மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
M.A.செரிங் இவர் பற்றிக் கூறுவதாவது: முதலி என்ற பட்டம் தரித்து விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் வகுப்பார் ஆரியர், ஆரியரல்லாதார் இனக் கலப்பால் ஏற்பட்டவர் ஆவர். இவரது கறுப்பு நிறமும், உடற்கட்டும் பெரும்பாலும் இவரைத் திராவிடர்க்கு முற்பட்ட பழங்குடியினர் என்பதைக் காட்டுவதாயுள்ளது.
M.A. Sherring says: "Madali the agricultural tribe are partly of Aryan and Partly of non-Aryan origin. The darkness of the Complexion and Particularly the features of some of them point to the supposition that they are largely conected with the oboriginal tribes
[M.A. Sherring. The tribes and Castes of Madras Presidency page 112)
அடுத்து கொங்கு வேளாளர் பற்றிப்பார்ப்போம். எட்கர் தர்ஸ்டன் இவர் பற்றிக் கூறுவதாவது: கொங்கு வேளாளர் பெயர் அளவிலன்றி வேறு ஒருவிதத்திலும் மற்ற வேளாளர் பிரிவினருடன் ஒத்திருப்பதாகத் தெரியவில்லை. இவர் சமூகத்தில் கீழாக மதிக்கப்படுகின்றனர்.
Edgar Thurston says: 'Kongu Vellalas have little in Common with other Vellalas except the name and appear to have a lower Position in society'. [Edgar Thurston. Castes and tribes of south India, VorvII Page 417).
இன்றைய வேளாளர் பற்றி 1901 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கில் கண்டிருப்பதாவது: "வேளாளர் என வழங்குவோர் பயிர்த்தொழில் செய்யும் பல்வேறு வகுப்பார் மட்டுமின்றிக் குல உயர்வுக்காக செம்படவர் முதல் வளையற்காரர் ஈறாகப் பல்வேறு பிரிவினர் உள்ளடக்கிய தாகும்.
'Vellala caste includes a wide Varlety of agricultural Communities plus many aspirants from fishermen to banglemen who had adopted the same name [Census of India 1901. Madras Presidency. Vol. I. Page 184].
இன்று வேளாளர், வெள்ளாளர் என்று கூறிவரும் பிள்ளைமார் தோற்றம் பற்றி இளங்காப்பியன் கூறுவதாவது : 'சங்ககாலத்தில் பெண்ணுக்கு ஒத்த வயதுடைய தோழியாக நியமிக்கப்பட்டு, பெண் திருமணமாகும்போது தோழியும் சீதனமாகக் கொடுக்கப்படுவாள். மனைவி கர்ப்ப முற்றிருக்கும் போது பணிப்பெண் மனைவியின் இடத்தைப் பெற்று குழந்தைகளுக்குத் தாயாவாள். இவ்வாறு தோழிகள் மூலம் பிறந்தவருக்குச் சொத்தில் பங்கு இல்லை. ஆனால் வேறு எல்லாவகைச் சலுகைகளும் இருந்தது. இந்தத் தோழியின் வழித் தோன்றல்கள்தான் இன்றையப் பிள்ளைமார் என்ற பிரிவினர் என்பது மறைமலையடிகள் கருத்து (இளங்காப்பியன் வரலாற்றுப் பாலம் பக்.81).
பண்டைக்காலத்தில் தோழிகள் தங்கள் தலைவியரின் கணவருடன் கூடிக்குழந்தைகள் பெற்றனர் என்பதற்கு விவிலியம் பழைய ஆகமம் (Bible. Old Testemen) ஆதியாகமம் அதிகாரம் 16 - ல் சான்று உள்ளது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஆக இதுவரை நாம் பார்த்ததிலிருந்து இன்று வேளாளர், வெள்ளாளர் என்று கூறி வருபவர் உண்மையில் வேளாளரோ, வெள்ளாளரோ அல்ல என்றும், அவர்கள் பல்வேறு பிரிவுகளிலிருந்து போலிக்குல உயர்வுக்காக அப்பெயர்களைப் பூண்டு வருகின்றனர் என்றும், பெரும்பாலும் அவர் கலப்பினம் என்றும் அறிகிறோம். ஆனால் M.சீனிவாச அய்யங்கார் வேளிர் அல்லது வெள்ளாளரே திராவிடர், என்றும், வேளாளர் தவிர்த்த மற்ற மரபினர் பழைய நாக மரபு வழி வந்தவர் என்றும் கூறுவார்.
M. Srinivasa Ayyangar says : "The numerous Tamil castes with the exception of a handful of Vellalas have grown out of of territorial tribes of Nagas. The Velir or Vellalas were alone Dravidians”. [M. Srinivasa Ayyangar. Tamil Studies. Page381].
இவர் (M. சீனிவாச அய்யங்கார்) இன்றைய வேளாளர். வெள்ளாளரை எல்லாம் திராவிடர் என்று கருதுவதை ஏற்பதற்கில்லை. மூவேந்தர் மரபு பற்றிக்கூறும்போது அவர் மூவேந்தர் வழித் தோன்றல்கள், அனேகமாய்க் கலப்பற்ற வேளாளருடன் கலந்தனர் என்று கொள்கிறார். கலப்பற்ற என்ற சொல்லுக்கு அவர் கூறும் விளக்கமாவது: ஏன் கலப்பற்ற வெள்ளாளருடன் தமிழ் வேந்தர் வழித்தோன்றல்கள் கலந்தனர் என்று கூறுகிறேன் எனில், நாளடைவில் பல்வேறு பிரிவினரும் வேளாளர் என வழங்க முற்பட்டிருக்கின்றனர். இதற்கு வேட்டுவரில் கரியனான மருதங்க வேளான் சான்றாக அமையும். (SII Vol. III, Part I & II, No. 24. Page 45) பெரும்பாலான கொங்கு வேளாளர் ஏற்கனவே வேட்டுவ வகுப்பைச் சேர்ந்தவர் ஆவர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நியதிக்கு மாறாகபெரும்பாலோர் தம்மை வேளாளர் என வழங்கிவருவதை மேலே கண்ட கல்வெட்டைக் கொண்டு பார்த்தால் இவர் உண்மையில் கலப்பற்ற திராவிடர், வெள்ளாள மரபினராக இருக்கமுடியுமா? என்ற ஜயப்பாடு எழும்.
M. Srinivasa Ayyangar says: No traces of the Tamil Kings are to be found in the country and it is highly probable that they should have merged with the pure Vellala Caste. We say pure because the Vellala Caste has been receiving additions from time to time from other tribes as the following extracts will show. (வேட்டுவரில் கரியனான மருதங்க வேளான் SII Vol. III, Part I & II, No. 24. Page 45) Most of the Kongu Vellalas were formerly Vettuvas. The Preceding statement will show that coimbatore district contains a large number of Vellalas a fact which casts a serous doubt on their Dravidian Origin. [M.Srinivasa Ayyangar. Tamil Studies, page 62].
(குறிப்பு கொங்கு நாட்டில் இடையர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது).
M. சீனிவாச அய்யங்கார் சிறுபான்மையினரான வெள்ளாளர் தான் திராவிடர் என்றும், பெரும்பான்மையான வெள்ளாளர் இடைக்காலத்தில் திராவிடருக்கு முற்பட்டபழங்குடியிலிருந்து வந்தவர் என்றும் கூறுபவர் கலப்பற்ற வேளாளராகிய திராவிடர் இன்றைய வேளாளருள் எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்பதை அடையாளம் காட்டவில்லை. இவர் வேளாளர், திராவிடச் சத்திரியர் இருவரும் திணைநிலை மக்களில் இடம்பெறவில்லை என்று கூறுவதாக ஏற்கனவே கண்டோம். ஆனால் இவரது இந்தக்கூற்று ஏற்புடைத்தக்கதன்று. ஏனெனில் பண்டைய நாளில் வேளாளர், வெள்ளாளர் என்ற பெயருடைய ஒரு வகுப்பு தமிழகத்தில் இருந்ததில்லை. பின்னாளில் மருதநில உழவர் குடியினர் கொடைப் பண்பைச் சிறப்பிக்க அப்பெயர்கள் ஏற்பட்டன. இக்கால வேளாளர், வெள்ளாளர் மிகவும் பிற்காலத்தில் பல்வேறு பிரிவு களிலிருந்து தோன்றிய கலப்பினம் ஆவர். (Accretion from Various Castes, இரா.தேவ ஆசீர்வாதம் வேளாளர் யார்? 1981) சாமி சிதம்பரனார் மருதநிலத்தில் தான் அரசர்கள் தோன்றினர் என்று கூறுவதுவும் ஈண்டு நினைவிருக்கத்தக்கது V. கனகசபைபிள்ளை, மறைமலை யடிகள், ந.சி. கந்தையாபிள்ளை, பர்னட் முதலானோர் வேளாளர், வெள்ளாளர் என்று குறிப்பிடுவர் மருதநில உழவர் குடிக்கே பொருந்துமே ஒழிய, உழவுத் தொழில் தவிர்த்து வேறுபல தொழில்கள் செய்து பிழைப்பு நடத்திவரும் இன்றைய வேளாளர், வெள்ளாளருக்கு அவை முற்றிலும் பொருந்தாது ஆம் சாமி சிதம்பரனார் மருதநிலத் தெய்வம் வேந்தன் என்று கூறி இருப்பதுவும் மனதிற் கொள்ளத்தக்கது. ஆக மக்கள் குடிக்கணக்கில் வேளாளர்தான் திராவிடர் என்று கண்டிருப்பதுவும், M. சீனிவாச அய்யங்கார் கலப்பற்ற வேளாளர் தான் திராவிடர் என்று கூறுவதுவும் இன்று வேளாளர், வெள்ளாளர், என்று பாராட்டி வருபவர்களுக்கு முற்றிலும் பொருந்தாது ஆம். அவற்றிற்கு உரியவர் மருதநில உழவர் குடியினராய்த் தான் இருக்கமுடியும். இந்த முடிவு கொண்டு இன்றையத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவுகளுள் திராவிடர் என்ற பெயருக்கு உரிய உழவர் குடியினர் யாராய் இருப்பர்? என்பதை நாம் அடுத்து ஆராய்வோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment