மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
M. சீனிவாச அய்யங்காரும் 1891 மக்கள் குடிக்கணக்கு அடிப்படையில் வேளிர் அல்லது வேளாளரே திராவிடர் என்பார். இவர் கூறுவதாவது: பண்டைக்காலத்தில் ஆரியரல்லாத தமிழ் மக்களைத் தினைநிலைப்பாகு பாடாய் பிரித்துக் காட்டுவதில் வேளாளர் இடம் பெறவில்லை. அவர் தூய திராவிடர் ஆவர். வேளாளர் தவிர்த்த மற்ற வகுப்புகள் திராவிடருக்கு முற்பட்டவர்கள். விஸ்வப்பிராமணர், (கம்மாளர்) திராவிடச் சத்திரியர் இவர்கள் திணைநிலை மக்களுள் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.
M. Srinivasa Ayyangar says: “The original classification of the non – Aryan Tamil tribes is conspicuous by the absence of Vellala caste. It must therefore refer to the Pre. Dravidian tribes. The Velier or Vellalas alone are pure Dravidians. The Viswa Brahmins and Dravida Kshtriyas had no place in the system” [M.Srinivasa Ayyangar -Tamil Studies. Page381.]
டாக்டர் R. கால்டுவெல்லும் வேளாளர்தான் திராவிடர் என்ற கருத்துடையவராயுள்ளார். அவர் கூறுவதாவது
வேளாளர் தமிழகத்தில் குடியேறுவதற்கு முன்பு அங்கு பள்ளர், பறையர் ஏற்கனவே வேட்டுவர் போன்று வேட்டை யாடியும், சிறிது புஞ்சைத் தானியம் விளைவித்தும் வாழ்க்கை நடத்தியிருப்பர். வேளாளர் குடியேறின பின்னரே நெற்பயிர் விளைவிக்கப் பட்டிருக்க வேண்டும். நீரின்றி நெற் பயிர் சாகுபடி செய்ய முடியாது. எனவே நீராகிய வெள்ளத்தை அடக்கி ஆளக்கூடிய வெள்ளாளரால் தான் அது சாத்தியமாயிருக்க முடியும். வெள்ளம், வெள்ளாளன் என்ற இரு சொற்களுக்கும் நீரைக் குறிக்கும் வெள் என்ற வேர்ச்சொல் ஒன்றாயிருப்பது இதற்குச் சான்றாகும்.
Dr. R. Caldwell says: If they (Parayan and Pallan) were really the oldest tribes that settled in the district (Tinnevelly) they must have subsisted mainly by the chase like the rude tribes commonly called vettuvar and partly by the cultivation of dry grains. The cultivation of rice by means of irrigation would seem from etymological reasons to have been specially of the vellalas – Vel - the root of vellala seems to be identical with the root of Vellam - water used for irrigation. [Dr. R. Caldwell. History of Tinnevelly District. Page 4.]
ஆக இதுவரை நாம் கண்டவைகளிலிருந்து திராவிடர் தான் இங்கு முதன் முதல் பயிர்த்தொழிலைத் தோற்றுவித்துத் தமிழக அரசுகளை ஏற்படுத்தியவர் என்றும், அவர் இன்று வேளாளர், வெள்ளாளர் என வழங்குபவர் என்றும் அறிகிறோம். இம்முடிவு ஏற்புடையதுதானா?
பழங்காலத்தில் நிக்ரிட்டோ ஆஸ்ட்ராயிட் மக்கள் இருந்தனர் என்றும், அதன்பின் திராவிடர் வந்ததாகவும், அதன்பின் ஆரியர் குடியேறினதாகவும், நிக்ரிட்டோ ஆஸ்ட்ராயிட் இனங்களுக்கும் திராவிடருக்கும் இடையே பெருமளவு கலப்பு ஏற்பட்டதென்றும், திராவிடருக்கும் ஆரியருக்கும் இடையே ஓரளவு கலப்பு ஏற்பட்டதென்றும் அறிஞர் கூறியிருப்பதை ஏற்கனவே கண்டோம். ஆக எல்லா இனங்களும் கலந்திருக்கின்றன என்றும், ஒருவரும் கலப்பற்றவர் என்று இன்றையநிலையில் கூற முடியாது என்றும் கருதுவதாயுள்ளது. இன்றையப் பார்ப்பணர் கலப்பற்ற தூய ஆரியர் என்று கொள்வதற்கு இடம் இல்லை எனச் சில அறிஞர்கள் கூறிப்போந்துள்ளனர். இது பற்றி எட்கர் தர்ஸ்டன் கூறுவதாவது: 1891 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கில் H.A. ஸ்டூவர்ட் இன்றையப் பார்ப்பனர் திராவிடருடன் கலந்த ஒரு கலப்பினம் என்றும், அவர் கலபற்ற தூய ஆரியர் அல்ல என்றும், அவர் திராவிடர் கலப்பினால் தோன்றியவர் வழித்தோன்றல்களே ஆவர் என்பது பொது மக்களின் நம்பகமான கருத்தாகும் என்கிறார். இன்று போல் பண்டைக்காலத்தில் சாதி வேறுபாடு இறுக்கமாய் இருந்ததில்லை. வேறு குலத்தைச் சேர்ந்தவர் பிராமணத் தத்துவத்திற்கு வேண்டிய அறிவுத்திறனையும் வழிபாட்டு முறையையும் கடைப்பிடித்தால் பிரமணராக மாறலாம். கேரளாவில் இந்நாளில் நம்பூதிரிப் பிராமணர் நாயர் பெண்களுடன் உறவு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edger Thurston says: "In Madras Census report of 1891, Mr. Stuart says that it has been the general belief that the brahmins of South India are not purt Aryans but are a mixture of Arya - Dravidian
race. In earliest times caste distinctions were much less rigid than now and a person of another caste became a brahmin by acquiring the brahminical standsards of knowledge and assuming the brahminical functions and we see the Nambudri brahmins even at the present day contacting alliances with the Nayar." [Edgar Thurston, castes and tribes of South India 1909. Introduction]
எட்கர் தர்ஸ்டன் மேலும் கூறுவதாவது: இடைக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பிராமணரல்லாதாரைப் பிராமணராக மாற்றியிருக் கின்றனர். அக்காலத்தில் அரசர்கள் கிரமமாகவோ அல்லது பாபநிவர்த்திக்காகவோ நடத்தும் சமயச்சடங்குகளின் போது லட்சக்கணக்கான பிராமணரை உண்பித்து திருப்திப்படுத்த வேண்டியதாயிருந்தது. அதற்காகப் போதிய பிராமணர் இல்லாததால் அரசரின் ஆணைப்படி பிற வகுப்புகளிலிருந்து ஏராளமான நபர்களைப் பிரமணராக மாற்றினர் எனச் செவிவழிச்செய்திகள் மூலம் தெரியவருகின்றது.
Edger Thurston says : "Popular Traditions allude wholesale conversion of non - brahmins into brahmins. According to such tradition Rajas used to feed very large number of brahmins (a lakh of brahmins) inexpiation of some sins or to gain religious merits. To make up, large number of non - brahmins is said to have been made brahmins at the bidding of the Raja” [Edger Thurston Castes & Tribes of South India. Vol. I Introduction]
டாக்டர் K.K. பிள்ளை கூறுவதாவது: "இன்றுள்ள பெரும்பாலான பிராமணர் – திராவிட இனத்தைச் சேர்ந்தவர் ஆவர். ஜம்பது ஆண்டுகளுக்கு முன் நான் இராசமுந்திரி அரசுக் கல்லூரியில் பணியாற்றி வந்தபோது என்னுடன் பணியாற்றி வந்த அப்பாராவ் என்ற பிராமணர் தன்னைத் திராவிடப்பிராமணர் என்று கூறினர். பெரும்பாலான பிராமாச்சரணம் பிரிவைச் சேர்ந்த பிராமணர் ஆரியர் அல்ல என்றே கருதவேண்டியுள்ளது. தக்காணத்தில் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆரிய நான்கு வகுப்பு பற்றிய பேச்சுக்கள் எழவில்லை. ஆதற்குப் பின்னரே அப்பாகுபாடு தோன்றியது எனலாம். இந்நாளிலும்கூட அந்திராவில் சில பிராமணர் தங்களைத் திராவிடப்பிராமணர் என்று கூறி வருகின்றனர். மேலும் பிராமணர்
(ஆரியர்) சத்திரியர் (திராவிடர்) இவர் இருவரிடையே இரத்தக் கலப்பில் நீக்குப்போக்கு இருந்து வந்தது. ஏன்? பிராமணருக்கும், வைசியர், குத்திரருக்கும் இடையே கூடக் கலப்பு ஏற்பட்டது.
Dr. K. к. Pillay Says: ‘I Venture to state that many brahmins of today are Dravidans. When I was serving in the government college at Rajamundry nearly fifty years ago an erstwhile colleague Mr. Арро Rao said that he belonged to the community of Dravidian Brahmins. It is more than likely that those Brahmins said to belong to Brahmacharma are non - Aryans. It was not until the 5 th or 6 th century A.D. that the four fold classification took shape in the Decan. It is noticeable that even at present some Brahmins in Andra Desa describe themselves as Dravida Brahmins. Further there was a great deal of flexibility between the Brahmins and Kshtriyas (Dravidias) and even between Vysias and Sudras (Dr. K.K. Pillay. South Indian History congress 1980. Inaguration address. Page. 8]
(தொடரும்)
No comments:
Post a Comment