Tuesday, November 7, 2017

மூவேந்தர் யார்? பகுதி-15

மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

ஈண்டு சைவ சமயப் பெரியார்கள் மூவர் முதலிகளில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் திராவிடசிசு என வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இடைக்காலத்தில் சோழர் ஆட்சியின் போது வைணவ சமயப் பெரியார் இராமானுசர் ஏராளமான பார்ப்பனரல்லாதாரை வைணவ சமயத்தில் ஈர்ப்பதற்காகச் சமயச் சடங்குகள் செய்து, அவர்களுக்குப் பூணுல் அணிவித்து வைணவப் பிராமணராக மாற்றினார் என வரலாறு கூறும். இவர்களுள் பெரும்பாலோர் இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் எனக் கருத ஏதுவாகிறது. கிருஷ்ணன் ஆயர்பாடியில் வளர்ந்த கதையை மேற்கொள் காட்டி இடையரை வைண்வ சமயத்திற்கு ஈர்த்து அவருள் கல்வி கற்றவரைப் பிராமணராக மாற்றியிருப்பது சாத்தியமே. தமிழ் நிகண்டுகளில் ஆரியர் என்பதற்கு மிலேச்சர் என்று பொருள் கண்டுள்ளது அறியத்தக்கது. தென்னகத்துப் பிராமணரை வட இந்தியப் பிராமணர் மட்டமானவராகக் கருதுவதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். அதற்குக் காரணம் அவர்கள் கலப்பற்ற சுத்த ஆரியர் அன்று என்பதாம். தென் இந்தியப் பிராமணருடைய பிரமசாத்தா (மத்தியானப் பறையர்) என்ற ஒரு பிரிவு இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. M. சீனிவாச அய்யங்கார் ஆரியர் திராவிடரிடையே கலப்பு நிகழ்ந்தது என்று கூறியுள்ளது ஈண்டு நினைவிருக்கத்தக்கதுஆம். தமிழ் இலக்கியங்களில் அந்தணர், பார்ப்பனர் என வருபவர் தமிழ் திராவிட மரபினரே.

வடக்கேயிருந்து பிழைப்புக்காகவும், சமயப் பிரச்சாரத்திற்காகவும் வந்த ஆரியர், தென்னக அந்தணர் பார்ப்பனரோடு கலந்திருப்பது சாத்தியமே. ஏன்? வடநாட்டிலும் ஆரியருக்கும் திராவிடருக்கும் இடையே கலப்பு ஏற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவாகும். ஆக வடநாட்டிலிருந்து தென்னகம் வந்த ஆரியரையும் தூய ஆரியர் எனக் கொள்வதற்கில்லை. ஆரியர் என்ற சொல்லுக்கு காலத்திற்குக் காலம் வெவ்வேறு பொருள் வழங்கி வந்திருக்கின்றது என்பது ஈண்டு குறிப்பிட்த்தக்கது. ஆரம்பகாலத்தில் ஆரியன் என்பதற்கு வெளியே இருந்து வந்தவன் வேற்றாள் வெளிநாட்டான் என்று பொருள்பட்டது.

இச்சொல்பற்றி கொ. அ. அன்தோனவா - கி.ம. போன்காரத் லேவின் கூறுவதாவது : 'ஆரியமக்கள் என்று கருதக்கூடியவர்கள் பண்டைய ஈரானியர்களும், இந்தோ ஆரியர்களும்தான். அவர்களே தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். தாங்கள் வசித்த பிரதேசங்களை ஆரியவர்த்தம் அல்லது ஆரியபூமி என்று அழைத்தார்கள். ஆரிய என்ற சொல் அரி என்ற சொல்லுடன் தொடர்புள்ளது. வேதகாலத்தில் இந்தச் சொல்லுக்கு "வெளிநாட்டான் வேற்றான் என்று பொருள், ஆரியன் என்ற சொல் வேற்றானுடன் இணைந்தவன் – அவர்களுக்கு இணக்கமானவன் என்று பொருள்பட்டது. பிற்காலத்தில் 'நல்குடிபிறந்தவன்’ என்று பொருள் இச்சொல்லுக்கு ஏற்பட்டது. (கொ.அ. அன்தோனவா - மி. போன்காரத் லேவின் - இந்தியாவின் வரலாறு. 1987 முன்னேற்றப்பதிப்பகம் மாஸ்கோ பக்கம் 43).
மொழியியல் தொல்பொருள் இயல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது, பஞ்சாபில் – இந்தோ ஆரியர்கள் - முதன்மையாகத் திராவிட இனக்குழுக்களுடன் கலந்து பழகத் தொடங்கினார்கள். முன்னர் மிக உயர்த்த நிலையிலிருந்த பண்பாட்டின் ஒரு சில மரபுகள் அநேக வட்டாரங்களில் இன்று எஞ்சி இருந்தமையால் இந்தோ ஆரியர்கள் வட்டார மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார்கள். திராவிட மொழிகள் இந்தோ - ஆரிய மொழிகள் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தின என்று ரிக்வேத மற்றும் பிற, வேத சப்ஹிதைகளின் மொழி இயல் பகுப்பாய்வு காட்டியது (கொ அ. அன்தோனதா கி.ம. போன்காரத் லேவின் இந்தியாவின் வரலாறு. முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ, 1987, பக்கம் 47)

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர் பஞ்சதிராவிடர் என வழங்கினர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. (Edger Thurston Caste & Tribes of South India. VoI. I)

ஆக இதுவரை நாம் பார்த்ததிலிருந்து இன்று தமிழகத்தில் உள்ள பிராமணரைச் சுத்த ஆரியர் என்று கொள்வதற்கில்லை. மாறாக அவர் ஆரியர் திராவிடர் மற்றும் பழங்குடிகள் கலப்பு ஆவர்.

அடுத்தபடியாக இன்றைய வேளாளரை எடுத்துக் கொள்வோம். இவர்கள் திராவிடர் எனக் கொள்வதற்கு இவர் ஏர்த்தொழிலும், போர்த்தொழிலும் செய்பவராக இருக்க வேண்டும். ஆனால் இவர் இன்று இந்த இரு தொழில்களையும் நேரிடையாய்ச் செய்பவராக்த் தோன்றவில்லை. வேளாளர்களுள் உயர்ந்தவர் எனப்பாராட்டிவரும் கார் காத்த வேளாளர் பற்றிப் பார்ப்போம். இவர் பற்றி
W.பிரான்சிஸ் கூறுவதாவது: 'பாண்டிய வேளாளர் என்பவர் இரு பிரிவுகளையுடையவர் ஆவர். அவருள் ஒரு பிரிவினர் காரைக் காட்டார் அல்லது காரைக்கட்டு வேளாளர் என வழங்குவர். இவர் தோற்றம் பற்றி புராணக்கதைகளைச் சான்று காட்டினாலும் இப்பெயர் உண்மையில் காரைக்காடு என்ற ஒரு நிலப்பகுதியைச் சுட்டுவதாக நாம் கருத வேண்டியுள்ளது.
W. Francis says :- 'The Pandya vellalas are sub - divided into Karaikkattu or Karaikkattus who are probably a territoria sub - division named after a place called Karaikkadu [W. Francies, Thẻ Madras. census Report 1901].
குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் இவரைக் காரைக் கட்டுப் பிள்ளைமார் என்றே வழங்குவர். பெண்கள் கழுத்தில் காரை என்ற ஆபரணத்தை அணிவதால் காரைக்கட்டுப் பிள்ளைமார் என ஆபரணத்துை ஒவதால் காரைசூட்டுப் பிள்ளைமார் எனக்கொள்வாருமுளர்.
பாண்டிய வேளாளர் சங்க இலக்கியத்தில் பேசப்படும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. இவர் வேளாளர் என வழங்குவதற்குப் பயிர்த் தொழிலை மேற் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இவர் தையல் வேலையைக் குலத்தொழிலாகக் கொண்டுள்ளனர். ஊர்ப்புறங்களில் இவரைப் பறையர் அல்லது பாண மேஸ்திரி என்று தான் கூறுவர். இவரது இல்லத்தில் செக்கர், வண்ணார், நாவிதர் உணவு உட்கொள்வதில்லை. நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் இங்கெல்லாம் இவர் செடியூல் வகுப்பினராகக் கணக்கிடப்பட்டுள்ளனர். இவர் வேளாளரே அல்ல. குல உயர்வுக்காகத் தம்மைப் பாண்டிய வேளாளர் என்று கூறிவருகின்றனர். (இரா. தேவ. ஆசிர்வாதம் - வேளாளர் யார் 1981 பக்கம் 36)

அடுத்து நாஞ்சில்நாட்டு வேளாளர் பற்றிப் பார்ப்போம். இவர் தேவரடியார் வழிவந்தவர் என்றே தெரிகிறது. இவர் பற்றி

எட்கர் தர்ஸ்டன் கூறுவார்: "தேவரடியார் வழி வந்தவர் தம்மை நாஞ்சில் நாட்டு வேளாளர் என்பர். (Nanjil Nattu Vellalas are the offspring of Devadasis. E. Thurston. Castes & tribes of South India. Vol II. Page 140 ) நாயர் போன்று இவர் மறு மக்கத்தாய முறையைப் பின்பற்றி வருபவர் ஆவர்.
சோழ நாட்டிலுள்ள சோழிய வேளாளரை எடுத்துக் கொள்வோம், இவர் தோற்றம் சந்தேகத்திற்கிடமானதென்றும், சோழநாட்டில் பல்வேறு வகுப்பாரும் போலிக்குல உயர்வுக்காகத் தம்மைச் சோழிய வேளாளர் என கூறுவர்.
Edgar Thurston says: "The Solias (Cholias) are numerous and uniquitous. They are generally regarded as of doubtful descent since paravenus who wish to be considered as Vellalas usually claim to belong to this sub – division” [E. Thurston. Castes and tribes of South India. Vol VII. Page 386] .
சங்க இலக்கியத்தில் வரும் பாணர், விறலியர், பரத்தையர் வகுப் பாருள் ஒரு சிறுபான்மை தேவரடியார் தவிர்த்து, பெரும்பாலோர் இன்று சோழ நாட்டில் காணப்படுவதில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தினர்தான் இன்று சோழிய வேளாளர் என்று கூறிவருகின்றனர் என்றால் அதை ஒருவரும் மறுக்க இயலாது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்ற பழமொழி நினைவிருக்கத்தக்கது.
அடுத்து தொண்டை மண்டலத்திற்கு வருவோம். இங்கு தொண்டை மண்டல வேளாளர், தொண்டைமண்டல முதலியார் என்று குலப்பட்டம் பூண்டு வருபவர் கலப்பினம் என்றே கருதப்படுகின்றனர். இவர் விசயநகரம் மற்றும் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தோற்றமும், ஏற்றமும் பெற்றவர் ஆவர்.
(தொடரும்)

2 comments:

  1. இது போன்ற முட்டாள் தனமான பதிவை இட அகநானுறு பற்றி அரியா மூடனால் மட்டுமே முடியும்.
    "ஊழியம்" செய்து டெபுடி கலெக்டர் ஆன தேவாசிர்வாதத்திற்கு இது போன்ற விடயங்கள் புலப்பட வாய்பில்லை..

    ஒரு இன வரலாற்றை பிரிட்டிஷ்காரனிடம் இருந்து ஆராய தொடங்கும் மடையனுக்கு பதில் கூறி ஒன்றும் ஆக போவதில்லை புத்தி சுவnதீனமற்றவன் என கருதி விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உன் பதிவில் இருந்து தெரிகிறது உனக்கு புத்திசுவாதினம் இல்லாதவன் என்று

      Delete