மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
பாண்டியன்:
நெல்லை மாவட்டம் செங்கோட்டைப் பகுதி வாழ்தேவேந்திர குலத்தார் பாண்டியன் என்ற குலப் பட்டம் பூண்டு வருகின்றனர். சுமார். 70 - 80 ஆண்டுகளுக்கு முன், செங்கோட்டைப் பகுதிவாழ் மறவர் பாண்டியர் என்ற பட்டம் தங்களுக்கே உரியது என்றும், தேவேந்திர குலத்தார் அதைத் தரிக்கக்கூடாது என்றும், அன்றையத் திருவனந்தபுரம் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் என்றும், அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாண்டியன் என்ற பட்டம் தேவேந்திர குலத்தாருக்கே உரியது என்றும், அது மறவருக்கு உரியதல்ல என்றும் தீர்ப்பு வழங்கியதாக இப்பகுதிவாழ் தேவேந்திரகுலத்தார் கூறுகின்றனர். இவர் கைவசமுள்ள கிரையம், ஒத்திப்பத்திரங்களில் தம்மைப்பாண்டியன் என்றே பதிந்து வருகின்றனர். இப்பட்டத்தை மறவரும், சாணார் என்ற நாடாரும் தரித்து வருவதுடன், தாங்கள்தான் பாண்டிய மன்னர் பரம்பரை என்று கூறிவருகின்றனர். (மோசஸ் பொன்னையா - நாடார் வரலாறு. முத்துதேவர் – முக்குலத்தோர் - மூவேந்தர்) (குறிப்பு: இந்த இரு மரபினருள் பெரும்பாலோரின் தாயகம் தமிழகம் இல்லை. இவருள் பல பிரிவுகள் உண்டு. சிலபிரிவுகள் தமிழகத்தின் பழங்குடியினராய் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பிரிவுகள், வேற்றிடங்களிலிருந்து இடைக் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர் என்றே கருத வேண்டியுள்ளது. இவரது உடற்கட்டு, தோற்றம், பேச்சு பழக்கவழக்கம் இவைகள், மற்றப் பெரும்பாலான தமிழ் மரபினருடையவற்றிலிருந்து வேறுபடுவது இதற்குச் சான்றாக அமையும்.
பாண்டிய நாட்டிலுள்ள தேவேந்திரகுலத்தார் அனைவரும் பாண்டியன் பட்டம் தரிக்காமல், செங்கோட்டைப் பகுதிவாழ் இம்மரபினர் மட்டும், அதைத் தரித்து வருவது பாண்டிய நாட்டில் சில நூற்றாண்டுகளாய் மறவர் ஆதிக்கம் மேலோங்கியிருந்து வந்ததினாலேயாம். இங்கு பெரும் எண்ணிக்கையிலான பாளையப் பட்டுகள் இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை குறுநிலமன்னர் மற்றும், அவரது ஆளுகையின் கீழ் உள்ள மறவர், பாண்டியன் என்ற பட்டத்தைத்தரிக்க முற்பட்டதால் தேவேந்திர குலத்தார் குடும்பன் என்ற பட்டத்தையே மேற்கொள்ளலாயினர் எனலாம். எனினும் இவருள் சிலர் தங்கள், இயற்பெயர்களுடன் பாண்டி, பாண்டியன் என்பதைச் சேர்த்து வழங்கி வருவது கண்கூடு. இம்மரபுப் பெண்களில் கூடச் சிலர் பாண்டி, பாண்டியம்மாள் என்ற பெயர்களைக் கொண்டுள்ளனர். பாண்டிய நாட்டிலுள்ள பாணர் மேஸ்திரி என்போர் தங்களைப் பாண்டிய குலவேளாளர் என்பர். மற்றும் பாண்டிய நாட்டிலுள்ள பூர்வீக வண்ணார், நாவிதர், கம்மாளர், ஒச்சர், குயவர் இவர்கள் முறையே தங்களைப் பாண்டிய வண்ணார், பாண்டியநாவிதர், பாண்டியக் கம்மாளர், பாண்டிய ஒச்சர் பாண்டியகுலாலர் என்று கூறுவது வழக்கமாய் இருந்து வருகின்றது. இவ்வாறு இவர்கள் கூறிவருவது தாம், பாண்டிய நாட்டின் பூர்வீகக் குடியினர் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.
மூப்பன் : -
சோழ நாட்டில் திருச்சி மாவட்டத்திலும், தஞ்சை மாவட்டத்தின். மேல் பகுதியிலும், சேலம் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுமுள்ள தேவேந்திர குலத்தார் மூப்பன் என்ற பட்டம் பூண்டு வருகின்றனர். தேவேந்திர குலத்தாரைத் தவிர, கொங்கு நாட்டில் சாணாருள் ஒரு சாராரும், மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வலையரும் முப்பன் என்ற பட்டம் தரித்துவருகின்றனர். இவர் தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், பாபநாசம் தாலுக்காக்களிலும், திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவிலுமுள்ள சுருதிமான் வகுப்பார் அண்மைக்காலம் வரை மூப்பன் என வழங்கினர். இவருள் பொருளாதாரத்தில் முன்னேறியவர் அதை இழி சொல்லாகக் கருதி, மூப்பனார் என்று அழைக்க முற்பட்டுள்ளனர். இவரைப்பின்பற்றி இவ்வகுப்பைச் சேர்ந்த அனைவரும். மூப்பனார் என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர். எனினும் மற்ற வகுப்பார், பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள இம்மரபினரை. மூப்பன் என்றே தொடர்ந்து அழைத்து வருகின்றனர். மூப்பனார் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. மூப்பன் எனில் வயதில் மூத்தவன், ஊர்த்தலைவன் என்று பொருள்படும். திருச்சி மாவட்டத்தில் தேவேந்திர குலத்தார் வேளாண்மைத் தொழிலுக்கு வேலையாட்கள் சேர்த்து வேலை வாங்குபவரை மூப்பன் என அழைப்பதுண்டு. இம்மாவட்டம் முசிறி தாலுக்கா அரசலூர் கிராமக் கல்வெட்டு ஒன்றில் “பள்ள மாணிக்க மூப்பன்” (தென் இந்திய கோயில் சாசனங்கள் பாகம் I. எண் 796) என்று பொறிக்கப்பட்டுள்ளது காண்க, ஊர்சபைகளுக்கு புள்ளி மூப்பன், நாட்டு மூப்பன் என்ற சமூகத் தலைவர்கள் இவர் மத்தியில் இருந்து வருகின்றனர். ஊர் சமூகப் பஞ்சாயத்துத் தலைவர் மூப்பன் என்றே வழங்கி வருகின்றனர். ஊர் சமூகப் பஞ்சாயத்துத் தலைவரை மூப்பன் என்று வழங்கும் பழக்கத்தை ஒட்டி இப்பகுதிவாழ் தேவேந்திர குலத்தார் அனைவரும் மூப்பன் என்பதைக் குலப்பட்டமாகப் பூண்டு வருகின்றனர் எனலாம்.
பணிக்கன்.
தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர், பாபநாசம் தாலுக்காகளில் தேவேந்திரகுலத்தாருள் ஒருசாரார் பணிக்கன் என்ற குலப்பட்டம் தாங்கி வருகின்றனர். பணிக்கன் என்பது படைக்கலம் பயிற்றுவோன் என்ற பொருளில் இவருக்கு வழங்கி வருவதாகக் கருதற்பாலது. சென்னை பல்கலைக் கழக அகராதியில் பணிக்கன் என்ற சொல்லுக்கு ஆசிரியர், படைக்கலம் பயிற்றுவோன், கூத்து பயில்விப்போன் தலைமைக் கொற்றன், தச்சன், யானைப்பாகன், நாவிதர் தலைவன் விஷவைத்தியன், சாராயம் காய்ச்சுவோன், பள்ளர் சாதியில் ஒருவகுப்பு எனப் பொருள் கண்டுள்ளது. கேரளாவில் போர்ப்பயிற்சி செய்பவன், தேகப்பயிற்சி கற்பிக்கும் ஆசிரியன் இவர்கள் பணிக்கன் என வழங்கி வருகின்றனர். ஈழவர், இலை வாணியர் இவருள் ஒரு சாரார் பணிக்கன் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர்."
தொண்டைமான்:
திருச்சி மாவட்டத்தில் தேவேந்திரகுலத்தாருள் ஒரு பிரிவினர் தொண்டைமான் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். கள்ளர், பள்ளி (படையாட்சி) ஏன்? கொங்கு வேளாளர் என வழங்கிவரும் கவுண்டருள் சிலரும் தொண்டைமான் என்ற குலப்பட்டம் தரித்து வருகின்றனர். சங்ககாலத்தில், சோழரின் கீழ் இருந்த இளந்திரையன் தொண்டைமான் என்ற பட்டத்தைத் தரித்திருந்தான். பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியில், கலிங்கப் போரைத் தலைமை தாங்கி நடத்திய படைத்தலைவன் கருணாகரன் தொண்டைமான் என்ற பட்டம் பூண்டிருந்தான். இவனைப் பல்லவ இளவரசன் என்பர். சோழர் காலக் கல்வெட்டில் சோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரத் தொண்டைமானார் (SII.Vol. IV. -862) என்று பொறிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மன்னர் வடுகர் இனத்தைச் சேர்ந்தவர், இவர் தொண்டைமான் என்ற பட்டம் தாங்கி வந்தனர் என்பதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டைத் தொண்டைமான் கீழிருந்து பணிபுரிந்த கள்ளருள் சிலர் தொண்டைமான் என்ற குலப்பட்டம் பூண்டதால் புதுக்கோட்டைத் தொண்டைமான் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற தவறான கருத்து நாட்டில் நிலவுகின்றது. இவ்வாசிரியரும் ஏற்கனவே இவரைக் கள்ளர் என்றே எழுதிவந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதுக்கோட்டை அரசைத்தோற்றுவித்தவர் தொண்டைமண்டலப் பகுதியிலிருந்து இங்கு இடைக்காலத்தில் குடியேயேறியவர் ஆவர்.
தொண்டைமண்டலத்திலிருந்து வந்ததால் தொண்டைமான் என்ற பட்டத்தைப் பூண்டனர் என வரலாற்றறிஞர் கூறுவர். இவர் தொண்டைமான், இளந்திரையன் மற்றம் கருணாகரன் தொண்டைமான் வழித் தோன்றல் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. தொண்டைமான் இளந்திரையன் மள்ளர் குடியைச் சேர்ந்தவன் என்பது நாம் அறிந்ததுவே. கருணாகரத் தொண்டைமான் வேளாளன் என்று கல்வெட்டு கூறுவதால் அவன் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவனே ஆவன். திருச்சி மாவட்டத்தில் தொண்டைமான் என்ற பட்டம் தரித்துவரும் தேவேந்திரகுலத்தார் ஏற்கனவே தொண்டை மண்டலப் பகுதியில் வாழ்ந்து அப்பகுதி வேற்று நாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, அங்கிருந்து தெற்கே குடிபோந்தவரின் வழித் தோன்றல்கள் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. செங்கற்பட்டு மாவட்டக் குறிப்பில், தேவேந்திர குலத்தார் அங்கு அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் கண்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டக் குறிப்பு தயாரித்த பின்னர், எடுக்கப்பட்ட மக்கள் குடிக்கணக்கில் இவரது எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதற்குக்காரணம் ஆங்கிருந்த, தேவேந்திர குலத்தாருள் ஒரு சாரார் இடையே வெளி இடங்களுக்குச் சென்றிருக்கவேண்டும்; மற்றும் இன்னொரு சாரார் பள்ளி (படையாச்சி - வன்னியர்) வகுப்பாருடன் கலந்திருக்கவேண்டும். (பள்ளர் பெண்பால் பெயர் - பள்ளியும், பள்ளி மரபுப் பெயரும் ஒன்றாய் இருப்பதால் இவ்விணைப்பு சாத்தியமே ஆகும்) பள்ளி வகுப்பில் இந்திர குலத்தார் என்ற ஒரு உட்பிரிவு இருந்து வருகின்றது. இவர் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவரா? என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும்.
(தொடரும்)
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteபாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.
இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.
பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் பாணர்
ReplyDeleteநாகர்களுக்கு எதிராக போர்
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு