68.ARApxti5n8LtFLyNTcgZMG35Tn71qaHE1WjlETDzpVJbHmhgEX4-bbpRwwwgK3mOW3HYKZ32Flm7_T9Ka2NyQ2Yq5IoXTyt7G7yeiR18EUWPSulygbr6L1C2aXCH-FYPglhZe5Ni-s3jrRtmuHXlAiqB-WdrlTUsyNvk0TrXOJmz82Bsj5y997SlEsJA-qlz5-REE1sfhCcKsvV8q39JcoIADceY1og8euzuzLx8RecAEqcfk0R-It-Y7lQ1Bsji-oXIj1XPZQVXiva9Ft0t-tntashcWKqdBLNwhlvEl_Qw1j77LUNm56IOFxUxrFtncZa0j80ZOldYAmUJuIAQcbTQxg&__tn__=-R மல்லர் வேறு & மள்ளர் வேறு .
ReplyDelete