Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-37

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

ஆக இதுவரை நாம் கண்ட மேற்கோள்களிலிருந்து ஏற்கனவே தெய்வமும், அரசனும் அய்யன் என வழங்கினர். ஆலயங்களிலும் அரசரின் கீழும் பணி செய்த பார்ப்பனர் தெய்வத்திற்கும், அரசருக்கும் தாங்கள் பற்றுதலுள்ள குழந்தைக்ள் எனத் தம்மைப் பிள்ளைகள் எனவழங்கினர். நாயக்கர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு அதிகமாகவும், அவரைப் பார்ப்பனரல்லாதார் தந்தைபோல் பாவித்து அய்யன் என்றும், தம்மை அவரது பிள்ளைகள் என்றும் கூறிக்கொண்டனர் எனத் தெரிகிறது.
சோழ பாண்டிய மன்னர் இடைக்காலத்தில் தேவர். உடையார், வர்மன் முதலிய பட்டங்களைத் தரித்திருந்தனர். இவர் ஆட்சிக்குப் பிறகு அந்நியர் ஆட்சியில் பாளையப்பட்டுகளாகவும், குறுநிலமன்னராகவும், பள்ளி, வாணாதிராயர், மறவர், தெலுங்கு தொட்டிய வகுப்பார் முதலியோர் நியமனம் பெற்றனர். இவர்களுள் பள்ளி வகுப்பார் படையாட்ச்சி, வன்னியர், காமிண்டன் முதலிய பட்டங்களையும், வாணாதிராயர் தேவர் என்ற பட்டத்தையும் மேற்கொண்டனர். நாயக்கரின் கீழ் சேவை செய்த பள்ளி, கள்ளர் வகுப்பாரும் நாயக்கர் என்ற பட்டம் தரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. நந்தமன் மலையமான் என்பவருள் நில உடைமையாளரானவர் உடையார் என்றும், சுருதிமான்களில் செல்வாக்குப் பெற்றவர் மூப்பன்(தலைவன்) என்றும் பட்டம் பூண்டனர். இவர்களைப் பின்பற்றி இந்த மரபுகளைச் சேர்ந்த எல்லோரும் உடையார், மூப்பன் என்ற பட்டங்களைத் தழுவ ஆரம்பித்தனர். (குறிப்பு இந்த வகுப்புகள் பறையரிலிருந்து பிரிந்தவர் என எட்கர் தர்ஸ்டன் கூறுவார்.) (Castes & Tribes of S.I. Vo V), பிறமலைக் கள்ளருக்கு தேவேந்திர பிள்ளைத் தேவனை திருமலை நாயக்கன் அரசனாக்கி அவனுக்கு தேவேந்திர திருமலை பின்னைத் தேவன் எனப் பட்டம் சூட்டினர். பிறமலைக் கள்ளர் அம்பலகாரன் என்ற பட்டம் தரித்து வந்ததாகவும், பின்னாளில் மறவர் போன்று தேவர் என்ற பட்டத்தை மேற்கொண்டனர் என்றும் அறிகிறோம். (W. Francis. Madurai Gazetteer and E. Thurston casters & Tribes of South India. Vol. III Page. 88). மறவருள் பல்வேறு பிரிவுகள் உண்டு. தேவர் என்ற பட்டத்தைத் தவிர சேர்வை, கரையாளர், தலைவன் என்ற பட்டங்கள் உடைய பிரிவுகளும் இருந்தன. ஆனால் இக்காலத்தில் குல உயர்வுக்காக, எல்லாப் பிரிவினரும் தேவர் என்ற பட்டத்தைப் பூண்டு வருகின்றனர். மறவர் மற்றும் பிறமலைக் கள்ளர் தவிர, இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை குறுநில மன்னர் தங்களிடம் சில குறிப்பிட்ட தொழில் செய்த கள்ளருக்குத் தேவர் என்ற பட்டத்தை வழங்கியதாக கூறுவர். இக்காலத்தில் அகம்படியர் என்று கூறிவரும் சேர்வை சேர்வைகாரர் என்பவர் இராமநாதபுரம் கீழ் பகுதியிலுள்ள இடையர், வலையர் வல்லம்பார் முதலிய வகுப்புகளிலிருந்து இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை மன்னர் இவர்களுக்குப் படைத் தொழில் மற்றும் பல்வேறு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டவர் எனலாம். இராமநாதபுரம் சேதுபதியும், சிவகங்கை மன்னரும் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பர். இவர் இருவரும் வடுகர் என அனுமானிக்க வேண்டியுள்ளது. (தமிழ் மூவேந்தரான தேவேந்திரர் வீழ்ச்சி) இந்த இரு இடங்களிலும் மறவர் அதிகம் இல்லாமல், சேர்வை என்பவர் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்து வருவதுவும் சிந்திக்கத்தக்கது. சேவை செய்தவர் சேர்வை, சேர்வைகாரர் என்ற குலப்பட்டத்தை மேற்கொள்ளலாயினர். குல உயர்வுக்காக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இம்மரபினரில் சிலர் சமீப காலமாய்த் தங்களைத் தேவர் என்றே கூறிவருகின்றனர். ஏன்? கள்ளர் கூடக் கள்ளர் வகுப்பு இல்லாத மாவட்டங்களுக்குச் செல்லும்போது, அங்கு தம்மைக் கள்ளர் என்று கூறாமல் தேவர் என்றே கூறி வருகின்றனர். கள்ளர், மறவர், அகம்படியர் மூவரும் தேவர் என்ற பட்டத்திற்கு உரியவர் என்றும் தாங்கள் முக்குலம் என்றும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர் என்றும் கூறி வருவதுடன், முக்குலத்தோர் என்ற அமைப்பைத் தேவர் பேரவை என்று அழைக்கவும் முற்பட்டுள்ளனர். அத்துடன் நிற்காது, மூன்று வகுப்பையையும் தேவர் என்று அழைக்கவும் அரசை வற்புறுத்திவருகின்றனர். இத் தேவர் என்ற பட்டத்திற்கும், முக்குலம் என்பதற்கும் ஆதாரமாய் ஒரு புராணக்கதையையும் மேற்கோள் காட்டுவர். ஒரு காலத்தில் அகலிகையை மணக்க கெளதமரிஷியும், தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய தேவேந்திரனும் விரும்பினர். ஆனால் இவர் இருவருள் யாருக்கு அகலிகையை மணம் செய்து கொடுப்பது என்பது பற்றி முடிவு செய்ய ஒரு நிபந்தனை விதித்தனர். அதன்படி ஆயிரம் ஆண்டுகள் தண்ணீருள் மூழ்கி இருப்பவர் அகலிகையை மணக்கத் தகுதியாவர். கெளதமர் ரிஷி ஆனபடியால், ஆயிரம் ஆண்டுகள் தண்ணிருள் மூழ்கி இருந்தார். ஆனால் தேவேந்திரனால் அவ்வாறு தண்ணிருள் மூழ்கி இருக்க முடியவில்லை. கெளதமர் போட்டியில் வெற்றி பெற்றதால் அகலிகையை மனைவியாகக்கொண்டார். இதில் தேவேந்திரன் தோல்வி கண்டான். எனினும் அகலிகை மீதுள்ள மோகம் அவனை விட்டபாடில்லை. அவளை எப்படியாவது, ஒரு தடவையாவது அடைய வேண்டுமென முடிவு கொண்டு, ஒரு நாள் நள்ளிரவில் சேவற்கோழி உருவம் எடுத்து கெளதமர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, அவரது இல்லத்தின் கூரை முகட்டில் ஏறி, விடிந்து விட்டதற்கு அறிகுறியாகச் சேவற்கோழி கூவுவதுபோல் கூவினான். கெளதமர் நித்திரை கலைந்து பொழுது விடிந்து விட்டதாதக் கருதி, அவசர அவசரமாய்ப் படுக்கையிலிருந்து எழுந்து காலைக்கடன்களை முடிக்க ஆற்றுக்கரைக்கு விரைந்தார். தேவேந்திரன் தனது சக்தியால் இரவுப்பொழுதை நீட்டிவிட்டு கூரையிலிருந்து இறங்கி அகலிகையோடு கூடிமகிழ்ந்தான். கெளதமர் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தமது இல்லத்திற்குத் திருபும்போது, தமது இல்லத்தில் மூன்று சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கெளதம்ரைக் கண்டதும் ஒரு சிறுவன் ஒடி ஒளிந்தான். இன்னொருவன் வீட்டின் தூணில் (மரம்) ஏறினான். மூன்றாமவன் வீட்டின் வாசற்படியிலேயே நின்றான். ஒடி ஒளிந்தவன் கள்ளன் எனவும், மரத்தூணில் ஏறியவன் மறவன் எனவும், வீட்டின் வாசற்படியில் அசையாமல் நின்றவன் அகம்படியன் (அகம் - வீடு, வீட்டுப்படி) எனவும் பெயர் பெற்றனர். இவர் மூவரும் தேவேந்திரனுக்குப் பிறந்தவர் என்பதால் தேவர் என்ற குலப்பட்டத்திற்கு உரியவராயினர் என்பர். (குறிப்பு: ஜெயலலிதாவை முதலமைச்சராகக் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளர், மறவர். அகம்படியர் மூவரையும் தேவர் என்று ஒரே வகுப்பாக அழைக்க வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தஞ்சைக் கள்ளர் தம்மைத் தேவர் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை.) சாணார் வகுப்பார் சமீப காலமாய் நாடார் என்ற குலப்பட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஊர்ப்புறங்களில் சாணான், சாணாவி, நாடாவி, (தொடாதவர்) என்றே வழங்கி வருபவர். கடந்த ஒரு நூறு ஆண்டு காலத்தில் இவருள் ஒரு சாரார் தொழில் துறையிலும், இன்னொரு சாரார் கிறித்துவமறையில் சேர்ந்து கல்வி கற்று, அரசுபணிகளில் சேர்ந்து முன்னேறியதாலும், குலஉயர்வுக்காக நாடாவி என்பதை நாடார் என, மாற்றி உபயோகிக்கலாயினர். நாடார் என்றாலும் நாட்டிற்கு வெளியே காட்டுப் பகுதியில் வாழ்பவர் என்றே பொருள்படும். தமிழ் சங்க இலக்கியங்களிலோ, நிகண்டுகளிலோ சாணார் என்பதோ நாடார் என்பதோ இடம் பெறவில்லை.
டாக்டர் R. கால்டுவெல் இம்மரபினர் பற்றி எழுதிய சாணார் வரலாற்றில் கூறியுள்ளதை இராபர்ட் L. ஹார்டு கிரேவ் ஜூனியர் தமது “தென் இந்திய நாடார்” என்ற நூலில் எடுத்தாண்டிருப்பதைப் பார்ப்போம்: “நாடார் ஈழத்திலிருந்து (இலங்கை) முதன்முதில் வந்தவர், யாழ்பாணப்பகுதியிலிருந்து பனங்கன்றுகளுடன் இராமநாதபுரம் வழியாக நெல்லை மாவட்டத்தில் குடியேறினர். பாண்டியன் இவர்களுக்குப் பனைமரம் வளர்ப்பதற்குத் தகுதியான திருச்செந்தூருக்குத் தெற்கேயுள்ள தருசாய்க் கிடந்த மானாடு என்ற சேரிப்பகுதியைக் கொடுத்து உதவி, அங்கு குடி அமர்த்தினான். இன்னொரு பிரிவினர் ஈழத்தின் இதரப் பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாய் தென் திருவாங்கூரில் குடியேறிப் பின்னர் வடதிருவாங்கூர், நெல்லை மாவட்டம் மேற்குப் பகுதிகளுக்குப் பரவினர். இவரை ஈழவர் என்றும் தீயர் என்றும் அழைத்தனர். ஈழவர் எனில் ஈழத்திலிருந்து வந்தவர், தீயர் எனில் தீவிலிருந்து வந்தவர் எனப் பொருள்படும். தென் திருவாங்கூரில் குடியேறியவருள் சிலர் நெல்லை மாவட்டத்தின் பிறபகுதிகளில் பனங்காடுகள் அதிகம் இருந்ததால் பனைமரம் ஏற அங்கு வரவழைக்கப்பட்டனர். இவர் மக்கள் தொகை பெருக இராமநாதபுரம் மற்றும் விடக்கேயுள்ள இடங்களுக்குப் பரவினர். ஆக இவர் பூர்வீகம் ஈழம் ஆகும். தமிழகத்தில் முதன் முதலில் குடியேறிய இடம் அனேகமாக மானாடு என்ற தேரிக்காடு ஆகும். இங்கு இவரது பூர்வீகக் குலதெய்வம் இன்றும் வணங்கப்பட்டு வருகிறது.
Robert L. Hardgrave Jr. says: Á Number of places are mentioned as the home of the Nadars. Chola Country - Madurai and South Travancore. Caldwell tried to establish as emigrants from the North coast of Ceylon. Ezhavas Thiyar - Climbers of cocounts are a divisions of Shanars. They are descendants of Shanans. Caldwell said that one group came from Jaffna, bringing with them Jaffna Palmyra seedlings regarded as the best in the east. The pandya rulers gave the title over the sandy waste waste lands of Manadu in the south eastern portion of the district (Tinnevelly) the region möst suitable for the cultivation of palmyras. The other group of emigrànts esteemed a lower division of the Caste came by sea from ceylon to the south of Travancore whence according to Caldwell they gradually spread into Tinneyelly on invitation from the Nadans to serve as climbers in the immense palmyra forests

Manadu the desolate land of the Teris seems more probably as their place of origin as well as the region of their greatest concentration. Here among the palmyars with which the Community has been traditionally associated with are the family temple sites of the ancestral village of the Nadars. Even as the Nadars have left their home – land in migration into southern Travancore into northern Trinnevelly and rammad however tenuous their links with the land of their origin may have become the family -deity has bound them ultimately to the ancestral land of south - eastern Tinnevelly [Robert L. Hardgrave Jr. - Nadras of South India, Page191.)
இராபர்ட் L. ஹார்டுகிரேவ் மேலும் கூறுவதாவது: நாடன் வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுபான்மையினர் தாம்பிரபரணி ஆற்றுக்குத் தெற்கே பெரிய நிலப்பரப்புகளுக்குச் சொந்தக்காரராயிருந்தனர். இந்த நிலப்பிரபுக்கள் பாளையப்பட்டுகளின் கீழ் இருந்த் சிறுநிலக்கிழார் போன்றோ அல்லது திருச்செந்தூர்ப்குதியில் நாயக்கமன்னர் நேரடிப் பார்வையில் இருந்த நிலக்கிழார் போன்றோ, நாயக்கமன்னர் அல்லது அனேகமாய் அவருக்கு முன்னே இருந்த பாண்டியரிடமிருந்தோ வரிவசூல் செய்யும் அதிகாரம் பெற்றிருந்தனர். ஒரு பழங்குறிப்பு பாண்டியர் தேரிக்காட்டில் உள்ள நாடன்களில் ஏழுநபர்களை வரிவசூல் செய்ய நியமித்ததாகக் கூறும். இன்னொரு குறிப்பு கி.பி. 1609 - ல் பதினொரு நாடன்கள் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டதாகக் கூறும். அதிலிருந்து இவர்கள் வழிவந்தோர், அந்நிலப்பகுதியில் இருந்த குடிகளிடம் வழி வழியாய் வரிவசூல் செய்து வந்ததால், அப்பகுதிவாழ் குடிகள் மீது இவர்கள் குற்ற இயல் இல்லாத சமூக வாழ்க்கை சம்பந்தமான அதிகாரம் செலுத்தி வந்தனர்.
Robert L. Hardgravejr. says: "A small portion of the community of the Nadans possesed vast tracts of land in regions south of Tambaraparni river. Invested as the tax gatherers by the Nayaks and probably by the Pandyas before them, these Nadans or lords of the lands held their position either directly under the Nayaks as in the region of Trichendur or as petty lords under the Poligars. One account speaks of the appointment by the Pandyas of seven collectors from the Nadan Community in the teri region. Another records the appointment in 1609 of Eleven Nadans to collect taxes from the people. As hereditary tax collectors the Nadans held civil authority over the lands in their control. (Robert L. Hardgraver Jr. Nadars of South India. Page.29) "

ஏற்கனவே கூறியது போன்று, இவர் ஆரம்பகாலத்தில் பனைஏறி, மரமேறி என்றே ஊர்ப்புறங்களில் வழங்கினர். தமிழ் வேந்தர் சங்க காலத்தில் நீர் நாடன், புனல் நாடன், காவிரி நாடன், கானக நாடன் எனவும், இடைக் காலத்தில் குறுநிலத் தலைவர்கள் நாடாள்வான் என வழங்கியதை மனதிற்கொண்டு, தங்களது சாதிப் பெயராகிய சாணார் (சாண் + நார் = சாணார், சாண்நார் உதவியால் மரமேறுதல்) என்பதை இம்மரபினருள் உயிர் வகுப்பு எனக் கூறிக்கொண்டு வசதிபடைத்த ஒரு சாரார் முதன் முதலாக நாடன் என்ற பட்டம் தரிக்க முற்பட்டனர். அவரைப் பின்பற்றிக் கிறித்துவ மறையில் சேர்ந்தவரும் வணிகத்தில் முன்னேறியவரும் நாடன், நாடான் என்ற பட்டத்தைத் தரிக்கலாயினர்.
1921 - ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு எடுப்பின்போது, தமது குலப்பெயரை சாணார் என்பதற்குப் பதிலாக, நாடார் என்று பதியும்படி அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆட்சியாளர் மக்கள் விரும்பும் சாதிப் பெயரைப் பதியலாம் என ஆணை பிறப்பித்ததாகத் தெரிகிறது. ஆக 1921 – லிருந்து தான் நாடான் என்பது சாதிப்பெயராக வழக்கில் வந்தது எனலாம்.
W. பிரான்சிஸ் இன்றைய வழக்கில் உள்ள சாதிப் பெயர்களும், குலப்பட்டங்களும் சமீப காலத்திலே தோன்றின எனவும், அவற்றிலிருந்து அவைகளைத் தரித்திருக்கும் மக்கள் மரபு எது? என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதென்றும் கூறுவர். (W. Francis census of India. 1901 Vol. XV. Part I Report. Page 78) எட்கர் தர்ஸ்டன் W. பிரான்சிஸ் கருத்தை இன்னும் சற்று விரிவாக விளக்குவாராவர். பிராமணர் ஏற்கனவே பிள்ளை, முதலி என்ற பட்டங்களைத் தரித்திருந்தனர். ஆனால் இவற்றை இன்று சூத்திரர் தரித்து வருகின்றனர். நாயக் மன்னர் தந்தை என்னும் பொருள்பட அய்யன் என்ற பட்டம் தரித்திருந்தனர். ஆனால் அதை இப்போது சிவப்பிராமணர் குலப்பட்டமாகப் பூண்டு வருகின்றனர்.
Edgar Thurston Says: 'Caste titles and names are however of recent origin and little can be inferred from them whatever their mëaning may be shown to be Brahmins for example appear to have borne the title of Pillai, Mudali which are now used by the Sudras and the Nayak Kings on the other hand called themselves as Ayyan (Father) which is now extensively the title of Saivite Brahmins. To this day the cultivating Vellalas, weaving Kaikolas and semi - civilized wild tribes of the Jatapur use equally the title of Mudali'. [Edgar Thurston castes and Tribes of South India, Vol. VIII Page 179.]
தமிழகத்திலுள்ள எல்லா வகுப்பினருடைய குலப்பட்டங்களைப் பற்றி ஆராயின் விரிவடையும் என்பதால் தேவேந்திரகுலத்தார் குலப்பட்டங்களை மட்டும் ஈண்டு விரிவாய் ஆராய்வோம். மள்ளர் - பள்ளர் மருதநில மக்கள் என்பதால் தாங்கள் வேந்தன் குலம் என்னும் பொருள்பட இந்திரகுலம், புரந்தரன் குலம், தேவேந்திரகுலம் என உரிமை பாராட்டிவருவதாக ஏற்கனவே கண்டோம். நெல்லை செங்கோட்டைப் பகுதிவாழ் இம்மரபின் பாண்டியன் என்ற குலப்பட்டம் பூண்டு வருகின்றனர். இது தவிரப் பாண்டிய நாட்டின் இதரப்பகுதியில் உள்ள பெரும்பாலான இம்மரபினர் குடும்பன் என்ற குலப்பட்டமும், ஒரு சிறுபான்மையினர் காலாடி என்ற பட்டமும், பூண்டு வருகின்றனர். பண்டையச் சேரநாடாகிய கொங்கு நாட்டின் ஒரு பகுதியில் இம்மரபினர் குடும்பன் என்ற பட்டத்தைக் கொண்டுள்ளனர். கொங்கு நாட்டின் மற்றப் பகுதிகளில் பண்ணாடி, மண்ணாடி, பலகன் என்ற பட்டங்களைத் தரித்துவருகின்றனர். சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலாடி என்ற பட்டம் தரித்து வரக் காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பன் என்ற பட்டம்தரித்து வருப்வதும் உண்டு சோழ நாட்டின் மற்றப் பகுதிகளில் உள்ளவர் மூப்பன் பணிக்கண், வாய்க்காரன் என்ற குலப்பட்டங்களையுடையவராய் உள்ளனர். இக்குலப்பட்டங்கள் உணர்த்தும் பொருள் பற்றியும், அவை எவ்வாறு வழக்கில் வந்தன என்பது பற்றியும் பார்ப்போம்.
(தொடரும்)

9 comments:

  1. சாணார்கள்(நாடார்கள்) இலங்கையிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது அங்கிருந்து பனங்கொட்டைகளை கொண்டுவந்தனர் தமிழகம் முழுவதும் விதைத்தனர். அதற்க்கு முன் இந்தியாவில் பனைகள் கிடையாது. இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் நாடார்கள், என்று அறிவுகெட்ட ஆங்கிலேயன் கால்டுவெல் கூறுவதை நம்பும் அடிமுட்டாள்களே..
    மேலும்
    அதை மேற்கோள்காட்டி எதிர்த்தது போல் ரசித்து பேசிய ஆர்ய அகதியே
    இதை முழுவதும் படியுங்கள்.
    பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
    பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம் இயற்றினார்களா?
    அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
    “அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”
    “வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
    பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
    (நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)
    “பானிற வுருவிற் பனைக்கொடியோனும்” - (புறநானூறு 33-2,3)
    பனை பற்றிய வேறுசில பாடல்கள்.
    “பனைநுகுப் பன்ன சினைமுதிர் வராலோடு” –புறநானூறு 148-5
    (வரால் மீனுக்கு பனம்பாளை உவமையாகக் கூறப்பட்டது)
    “பனைத்திர ளன்ன” – அகநானூறு 148-1
    “முழாவரைப் போத்தை” –புற 85-7.357-4.
    (முழவைப் போன்று பெருத்த அடியை உடைய பனைமரம்)
    “ஆடிய லழற்குட்டத்
    தாரிரு ளறையிரவில்
    முடப்பனையத்து வேர்முதலாக்..” – புற 288- 1,2,3
    (இரவில் தோன்றும் அனுடத்தின் ஆறு நட்சத்திரங்களும் பனை போன்று தெரிவதால் அனுடத்திற்கு முடப்பனை என்று பெயர்)
    “பனைத்தலைக் கருக்கு நெடுமடல் குருத்தொடு மாயக்
    கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
    கணங்கொள் சிமைய வணங்குங் கானல்” –குறுந்தொகை 372-1,2,3
    (பனையின் உச்சியிலுள்ள கருக்குடைய நீண்ட மடல்களை,காற்றினால் வீசப்படும் மணல் மறைக்கும். அத்தகைய மணல்மேடுகலை உடைய கடற்கரையில்..)
    இவ்வளவு ஏன்? இராமபிரான் பரிசாக பெற்ற பனைமரம் தெரியுமா?
    இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன
    ஏழு பனை மரங்கள்" என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இராமன் ஒரே அம்பில் ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.
    கோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆராய்ச்சிப் புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta) ராமபிரான்
    ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில் இருப்பதாக அவர் எழுதி இருந்தார். அதுவே இப்போது நீங்கள் பார்க்கும் புகைப்படம்.
    ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம் அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.
    அடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட என்றும் தால என்றும் எழுதப்படும்.
    இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம்..
    மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் (பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர்) அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம்.
    இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை.
    சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை.
    இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனை....ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது.

    ReplyDelete
  2. நீங்கள் தான் மூவேந்தர் என்று கூறுகிறீர்கள் ..... விருந்தாளியர் என்ற பட்டம் உங்களுக்கு இருப்பதை மறந்து விட்டு பேசுகிறீர்களா ..விருந்தாளியர் என்பதற்கு என்ன அர்த்தம் என்று உன் முன்னோரிடம் போய் கேள் ... நீங்கள் யாருக்கு பிறந்த்தீர்கள் என்பது புரியும் ..

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பட்டத்தைப் பற்றி விளக்குங்கள் ப்ரோ.

      Delete
  3. அருமை அருமை அருமையா விளக்கி சொன்னீர்கள் சான்றோரை மண்ணின் பூர்வக்குடி

    ReplyDelete
  4. VILLAVAR-MEENAVAR AND BANA-MEENA

    VILLAVAR are ancient Kshatriya's of India. The three kingdoms founded by Villavars are Chera Chola, Pandyan kingdoms.

    Villavar aristocracy was called Nadalvar or Nadar.
    Santar Chanar Chandar were the aristocrats and Tax collectors. Panickars trained armies.

    Villavars subgroups were Villavar, Vanavar and Malayar .
    Cheras were supported by Villavar, Malayar and Vanavar.
    Cholas were supported by Vanavar, Villavar and Malayar.
    Pandyas were supported by Villavar, Malayar, Meenavar and Vanavar.
    Ancient Pandya's are often named after the Villavar subgroups. For eg. Sarangadwaja Pandyan from Villavar subclass, Malayadwaja Pandyan from Malayar subclass.

    In Tamilnadu and Kerala they are called Villavar while in Karnataka Andhra they are callled BANAS BHILLAVAS and Northern India they are called Banas or Bhils.

    Villavars seagoing ancient cousins were called MEENAVAR in Tamilnadu. Later MEENAVAR merged with Villavars.

    Villavars and Banas both used Pandya title and Kulasekhara title.
    Villavar aristocrats used Nadalvar title.
    Karnataka Banas (Alupas Kadamba Kingdom Nurumbada Pandya's Uchangi Pandya and Santalige) aristocrats used Nadava, Nadavaru or Nadavara title. Goa Banas used Nador title.

    Santara Pandyas of Karkala who ruled from Pandyanagari were originally from Santalige in Banavasi.
    Santar, Chanar Sannar Chandar Chanda are variants of Santar.

    Meenavar in the northern India are called MEENAS. Meenas are mixed with Bhils forming BHIL MEENAS. Meena kingdoms were called Matsya Kingdom in prehistory. Meenas ruled Rajasthan until 1037 AD.

    MEENAS OF AMBER(Amrapura)
    MEENAS ruled Rajasthan until the rise of Rajputs.
    CHANDA MEENA was the title of Bhil-Meena kings.
    Amer city (Modern Jaipur) was built by King AALAN SINGH CHANDA MEENA who ruled over Khoh Nagoriyan kingdom. Later days Chanda's and Chauhans who ruled over Delhi were closely related. Prithivi raj Chauhan's son was married to Aalan Singh Chanda's daughter.Rajputs themselves thus have some Bana Meena blood. When Rajputs kings were crowned there was a ritual in which the forehead of the future king was smeared with blood drawn from the thumb of a BHIL. It indicates earlier Bhils had been the original kings of Northern India

    Originally Chanda were considered a sub group of Chauhans a title of Banas. Chauhans later joined the Rajputs.

    By 1037 AD Amber kingdom of Chanda rulers was conquered by Kachwaha Rajputs ending Meena Chanda rule.

    Banas were the original Kshatriya's of North while
    Villavars were the Dravida Kshatriya's of the south,
    Both considered Mahabali as ancestor.

    FOREIGN INVADERS
    The factors leading to the decline of Bana's in the North is repeated invasions of foreign tribes such as Scythians (Saka), Parthians Kushanas and Huns merged with indigenous Banas and others to form a new rulers called Rajputs. Hepthalite or white Huns were closely related to early Turks. None of these invaders went back. They came with Hellenistic, Persian religion or Buddhism. But soon they got converted to Hinduism.The Brahmins joined the new invaders and became their priests.

    This led to the decline of Original rulers of North India the Bana, Meena Bhils who could be of Dravidian stock. This also led to the decline of Indo-Aryan tribes such as Yadhava Ikshavaku, Kushwaha, Maurya and Sakhya etc. Ikshavaku migrated to south India to form Andhra Ikshavaku and Western Ganga kingdoms.
    Nagas who had been allies of Indo-Aryans continued migrating to south India.

    DECLINE
    In the South India The Banapperumal-Nair invasion of Kerala in 1120 Ad, Colonization of Kerala by Arabs, Delhi invasion of Pandyan Kingdom,
    Vijayanagara Naickers attack in 1377 and dominance of European colonial rulers from 1498 all contribute to the decline of Villavars.

    ReplyDelete
  5. துளு படையெடுப்பு

    கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசரின் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

    நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.


    துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலாத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலாத்திரி வம்சத்தை நிறுவினார்.

    இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது. கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.


    கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
    அவை

    1. கண்ணூரின் கோலாத்திரி வம்சம்
    2. கோழிக்கோடு சாமுதிரி வம்சம்
    3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
    4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்



    தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

    துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

    கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

    1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்டா வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

    நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.



    ReplyDelete
  6. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  7. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete